"பெண்களுக்கு மட்டும்".. பயிற்சியுடன் வேலை தரும் ZOHO ஐடி நிறுவனம்.. டிசம்பர் 18 தான் கடைசி நாள்
சென்னை: ஐடி நிறுவனத்தில் பணியாற்றி குடும்ப சூழல் காரணமாக ‛பிரேக்' எடுத்துள்ள பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஜோஹோ "மறுபடி" எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 18 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பயிற்சியுடன் வேலை வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தை மையப்படுத்தி ஜோஹோ ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஜோஹோ அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, மதுரை, தென்காசி (மத்தளம்பாறை) உள்ளிட்ட பல இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

ஜோஹோ நிறுவனத்தை பொறுத்தவரை படிப்பை தாண்டி ஒவ்வொருவரின் திறமையின் அடிப்படையில் வேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆண்டுதோறும் நுழைவு தேர்வு வைத்து தேர்ச்சி பெறுவோருக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தான் பெண்களுக்கான பிரத்யேக பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி ஜோஹோ நிறுவனம் "மறுபடி" (MARUPADI) என்ற பெயரில் பெண்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த "மறுபடி" பயிற்சி என்பது சாப்ட்வேர் துறையில் பணியாற்றி ஏதாவது ஒரு காரணத்தினால் வேலையை கைவிட்ட பெண்களை மீண்டும் ஐடி துறையில் பணியமர்த்தும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது. இதனால் ஐடி துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் மீண்டும் பணி செய்ய விரும்பினால் இதில் பங்கேற்கலாம்.
இதற்கு விண்ணப்பம் செய்யும் பெண்களுக்கு என்று சில தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பெண்கள் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். தொலைதூர கல்வி (Distance Education) முறையில் படித்திருந்தாலும் ஓகே தான். அதேபோல் ஐடி துறையில் ஏதாவது சாப்ட்வேர் கம்பெனியில் 2 ஆண்டு Technological ரோலில் பணியாற்றிய அனுபவம் கொண்டு தற்போது வேலையின்றி இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் எந்த வயது கொண்ட பெண்கள் வேண்டுமானாலும் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு ஆண்கள், இப்போது தான் கல்லூரி படிப்பை முடித்த பெண்கள், வெளிநாடுகளில் இருக்கும் பெண்கள், தற்போது ஐடி துறையில் ஃபுல் டைம், பார்ட் டைம், ஒப்பந்த அடிப்படையில், ஃப்ரிலேன்சிங் முறையில் பணியாற்றி வருவோம் மற்றும் கடைசியாக பணியாற்றி நிறுவனத்தில் இருந்து Relieving கடிதம் பெறாதவர்கள் விண்ணப்பம் செய்ய அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் டிசம்பர் 18 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு விண்ணப்பம் செய்ய முடியாது. இதையடுத்து டிசம்பர் 20 ம் தேதி தேர்வு நடக்கும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பயிற்சி வழங்கப்படும். பிறகு பணியமர்த்தப்படுவார்கள். பயிற்சி என்பது 5 மாதங்கள் வரை சென்னையில் உள்ள ஜோஹோ அலுவலகத்தில் இருக்கும். ஒவ்வொருவரும் டிரெய்னியாக பயிற்சி பெறுவார்கள்.
பயிற்சியை முடிப்போருக்கு Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும். அதில் திறமையாக செயல்படுவோருக்கு ஜோஹோ நிறுவனத்தில் வேலை வழங்கப்படும். ஜோஹோ நிறுவனம் சார்பில் ஜோஹோ ஸ்கூல்ஸ் ஆஃப் லேனிங் (Zoho Schools of Learing) வழியாக வழங்கப்படும். இது ஜோஹோ நிறுவனத்துக்கு தேவையான ஆட்களுக்கு பயிற்சி கொடுக்கும் பணியை செய்து வருகிறது.
தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 2 வகையான பணிக்கு பயிற்சி வழங்கப்படும். அதன்படி முதலில் நாம் பார்ப்பது டெக்னிக்கல் ரைட்டிங் (Technical Writing) பிரிவுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், டெக்னிக்கல் ரைட்டிங்கின் ஃபண்டமென்டல்ஸ், டெக்னிக்கல் ரைட்டிங் அடிப்படையில் டீம் டைவ்ஸ் (Deep Dives), SEO Basics, Marketing Techniques உள்ளிட்டவை தொடர்பான பயிற்சி வழங்கப்படும்.
அதேபோல் 2வது பணி என்பது சாப்ட்வேர் டெவலப்மென்ட் பணியாகும். இந்த பணிக்கு ஜாவா, டேட்டா ஸ்ட்ரக்ச்சர்ஸ், எஸ்க்யூஎல்மற்றும் ஃப்ரண்ட் எண்ட்டெவலப்மென்ட்டின் அடிப்படை தெரிந்திருந்தால் விண்ணப்பம் செய்து பயிற்சியை பெறலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். டிசம்பர் 18 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பம் செய்பவர்கள் அனைவரும் "மறுபடி" எனும் பயிற்சிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்றால் இல்லை. மாறாக விண்ணப்பம் செய்வோருக்கு நுழைவு தேர்வு (Entrance Exam) இருக்கும். அது டிசம்பர் 20 ம் தேதி நடக்கும். அதில் பாஸ் ஆக வேண்டும். அதன்பிறகு ஒரு இண்டர்வியூ இருக்கும். அதிலும் தேர்வானால் மட்டுமே "மறுபடி" பயிற்சியில் சேர முடியும். இதற்கான நுழைவு தேர்வு, இன்டர்வியூ எப்படி இருக்கும் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. முடிந்தவரை அதற்கேற்ப தயாராகி செல்வது நல்லது. இதனால் பெண்கள் மிஸ் செய்யாமல் விண்ணப்பம் செய்யலாம்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications