ஆஃபீஸ் போகாமல் வீட்டில் இருந்தே வேலை.. மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் அசத்தல் ஆஃபர்! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாப்ட். அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்துக்கு நம் நாட்டிலும் கிளைகள் உள்ளன.

இந்நிலையில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இல்லாவிட்டால் கோடிங் லேங்குவேஜில் பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதாவது சி, சி++, சி#, ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பைத்தான் மட்டுமின்றி பிறவற்றையும் தெரிந்து பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.இதுதவிர விண்ணப்பம் செய்வோருக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான Fundamentals தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி மாதம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். சம்பளம் பற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம். இந்த அறிவிப்பானது கேரளாவை மையப்படுத்தி வெளியாகி உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Microsoft இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ‛வொர்க் ப்ரம் ஹோம்’ முறையில் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications