ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் சம்பளம்.. பணி அனுபவம் இல்லாதவர்களை அழைக்கும் Wipro.. செம சான்ஸ்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதுடன் கிடைக்கும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாளாகும்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies) இருந்து அடுத்தடுத்து காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது விப்ரோ நிறுவனத்தில் இருந்து Elite Exclusive என்ற பெயரில் புராஜெக்ட் இன்ஜினியர் (Project Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியை விரும்புவோர் 2025ம் ஆண்டில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் முடித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் படிப்பை பொறுத்தவரை 60 சதவீதம் அல்லது CGPA 6.0 என்ற அளவு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு அரியர் இருந்து இருக்கலாம். அதனையும் 8 வது செமஸ்டரில் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் 60 சதவீத அல்லது அதற்கு அதிக மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளிக்கு செல்லாமல் Open School அல்லது Distance Education என்பது 10, பிளஸ் 2-வுக்கு மட்டுமே பொருந்தும். கல்லூரி படிப்புக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் கிடைக்கும். அதன்படி பார்த்தால் மாதம் ரூ.29,166 சம்பளமாக கிடைக்கும். இருப்பினும் இந்த பணிக்கு 12 மாத Service Agreement என்பது உள்ளது. இதனை மீறி 12 மாதத்துக்குள் பணியில் இருந்து விலகினால் விப்ரோவுக்கு ரூ.75 ஆயிரம் கொடுக்க வேண்டி இருக்கும்.
இந்த பணிக்கு ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது 3 வகைகளில் நடக்கும். முதல் ரவுண்ட்டில் ஆன்லைன் அசஸ்மெண்ட் என்பது 128 நிமிடங்கள் வரை நடக்கும். இதில் Aptitude Test, Written Communication Test, Online Programming Test இருக்கும். இதில் Coding Test-ல் விண்ணப்பதாரர்கள் Java, C, C++ அல்லது பைத்தான் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
2வது ரவுண்ட் என்பது Business Discussion, 3வது ரவுண்ட் என்பது HR Discussion என்ற முறையில் இருக்கும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய மார்ச் மாதம் 15ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் கடந்த 3 மாதத்தில் விப்ரோவில் எந்த இண்டர்வியூம் அட்டெர்ன் செய்திருக்க கூடாது. அப்படி அட்டன் செய்யாதவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். இது ஒரு PAN INDIA வேலையாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னை, கோவை, பெங்களூரில் கூட பணி வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications