டிகிரி முடிச்சிருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை.. 323 பணியிடங்கள்.. அழைப்பு உங்களுக்கு தான்!
சென்னை: EPFO எனப்படும் மத்திய அரசின் தொழிலாலர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காலியாகவுள்ள 323 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காலியாக உள்ள 323 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்காலம். வயது வரம்பு என்ன? உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: நேர்முக உதவியாளர் என்ற பணியில் மொத்தம் 320 பேர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடத்திற்கான கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். தட்டச்சு தெரிந்து இருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது தமிழில் ஒரு நிமிடத்தில் 120 வார்த்தைகள் அடிக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 18 - வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினர் 18 முதல் 33 வயது வரையும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் 18 முதல் 35வயது வரையும் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். புதுவையிலும் தேர்வு நடைபெறும்.
தேர்வு கட்டணம்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலம். விண்ணப்ப கட்டணமாக ரூ. 25 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 27. 03. 2024 கடைசி நாள் ஆகும். எழுத்து தேர்வு வரும் 07. 07. 2024 நடைபெறும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://upsc.gov.in/sites/default/files/AdvtNo-51-2024-Spcl-PrsnAsst-engl-070324.pdf என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications