சென்னை ஊர்க்காவல் படையில் சேர விருப்பமா? 10 ஆம் வகுப்பு போதும்! உடனே விண்ணப்பிங்க
சென்னை: சென்னை பெருநகர் ஊர்க்காவல்படையில் வேலைபார்க்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுநலத்தொண்டில் ஈடுபாடு கொண்டு சேவை செய்ய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
ஊர்க்காவல் படை என்பது, காவல் துறைக்கு துணையாக செயல்படும் தன்னார்வப் படையாகும். நாடு முழுவதும் ஊர்க்காவல் படை முறை செயல்பாட்டில் உள்ளது. அந்த வகையில், தற்போது சென்னை பெருநகர ஊர்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாநகராட்சி காவல் ஆணையகரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுள்ள இளமையும், ஊக்கமும் அர்ப்பணிப்பு பண்பும், பொதுநலத்தொண்டில் ஈடுபாடு கொண்டு சேவை செய்ய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
1. குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
2. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
3. 01.10.2025 அன்று 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாகவும் 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு
தேர்ச்சி செய்யப்படும் ஊர்க்காவல்படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவர். இரவு ரோந்து பணி பகல் ரோந்து பணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560/-ம் சிறப்பு படியாக வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் இலவசமாக பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30.11.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.
முகவரி:
சென்னை பெருநகர ஊர்க்காவல்படை அலுவலகம்,
சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம்,
சைதாப்பேட்டை, சென்னை-15
செல்போன் எண்: 9566776222, 74186 81700 என்று கூறப்பட்டுள்ளது.
-
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி!












Click it and Unblock the Notifications