என்னப்பா இங்க சத்தம்.. அடடே அண்ணே நீங்களா.. வாங்கண்ணே!
கவுண்டமணி: தடை செய்! தடை செய்! வன்முறையை தூண்டும் திரைப்படத்தை தடை செய்!
செந்தில்: என்னப்பா இங்க சத்தம்.. ஆ ஊன்னா படத்தை தடை செய்யனும்னு சொல்லிகிட்டு...
கவுண்டமணி: சவுண்டு விடுறது யாருய்யா....
செந்தில்: ஓ அண்ணனா .. வாங்கண்ணே... ஆமா நீங்க மட்டும் என்னவாம்..
கவுண்டமணி: என்ன நாங்க மட்டும்... ஒரு சினிமாங்கிறது மக்களுக்கு நல்ல சொல்றதுக்குதான். வம்பிழுக்கவா?
செந்தில்: அப்படி இல்லைன்னே... அது ஒரு யாவாரம்.. நீங்க இப்படி தலையிடப்படாது
கவுண்டமணி: அதெப்படி டபுக்கு டபுக்குன்னு உள்ளே வந்து நுழைஞ்சிடுறீங்க.. உங்களுக்கே இது நியாயமாப்பா? அங்க அடிச்சுட்டு சாவானுக உங்களுக்கு அது ஏவாரமா?
செந்தில்: அண்ணே.. அதெல்லாம் எங்களுக்கு தெரியாது.. இது எங்களோட "உரிம்ம்ம்ம்ம்ம்ம்மை" பிரச்சனை
கவுண்டமணி: தம்பி... நான் அமைதியாதான் கோர்ட்டு, ஆர்ப்பாட்டம்னு பேசிகிட்டு இருக்கேன்.. நீ ஏன் இப்படி உள்ளே வந்து குட்டைய குழப்பி கூச்சல் போடுற
செந்தில்: அதெல்லாம் முடியாது.. எங்களோட சினிமாவை அழிக்க வந்த வம்பர் நீங்க...
கவுண்டமணி: தம்பி மறுபடியும் சொல்றேன்.. அமைதியாக நடக்குற போராட்டத்தை அதகளமாக்காதீங்க..
செந்தில்: அதெல்லாம்ம் (கவுண்டர் இடை மறிக்க அதிர்ச்சியாகிறார் செந்தில்..)
கவுண்டமணி: நான் ஏம்பா அடிக்கப் போறேன்... பயப்படாத.. அப்புறம் நீ ஜாதி சனம், பாட்டன், முப்பாட்டன் எல்லாத்தையும் கூப்பிடுவேன்ப...
செந்தில்(உரத்த குரலில்): பிரச்சனைக்கு பைசல் பண்ணாம போனா என்ன அர்த்தம் மருத்துவரே...
கவுண்டமணி: பைசல் தானே.. பண்ணிடுவோம் தம்பி (பி.ஏ.விடம் ஏதோ சொல்கிறார்)
செந்தில்: அப்படி என் வழிக்கு வரோனும்...வெற்றி வெற்றி!!
கவுண்டர் கையில் ஊசி கிடைக்க ஓங்கி செந்திலுக்கு போட.. செந்தில் மயங்கி விழ.
கவுண்டர்: பைசல் தானே.. இனி ஒருவாரத்துக்கு இந்த பஞ்சாயத்தே வராதுங்கப்பா. எல்லாம் கலைஞ்சு போங்கப்பா. படமெடுக்கிறானுகளாம்.. படம்.. அதுக்கு பைசலாம்












Click it and Unblock the Notifications