யப்ப்பாஆஆஆஆஆஆ சீக்கிரம் ஓடிடு... அம்மா உருட்டுகட்டையோட வருது.....
கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...
மனைவி : வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்!
கணவன் : ஏன்? என்னாச்சு..?
மனைவி : இன்னைக்கி ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்!
கணவன் : சரி...!
மனைவி : இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது...!அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி!
கணவன் : (கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சு விட்டுட வேண்டியதுதானே!
மனைவி : மன்னிக்கிறதா?அந்தப் பேச்சுக்கே இடமில்ல.எங்க அந்த உருட்டுக்கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...)
(வாசலிலிருந்து வந்த மகன்...)
மகன் : யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா!
அப்பா : ஏண்டா..?
மகன் : நான்தான் கோவத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா!!
அப்பா : அடப்பாவி மகனே! வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே., அய்யய்யோ ... இப்ப நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்..! செய்யாத குத்தத்துக்கு நாயா, பேயா அலைய வெக்கிறாங்களே..... இத கேட்க நாதியில்லையா..












Click it and Unblock the Notifications