Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Village Assistant Job: கிராம உதவியாளர் வேலை.. சொந்த கிராமத்தில் அரசு வேலை! மறுபடியும் வந்த சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த ஊரில் வேலை பார்க்க வேண்டும் என பலருக்கும் ஆசை இருக்கும். அதிலும் சொந்த கிராமம், அரசு வேலை என்றால் விடுவார்களா?.. ஆம் அந்த கனவை மெய்யாக்குவதற்கான வாய்ப்பாக கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்ற விவரங்களை பார்க்கலாம்.

தமிழக அரசு வருவாய்துறையின் கீழ் வரும் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்படு இருந்தது. இதன்படி மாவட்ட வாரியாக கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பணிகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டது.
மீண்டும் நிரப்பப்படுகிறது

Village Assistant Job job chennai employment

விண்ணப்பங்கள் பெறப்பட்டு எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவை கூட நடைபெற்ற நிலையில், வயது உச்ச வரம்பு தளர்த்தப்பட்டதால் இந்த பணிகள் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டன. அதன்பிற்கு உயர்த்தப்பட்ட வயது வரம்புடன் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு கிராம உதவியாளர் பணியிடங்களை மீண்டும் நிரப்பும் பணிகள் பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரையில், 155 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

மதுரையில் தாலுகா வாரியாக காலியிடங்கள்:

* திருப்பரங்குன்றம் தாலுகா - 06
* பேரையூர் தாலுகா - 28
* மதுரை மேற்கு தாலுகா - 11,
* வாடிப்பட்டி - 13,
* உசிலம்பட்டி - 08,
* திருமங்கலம் - 07,
* மதுரை தெற்கு தாலுகா - 07,
* மதுரை வடக்கு தாலுகா -15,
* மேலூர் - 23,
* கல்லிக்குடி - 02,
* மதுரை கிழக்கு - 35,

தூத்துக்குடியில் காலியிடங்கள்:

* ஏரல் - 02,
* எட்டயபுரம் - 10,
* கயத்தாறு தாலுகா - 21,
* கோவில்பட்டி - 07,
* ஓட்டப்பிடாரம் தாலுகா - 05,
* சாத்தான்குளம் - 08,
* ஸ்ரீவைகுண்டம் - 04,
* திருச்செந்தூர் - 07,
* விளாத்திகுளம் - 13

கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். இதனை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரிகளிடம் இருந்து இருப்பிட சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டியது அவசியம்,.

வயது வரம்பு:

பொது பிரிவினர்: 21 முதல் 32 வயது வரை
பிசி/எம்பிசி/பிசிஎம்: 21 முதல் 39 வயது வரை
எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி: 21 முதல் 42 வயது வரை
PWD - 21 முதல் 42 வயது வரை

சம்பளம் எவ்வளவு

சிறப்பு காலமுறை ஊதியம் லெவல் 06-படி மாதம் ரூ.11,100 - 35,100 வரை வழங்கப்படும். தேர்வு முறையை பார்த்தோம் என்றால் எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு மாவட்டங்களில் உள்ள பணியிடங்களுக்குமே விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025 ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட இணையதளத்தில் சென்று டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் வழியாகவோ கொடுக்கலாம். ஏற்கனவே முந்தைய அறிவிப்பின் போது விண்ணப்பித்து எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு சென்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

தூத்துகுடி மாவட்ட அறிவிப்பினை படிக்க:

https://thoothukudi.nic.in/notice_category/recruitment/

மதுரை மாவட்ட அறிவிப்பினை படிக்க:

https://madurai.nic.in/notice_category/recruitment/

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+