இப்ப நடுரோட்டில் நிற்கிறோம்.. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தேர்வு எழுதி வென்றும்.. இளைஞர்கள் பேட்டி
சென்னை: உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தேர்வு எழுதி வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் 8 மாதமாக வேலை வழங்காமல் அலைக்கழிப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
ஒன்னு PHD படிங்க இல்ல இங்க வேலைக்கு வாங்கன்னு சொன்னாங்க.. " இவங்க சொன்னதை நம்பி என்னுடைய படிப்பை விட்டுட்டு வந்து இப்ப நடுரோட்டில் நிற்கிறேன்.. என செய்தியாளரிடம் ஒருவர் கூறினார்.

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தேர்வு எழுதி வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் செய்தியாளர்களுக்கு சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், இங்கு உள்ள அனைவருமே உணவு பாதுகாப்பு அலுவலராக தமிழக அரசால் பயிற்சி கொடுக்கப்பட்ட நபர்கள். மொத்தம் 97 பேருக்கு பயிற்சி கொடுத்தார்கள்.
நாங்கள் ஏன் இங்கு வந்துள்ளோம் என்றால், இந்த தேர்வுக்கான அறிவிப்பு 13.10.2021 அன்று விட்டார்கள்.. நோட்டிபிகேசன் விட்டு ஒரு வருசம் கழிச்சு, தேர்வு நடத்தினார்கள். அதாவது 20.10.2022ல் தேர்வு வைத்தார்கள். இதற்கான ரிசல்ட் பிப்ரவரி மாதம் வந்தது. நாங்கள் எல்லாருமே சான்றிதழ் வெரிபிசிகேசன் முடித்துவிட்டோம். எம்ஆர்பி தான் எங்களை தேர்வு செய்தது. அவங்க கிட்ட சர்டிபிகேட் வெரிபிகேசன் அனைத்தையும் முடித்துவிட்டோம். அதை முடித்த பின்னர் உணவு பாதுகாப்பு துறையிலும் சர்டிபிகேட் வெரிபிகேசன் முடிச்சு , எங்களுக்கான இண்டக்சன் ட்ரெயினிங் உணவுத்துறை மூலமாக மார்ச் 25இல் இருந்து ஏப்ரல் 1ம் தேதி வரை பூந்தமல்லியில் ஐந்து நாட்கள் நடந்தது.
இண்டக்சன் ட்ரெயினிங் முடிந்த உடன் எங்களுடைய சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டார்கள்.. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாங்கள் உணவுத்துறையில் சர்டிபிகேட் வெரிபிகேசன் போகும் போதே, நாங்கள் எல்லாருமே வேறவேற இடத்தில் வேலை செய்கிறோம். நான் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்டி படித்து வந்தேன்.. சர்டிபிகேட். வெரிபிகேசன் கேட்ட போது, ஒன்னு PHD படிங்க இல்ல இங்க வேலைக்கு வாங்கன்னு சொன்னாங்க.. நாங்க ஆறு மாசம் தான் உங்களுக்கு டைம் தர முடியும் என்று சொன்னார்கள்.. அந்த வாக்குறுதியை நம்பி நான் பிஎச்டி படிப்பதை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.
இங்க இருக்கின்றன எல்லா நபர்களுமே தங்களுடைய தனிப்பட்ட வேலையை விட்டு விட்டு வந்துள்ளார்கள். ஏனெனில் அரசு வேலை என்பது ஒவ்வொரு ஏழை மக்களின் கனவு.. நாங்கள் எல்லாருமே நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.. நாங்கள் எங்களுடைய தனியார் வேலையைவிட்டுவிட்டு வாழ்வாதாரத்தை விட்டு விட்டு, இந்த வேலைக்காக சர்டிபிகேட் வெரிபிகேசன் முடிச்சுட்டு, பயிற்சியும் முடிச்சிட்டு, வேலைகிடைக்கும் என மனதிருப்தியுடன் இருந்தோம்.
எங்களுடைய சர்டிபிகேட்களை எல்லாம் வாங்கிவிட்டு எங்களிடம் என்ன சொல்லி அனுப்பினார்கள் என்றால், உங்களுக்கு பணி ஆணை வந்து சேரும் என்று அனுப்பினார்கள்.. 8 மாதம் முடிந்துவிட்டது. இன்று வரை எந்த ஒரு தகவலும் வரவில்லை.. 12 முறைக்கு மேல் எம்ஆர்பியையும், உணவு பாதுகாப்பு துறையையும் சந்தித்துவிட்டோம்.. ஆனால் எந்த ஒரு தார்மீகமான பதிலும் அவர்களிடம் இருந்து வரவில்லை.. இப்ப கடைசியாக 20 நாட்கள் முன்பு மெரிட் மாணவர்கள் போய் சந்தித்து பேசினோம். ஆனாலும் சரியான பதில் கிடைக்கவில்லை..
அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்கு உள்ளதால் எங்களால் போட முடியாது. நீங்கள் வேண்டுமானால் நீதிமன்றம் சென்று உங்களுக்கான நீதிமன்ற ஆர்டரை வாங்கிட்டு வாங்க என்று சொன்னார்கள். செப்டம்பர் 25ம் தேதி எங்களுடைய நீதிமன்ற ஆணையை வாங்கி வந்துவிட்டோம்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்துவிட்டார்கள்.. இது வந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது. இன்னும் பணி ஆணை வழங்கப்படவில்லை. 3 வருடம் கஷ்டப்பட்டு படித்து வென்றோம்.. எங்களுக்கு இன்று வரை பணிகிடைக்கவில்லை" என்று வேதனை தெரிவித்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications