கைநிறைய சம்பளம்.. மத்திய நீர்வளத்துறை நிறுவனத்தில் ஏராளமான காலியிடம்.. விண்ணப்பிக்க சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாட்டர் அண்ட் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் மாத சம்பளம் ரூ.30 ஆயிரத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் ஜல்சக்தி (நீர்வளம்) துறையின் கட்டுப்பாட்டில் WAPCOS லிமிடெட் எனும் வாட்டர் அண்ட் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட்(Water And Power Consultancy Services Limited) செயல்பட்டு வருகிறது. இது பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

நீர்வளம் மற்றும் மின்சாரம் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஆலோசனைகள் மற்றும் சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

 காலியிடங்கள் எவ்வளவு:

காலியிடங்கள் எவ்வளவு:

வாட்டர் அண்ட் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் சார்பில் தற்போது Field Engineer மற்றும் Field Supervisor என 2 பிரிவுகளில் மொத்தம் 82 பணியிடங்கள் நிரப்பபப்ட உள்ளன. இதில் Field Engineer பிரிவில் 18 பணியிடங்களும், Field Supervisor பணியிடங்களுக்கு 64 பணியிடங்களும் நிரப்பப்ட உள்ளது.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

Field Engineer பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் பிஇ/ பிடெக் பிரிவில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரீங் படிப்பை முடித்திருக்க வேண்டும். Field Supervisor பணிக்கு டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் முன்அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

 மாத சம்பளம் எவ்வளவு?

மாத சம்பளம் எவ்வளவு?

Field Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25 ஆயிரம் ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படும். அதேபோல் Field Supervisor பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

விண்ணப்பம் செய்ய விரும்புவர்கள் அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி உள்பட பிற பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக விண்ணப்பம் செய்யும்போது பணி தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று சுயவிபரம் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 16ம் தேதிக்குள் ஆப்லைன் முறையில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். சுயவிபரம் மற்றும் சான்றுகளுடன் தபாலில் Head (HR), WAPCOS Limited, Plot No. 76-C, Institutional Area, Sector-18 Gurugram Haryana என்ற முகவரிக்கு டிசம்பர் 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இந்த 2 பணிகளும் முழுவதும் தற்காலிக பணி என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய கட்டணம் எதுவும் கிடையாது. மேலும் விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+