ZOHO-வில் புதிய வேலை.. ‛சாப்ட்வேர் டெவலப்பர்’ பணிக்கு ஆள்சேர்ப்பு.. சென்னையில் நியமனம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் சாப்ட்வேர் டெவலப்பர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அடுத்தடுத்து பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஜோஹோ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:
அதன்படி தற்போது ஜோஹோவில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சி++ (C++), ஜாவா (Java) தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு 0 முதல் 4 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் பூஜ்ஜியம் என குறிப்பிடப்பட்டுள்ளதால் பணிக்கு தேவையான திறமை கொண்டு அனுபவம் இல்லாமல் இருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
புதிய சாப்ட்வேர் ப்ரோகிராமை டெவலப் செய்தல், டெஸ்ட் செய்தல் உள்ளிட்ட வேலைகளை செய்ய வேண்டும். மேலும் பிழையின்றி Code எழுத வேண்டும். சாப்ட்வேர் ப்ரோகிராமில் ஏற்படும் Debug, Troubleshoot தீர்க்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் புதிய தொழில்நுட்பத்தை கற்பதில் ஆர்வம் இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்படுகிறது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications