மிச்ச சில்லறையைக் கொடுத்துட்டாளே நண்பா!
அந்த இளம் ஜோடி அப்போதுதான் ஹனிமூனை முடித்து விட்டுத் திரும்பியிருந்தது. ஆனால் இருவரின் முகத்திலும் பெரும் சோகம், கோபம், அதிருப்தி.
இதைப் பார்த்த அந்த புது மாப்பிள்ளையின் நண்பன், அவனை தனியாக கூப்பிட்டுப் பேசினான். உங்களுக்குள் என்ன பிரச்சினை, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் என்று கேட்டான்.
அதற்கு அந்த புது மாப்பிள்ளை சொன்னான்.. முதல் இரவு நன்றாகத்தான் போனது. நானும் சந்தோஷமாக பாத்ரூமுக்குப் போனேன். போவதற்கு முன்பு ஞாபகமறதியாக எனது தலையணை மீது 1000 ரூபாய்த் தாளை வைத்து விட்டேன் என்றான்.
இதைக் கேட்ட நண்பன், அடக்கடவுளே, பழக்க தோஷத்தில் வைத்து விட்டாயே.. சரி சரி விடு. உனது மனைவி இன்னும் கொஞ்ச நாளில் மனதைத் தேற்றிக் கொள்வாள் என்றாள்.
அதைக் கேட்ட புது மாப்பிள்ளை இப்படிச் சொன்னான்...அதெல்லாம் நான் கவலைப்படலே, 500 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதம் 500 ரூபாயை வைத்து விட்டாள்...அதான் கவலையாப் போச்சு...!












Click it and Unblock the Notifications