ஜோக்ஸ் - 'தல' ரசிகனை கலாய்த்த காது கேக்காத மூதாட்டி!
சென்னை: பரபரப்புகளும், சோகங்களும், இலக்குகள், மன அழுத்தங்களும் நிறைந்த இந்த உலகத்தில் நம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சிரிப்பு முக்கியம். அதை ஏற்படுத்தும் நகைச்சுவையை தான் இந்த ஜோக்ஸ் தொகுப்பின் மூலம் நாம் வழங்குகிறோம்.

கடி நம்பர் 1:
ஒரு சிறுவன் வீட்ல தும்மிக்கிட்டே இருந்தானாம்.. அம்மாக்கு ஒரே கவலை! என்ன செஞ்சு பார்த்தும் தும்மல் நிக்கவே இல்ல... ஆஸ்பத்திரிக்கு போய் டாக்டர்கிட்ட காட்டியும் பிரயோஜனம் இல்லன்னு புலம்பிட்டே இருந்தாங்க!
அதை பார்த்த பக்கத்துக்கு வீட்டு அக்கா, உன் பையன் ஏன் இப்டி தும்மிக்கிட்டே இருக்கான்னு எனக்கு தெரியும்னு சொல்ல, அப்டியா உடனே சொல்லுக்கான்னு ஆர்வமா கேட்டாங்க அம்மா..
அவன், "பொடி" பையன் டி அதான் தும்மிட்டே இருக்கான்னு ஒரு கடியை போட்டாங்க... அதிர்ச்சில அந்த பையனுக்கே தும்மல் நின்னுருச்சாம்.. நல்லவேளை வேற எதுவும் ஆகல.

கடி நம்பர் 2:
ஆமா, அந்த புத்துக்குள்ளேயே கிடக்குதே.. அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
அதுவந்து "புற்று"நோயாம் தம்பி...

கடி நம்பர் 3:
ஆண்டி.. உங்க மருமகளுக்கு என்னாச்சு..?
வாயில ஆப்பரேசன் கண்ணு..
அப்படியா ஏன்..
வாய் கிழிய பேசுறா, அதான் தையல் போட்டாச்சு..

கடி நம்பர் 4:
தல ரசிகன்: என்னுடைய வாழ்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா..
காது கேளாத கிழவி: ஏன், தம்பி நீங்க சிற்பியா?

கடி நம்பர் 5:
மாணவன்: சார்.. சார் உங்க கிட்ட ஒரு ஜோக் ஒன்னு கேட்கனும்.. கேட்கட்டுமா?
ஆசிரியர்: நல்ல மூட்ல இருக்கேன்.. இப்பவே கேளு..
மாணவன்: ஒரு யானை ஸ்வீட் வாங்குறதுக்காக பேக்கரிக்கு வேகமா ஓடிப்போனுச்சு.. முதல்ல யானை என்ன வாங்கி இருக்கும்?
ஆசிரியர்: நீதான் கேள்விலயே பதில் சொல்லிட்டியே... ஸ்வீட்தான் வாங்கி இருக்கும்.
மாணவன்: வேகமா ஓடிப்போனுச்சுல.. அப்போ முதல்ல மூச்சு தான வாங்கி இருக்கும். இதுக்கூட தெரியாதா சார்..
ஆசிரியர்: என்னடா இன்னைக்கு எதுவும் நடக்கலயேன்னு பார்த்தேன்.. நடத்திட்ட, சந்தோசமா?

கடி நம்பர் 6:
செந்தில்: அண்ணே விசயம் தெரியுமா?
மணி: சொன்னா தானடா தெரியும்?
செந்தில்: பழம் நழுவிப் பாலில் விழுந்து கிளாஸ் உடைஞ்சு போச்சுண்ணே!
மணி: அது எப்டி உடையும்..?
செந்தில்: பலாப்பழம் விழுந்தா உடையாம என்ன பன்னும்
மணி: உன் குசும்பு அதிகமா போச்சு.. இரு வெச்சுக்கிறேன்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications