வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.. ஆண்டுக்கு ரூ.8.4 லட்சம் வரை சம்பளம்! அழைக்கும் மைக்ரோசாஃப்ட்
சென்னை: பிரபலமான மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.8.4 லட்சம் சம்பளத்தில் சாப்ட்வேர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர், ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் வீட்டில் இருந்தே வேலை செய்யவும் இந்த நிறுவனம் வாய்ப்பு வழங்குகிறது.
முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் மைக்ரோசாஃப்ட்டும் (Microsoft) ஒன்று. இந்த நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் என்ஜினீயர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் என்ஜினீயர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளங்கலை அல்லது முதுகலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு 2019, 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மேலும் ஒன்று முதல் 3 ஆண்டு வரை சி#, சி அல்லது சி++, Rust, go உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் கோடிங் அனுபவம் வைத்திருக்க வேண்டும். லினக்ஸ் ஆபரேஷன் சிஸ்டம்ஸ், Kubernetes Cluster Orchestration-ல் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதை அறிவிப்பின்படி எத்தனை பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் முடிந்த வரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்தது.
பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் ஆண்டு சம்பளமாக அதிகபட்சமாக ரூ.8.4 லட்சம் வரை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வாகும் நபர்களின் சம்பளம் என்பது மாறுபடும்.
மேலும் பணிக்கு செலக்ட் ஆகும் நபர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ், படிப்புக்கான தவி, கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிந்தைய கால விடுமுறை உள்ளிட்ட பிற சலுகைகள் வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Microsoft இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர், ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் பணியமர்த்தப்படுவார்கள். அதோடு ‛வொர்க் ப்ரம் ஹோம்' முறையில் வீட்டில் இருந்தே வேலை செய்யவும் மைக்ரோசாப்ஃட் சார்பில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பெங்களூர் பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
ஹைதராபாத் பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
நொய்டா பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications