அப்பாடா, என் புருஷன் தப்பிச்சான்...!
Subscribe to Oneindia Tamil
கமலா கர்ப்பமாக இருந்தாள். குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று கவலைப்பட்ட அவள் தனக்குத் தெரிந்த ஜோசியர் ஒருவரிடம் போனாள்.
அந்த ஜோசியர் ஜோசியம் பார்த்தார். பிறகு கமலாவிடம், உனக்கு ஒரு கெட்ட செய்தி வைத்திருக்கிறேன். மனம் தளராமல் கேள் என்றார்.
அதைக் கேட்டு பதறிப் போன கமலா, சாமி என்ன சொல்றீங்க என்று பதட்டத்துடன் கேட்டாள்.
அதற்கு ஜோசியர் சொன்னார், கமலா, உனக்கு பிரசவம் நடக்கும்போது குழந்தை நல்லபடியாகத்தான் பிறக்கும். ஆனால், குழந்தையோட தந்தைக்குத்தான் கண்டம் இருக்கிறது, அவன் மரித்துப் போவான் என்றார்.
சோக முகத்துடன் இருந்த கமலா, ஜோசியர் கூறியதைக் கேட்டதும், அப்பாடா, என் புருஷன் தப்பிச்சார் என்று பெருத்த சந்தோஷத்துடன் கூறியபடி அங்கிருந்து கிளம்பினாள்.












Click it and Unblock the Notifications