மத்திய அரசு பணி வேண்டுமா? ரயில்வேயில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு! வெளியான மேஜர் அறிவிப்பு
சென்னை: மேற்கு மத்திய ரயில்வேயில் உதவி லோகோ பைலட், டெக்னீசியன் கிரேட் III, ஜூனியர் என்ஜினீயர், ட்ரெயின் மேனேஜர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 424 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தியாவில் ஏழை, நடுத்தர மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய ரயிலை தான் தேர்வு செய்கின்றனர். குறைந்த கட்டணம், நல்ல வசதி உள்ளிட்டவற்றால் ரயில்வே துறைக்கு என்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தான் இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக ரயில்வே துறை உள்ளது.

ரயில்வே துறை நிர்வாக காரணங்களுக்காக தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 மண்டலங்கள் உள்ளன. இதில் ஒன்று தான் மேற்கு மத்திய ரயில்வே மண்டலம். இது மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் மேற்கு மத்திய ரயில்வேயில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மேற்கு மத்திய ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கு 279 பேர், டெக்னீசியன் III பணிக்கு 81 பேர், ஜூனியர் என்ஜினீயர் பரிவுக்கு 38 பேர், Train Guard/Train Manager பணிக்கு 26 பேர் என மொத்தம் 424 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பம் செய்வோர் பொதுப்பிரிவினராக இருந்தால் 18 வயது முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினராக இருந்தால் 18 வயது முதல் 45 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 18 வயது முதல் 47 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.01.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேட் III பணிக்கு ரூ.19,900, ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு ரூ.35,400, டிரெய்ன் மேனேஜர் பணிக்கு ரூ.29,200 முதல் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 10, 12, ஐடிஐயில் வெவ்வேறு படிப்புகள், டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர்கள், டிகிரி படித்திருப்பதோடு மேற்கு மத்திய ரயில்வேயில் ரெகுலர் எம்பிளாயாக இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதிக்குள் www.rrcmas.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் Computer Based Test, Aptitude Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications