2026 குரூப் 2, குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாறுகிறதா? தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி கொடுத்த அப்டேட்
சென்னை: டிஎன்பிஎஸ்சி 2026 ஆண்டுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் முன்னதாகவே தயார் ஆவதற்கு வசதியாக இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கும் நிலையில், பாடத்திட்டம் மாற்றப்படுகின்றதாக தகவல்கள் பரவி வருகின்றன. குரூப் 2, குரூப் 4 பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளது என தகவல் பரவி வரும் நிலையில் இது குறித்து டிஎன்பிஎன்சி விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கால அட்டவணை வெளியிட்டு புதிய பணியிடங்களை நிரப்பி வருகிறது.

டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணை,
குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சியால் நிரப்பப்படும். தமிழகத்தில் அரசு பணிகளுக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள், தேர்வு அறிவிப்பினை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அரசு பணிகளைப் பொறுத்தவரை பணி பாதுகாப்பு, கை நிறைய சம்பளம், சலுகைகள், சமூகத்தில் கவுரவம் என பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.
இதனால், அரசு பணி என்பது தேர்வர்களுக்கு பெரும் கனவாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் குரூப் தேர்வுகளை பல லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதுகிறார்கள். டிஎன்பிஎஸ்சியைப் பொறுத்தவரை தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய தேர்வு கால அட்டவணையை வெளியிடுவது வழக்கம்.
குரூப் 1 தேர்வு
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,
* ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல் இல்லை) - அறிவிக்கை வெளியாகும் நாள்: 20.05.2026, தேர்வு நடைபெறும் நாள்: 03.08.2026
* ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (தொகுதி I பணிகள்) - அறிவிக்கை வெளியிடப்படும் நாள்: 23.06.2026, தேர்வு நடைபெறும் நாள்: 06.09.2026
குரூப் 2, குரூப் 4 தேர்வு
* ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி தரம்) - அறிவிக்கை வெளியிடப்படும் நாள்: 07.07.2026, தேர்வு நடைபெறும் நாள்: 20.09.2026
* ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) - தேர்வு அறிவிக்கை நாள்: 11.08.2026, தேர்வு நடைபெறும் நாள்: 25.10.2026
* ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) - தேர்வு அறிவிக்கை நாள்: 31.08.2026, தேர்வு நடைபெறும் நாள்: 14.11.2026
* ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி IV பணிகள்) - தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் நாள்: 06.10.2026, தேர்வு நடைபெறும் நாள்: 20.12.2026 என தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது.
பெரிய இடைவெளி இருப்பதால் ஆதங்கம்
அடுத்த ஆண்டில் அனைத்து தேர்வுகளுமே சட்டமன்ற தேர்தலுக்கு பிறகே நடைபெறும் வகையில் டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியிட்டுள்ளது. இதனால் தேர்வர்களுக்கு படிக்க நன்றாக கால அவகாசம் இருப்பதாக சில தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். சில தேர்வர்களோ பெரிய இடைவெளி இருப்பதாக ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக புதிதாக படிப்பவர்களுக்கும் இதுவரை சரியாக படிக்காமல் தேர்வு எழுதி வந்தவர்களும் இந்த ஒரு ஆண்டு கால அவகாசத்தில் படித்தால் எளிதாக தேர்ச்சி பெற்று அரசு வேலை என்ற கனவை நனவாக்க முடியும் என்பதால் உற்சாகத்துடன் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.
பாடத்திட்டம் மீண்டும் மாற்றப்படாது
இத்தகைய சூழலில்தான், குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்த சூழலில்தான் இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி கூறியிருப்பதாவது:-
2026-ல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி I, II, IIA மற்றும் IV பணிகளுக்கான தேர்வுகள், டிசம்பர் 2024-ல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும். பாடத்திட்டம் மீண்டும் மாற்றப்படும் என வலைத்தளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications