அரிய வாய்ப்பு.. 8ம் வகுப்பு தகுதிக்கு நீதிமன்றங்களில் 3,557 பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 3,557 பணியிடங்களுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த அரிய வாய்பை பயன்படுத்தி 06.06.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் முழுவதும் அலுவலக உதவியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, இரவுக் காவலர், மசால்ஜி, நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், தூய்மைப் பணியாளர், ஆகிய பணியிடங்களுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..
ஒவ்வொரு பணியாக எவ்ளவு காலியிடங்கள் உள்ளன. என்பதை இப்போது பார்ப்போம். அலுவலக உதவியாளர் பணியில் 1911 காலியிடங்கள் உள்ளது அதற்கு அடுத்தபடியாக தூய்மை பணியாளர் பணிக்கு 110 காலி பணியிடங்கள் உள்ளன. காவலாளி பணிக்கு 496 பணியிடங்கள் உள்ளன. நகல் பிரிவு அலுவலர் பணிண்கு 3 இடங்களும், அலுவலக உதவி மற்றும் காவலாளி பணி ஒரு இடமும் காலியாக உள்ளது.

என்னென்ன பணிகள்
தோட்டி பணிக்கு 6 இடங்களும், துப்புரவு பணிக்கு 17 இடங்களும், தோட்டக்காரர் பணிக்கு 28 இடங்களும், இரவு காவலாளி பணிக்கு 185 பணியிடங்களும் உள்ளன.
மசால்ஜி பணிக்கு 485 இடங்களும் காலியாக உள்ளன. இன்னும் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி
18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000 வரை இருக்கும்.

எப்படி தேர்வு
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

கடைசி தேதி
விண்ணப்பிக்கும்முறை: www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.06.2021 என்று சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications