Joke: மழையில் வடை சாப்பிடுங்க பாஸ்.. லிவருக்கு நல்லதாம்!
சென்னை: நவம்பர், டிசம்பர் வந்தாலும் வந்தது, தமிழகம் முழுக்க மழையை பற்றிய பேச்சுதான். இப்போ புயலும் சேர்ந்தாச்சு. அப்புறம் என்ன, குடையும் கையுமாக சுத்திக் கொண்டு இருக்கிறார்கள் நம்மாட்கள்.
ஆனால், மழைக்கு இதமாக, நம்ம ராமுக்கு வடை சாப்பிட ஆசை வந்தது. சுடச் சுட வடை.. இன்னொரு கையில், காபி இல்லைன்னா தேனீர்.. நினைச்சி பார்க்கவே, ஜிவ்வுன்னு இருந்தது ராமுக்கு.

ஆனா, உடம்பு முழுக்க ஓவரா கொலஸ்ட்ரால்.. வாயை கட்டவும் முடியல.. ஒய்ப், பிரேமா கிட்ட வாய் விட்டு கேட்கவும் முடியல.. எப்படியோ ராத்திரியெல்லாம் யோசிச்சி, ஒரு ஐடியாவோட அடுத்த நாளே பிரேமாகிட்ட 'பிட்டை' போட்டார் ராமு. இதோ அவுங்க உரையாடல்.
ராமு: ஏம்மா.. பிரேமா.. மழைக்கு சுடச் சுட நல்ல காரமா வடை போடேன்
பிரேமா: உங்க மண்டையிலதான் ரெண்டு போடனும், அதெல்லாம் எண்ணைங்க, வேண்டாம்.
ராமு: எது.. எண்ணை நல்லது இல்லையா. அப்போ தண்ணீர் குடிச்சா மட்டும் நல்லதா?
பிரேமா: இது என்ன கேனத்தனமா ஒரு கேள்வி. தண்ணீர் ஈஸியா ஜீரணமாகும், நல்லதுதான்.
ராமு : (நம்பிக்கையோடு): இப்போ, தண்ணீர்ல எண்ணெய் சேர்ந்தா என்னாகுது?
பிரேமா: தண்ணீர்ல எண்ணை மிதக்கும்.
ராமு: அப்போ.. எண்ணெய் தண்ணீரை விட லகுவான பொருள்தான.
பிரேமா (குழப்பத்தோடு): அப்படித்தாங்க தெரியுது
ராமு: அப்போ அந்த எண்ணையில மிதக்குற வடை எவ்வளவு லகுவானது. ஜீரணத்துக்கு ஈஸியாதான இருக்கும். இது தெரியாம பேசுறியே.. போ, போ. போய் வடை சட்டியை எடுத்து அடுப்புல வை டார்லிங். (ராமு மைண்ட் வாய்ஸ்- அப்பாடா, எப்படியோ வாய்லயே வடை சுட்டு, வடைக்கு ரெடி பண்ணியாச்சு)
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications