ZOHO-வில் சூப்பர் வேலை.. தேதி முடியப்போகுது.. சீக்கிரமாக விண்ணப்பிங்க! தென்காசியில் பணி நியமனம்
தென்காசி: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் செயல்பட்டு வரும் ஜோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி வந்தன.

தற்போது தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி மத்தளம்பாறையில் செயல்பட்டு வரும் ஜோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் (Software Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2023ம் ஆண்டு வரை கல்லூரி படிப்பை முடித்து சாப்ட்வேர் டெவலப்பர் பிரிவில் குறைந்தபட்சம் ஒன்று முதல் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 2024ல் படிப்பை முடித்தவர்கள் மற்றும் 2025ல் படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
அதோடு விண்ணப்பம் செய்வோருக்கு Java, MySQL & JS தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் டெவலப், டெஸ்ட் மற்றும் புதிய சாப்ட்வேர் புரோகிராமை இம்பிளிமென்ட் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதேபோல் பிழையின்றி கோடிங் எழுத வேண்டி இருக்கும். மேம் ட்ரபிள்சூட், டீபக் உள்ளிட்டவற்றை சரிசெய்ய வேண்டி இருக்கும். புதிய டெக்னாலஜி, பிரேம்வொர்க்ஸ் கற்பதில் ஆர்வமாக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றி தெரிவிக்கப்படலாம். அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்கள் தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் போக வேண்டாம்.. மைக்ரோசாஃப்ட் தரும் சூப்பர் வாய்ப்பு
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வது நல்லது. அதுமட்டுமின்றி ஜோஹோவை பொறுத்தவரை விண்ணப்பம் செய்ய அதிக காலஅவகாசம் என்பது வழங்கப்படுவது இல்லை. தங்களுக்கு தேவையான அளவுக்கு விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில் உடனடியாக விண்ணப்ப தேதி காலாவதியாகிவிடும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தேர்வுக்கு 3 நாள் முன்பாக இ-மெயில் மூலம் அழைக்கப்படுவார்கள். அதில் தேர்வு தேதி பற்றிய அனைத்து அறிவிப்புகளும் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக ஜோஹோவில் பல்வேறு பணிகளுக்கு ஒரே நேரத்தில் விண்ணப்பம் செய்வதை தவிர்க்க வேண்டும். மீறி அப்படி செயல்படுவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கான ஆஃபர் கூட திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே ஜோஹோவில் பணியாற்றி மீண்டும் இண்டர்வியூவில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications