வருகிறது 8வது ஊதியக்குழு.. புதிய ஊதியத்தின் அடிப்படையில் ஊழியர்களின் பென்சன் எவ்வளவு? வெளியான தகவல்
சென்னை: தேசிய ஓய்வூதிய முறைக்கு (NPS) மாற்றாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. மிக நீண்ட காலமாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் கோரி வந்த நிலையில் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. 2004 இல் அறிமுகப்படுத்தப்பட்ட NPSக்குப் பதிலாக, இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. ஏப்ரல் 1, 2025 முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
பழைய பென்ஷன் திட்டமான ஓபிஎஸ் போலவே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (யுபிஎஸ்) உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்கப்படும். பணி ஓய்வுக்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். தவிர, தனிநபர் 10 வருட சேவையை நிறைவு செய்யும் பட்சத்தில், ஓய்வு பெறுபவருக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் ஓய்வூதியம் இருப்பதை யுபிஎஸ் உறுதி செய்யும். ஓய்வூதியம் பெறுபவர் மரணம் அடைந்த, அவரது மனைவி நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியத்தில் 60% பெறுவார்.

யுபிஎஸ்-ன் கீழ் முழு ஓய்வூதியம் பெறுவதற்கு, ஒருவர் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையில் இருக்க வேண்டும். ஒரு ஊழியர் 25 ஆண்டுகளுக்கும் குறைவாக பணியாற்றினால், அவர் பாதி ஓய்வூதியத்தைப் பெறுவர்.
8வது ஊதியக் குழுவிற்குப் பிறகு குறைந்தபட்ச UPS ஓய்வூதியம் என்னவாக இருக்கும்?
7வது ஊதியக் குழுவின் கீழ், அரசு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 (அடிப்படை+டிஏ) என்பதால் தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. இருப்பினும், அரசு ஊழியர்களின் இந்த அடிப்படை சம்பளம் 8வது ஊதியக்குழு அமலுக்கு பிறகு பெரிய அளவில் மாறும். இந்த 8வது ஊதியக்குழு 2026ல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8வது ஊதியக் குழுவின் கீழ் ஃபிட்மென்ட் காரணி 1.92 யை அடிப்படையாக சம்பளம் திருத்தப்படும். ஃபிட்மென்ட் காரணி என்பது ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய அதிகரிப்பு ஆகியவற்றின் அளவைப் பற்றி முடிவெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய காரணம்ஆகும். இந்த ஃபிட்மென்ட் காரணியின் அடிப்படையில், அரசு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.34,560 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.
குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.34,560 என்று கருதினால், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (யுபிஎஸ்) தொடக்க ஓய்வூதியம் ரூ.17,280 ஆக வருகிறது. எனவே அரசுப் பணியில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் நிறைவு செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,280 ஓய்வூதியம் கிடைக்கும். மேலும், கடந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிடப்படும். எனவே DA இணைப்பு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், ஓய்வூதியத் தொகை அதற்கேற்ப மாற்றப்படும்.
எடுத்துக்காட்டு: ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த பென்சன் திட்டத்திற்கு கீழ் பென்சன் மட்டுமன்றி அகவிலைப்படியும் சேர்ந்து வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு: இப்போது ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் 50 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பென்ஷனாக வழங்கப்படும். ஆனால் அது மட்டுமல்ல.. கூடுதலாக.. பென்சனுடன் கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்படும். அதாவது தற்போது உள்ள 50% அகவிலைப்படி என்பது அடிப்படை ஊதியத்தில் பாதி ஆகும். அதாவது 25 ஆயிரம்.
எனவே மொத்தமாக 50 ஆயிரம் ரூபாய் மொத்தமாக அரசு ஊழியருக்கு பென்ஷனாக வழங்கப்படும். இதை அடிப்படையாக வைத்து மற்ற வருமானத்திற்கு கணக்கிடலாம்.












Click it and Unblock the Notifications