Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: என் இனிய தனிமையே.. ஹான்ஸை தனிமை படுத்தியது யாரு..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டி குழந்தைகளே.. எல்லோரும் என்ன பண்றீங்க, யாரெல்லாம் போன வாரம் வந்த கடைக்குட்டி சிங்கம் கதையை படிச்சீங்க, படிக்காதவங்க கண்டிப்பா படிச்சு பாருங்க. இன்னைக்கு நீங்க என்ன கதை படிக்கச் போறீங்க தெரியுமா ஹான்ஸ் அப்படின்ற ஒரு பையன் அப்பறம் அவனுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை பத்தி தான். வாங்க கதைக்குள்ள போலாம்.

முன்னொரு காலத்துல ஒரு அழகான கிராமம் இருந்தது. அங்கு ஒரு தம்பதிகள் ஒரு சின்ன வீட்ல நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு கிழங்கும், சோளமும் விளையக்கூடிய ஒரு தோட்டம் இருந்தது. கணவன் மனைவி இருவரும் அதை அழகாக பராமரித்து வந்தார்கள். அவர்கள் தோட்டத்தின் வழியாக வழக்கமாக ஒரு அழகான பெரிய குடும்பம் செல்வார்கள். இதை பார்க்கும்போதெல்லாம் தம்பதிகளுக்கு சிறு வருத்தமாக இருக்கும். ஏன்னு பாக்குறீங்களா, ஆமா அவங்களுக்கு குழந்தை இல்லை. அந்த பெண் எப்போதும் நம் வீட்டில் உணவுக்கு பஞ்சம் இல்லை ஆனால் கடவுள் ஒரு குழந்தையை கொடுத்தால் அழகாக இருக்கும் என கூறுவாள்.

அன்று அவர்களின் தோட்டத்தில் அழகான 2 முள்ளம்பன்றி குட்டிகளை பார்த்தாள். இதுபோல எனக்கும் ஒரு குழந்தை கிடைத்தால் நான் அதை அழகாக பார்த்துக்கொள்வேன் என்றாள்.

 Kids story in tamil : Hans the hedgehog

சில காலங்கள் கழித்து அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ஹான்ஸ் என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தார்கள். ஆனால் அவன் வித்தியாசமாக இருக்கிறான் என்பதை தம்பதிகள் உணர்ந்தார்கள். அவன் முகம், முதுகெல்லாம் பார்ப்பதற்கு ஒரு முள்ளம்பன்றியை போல் இருந்தது. அதனால் அவர்கள் அதை குழந்தையை வெறுத்துவிடவில்லை. குழந்தை வளர வளர பாதி மனிதனாகவும், பாதி முள்ளம்பன்றியாகவும் இருந்தான்.

ஊரில் உள்ள சிறியவர்கள் யாரும் அவனை சேர்த்து கொள்ளவில்லை. அவனை கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். அவன் முதுகில் முட்கள் இருந்ததால், அவனது பெற்றோர்களை அவனால் நெருங்க முடியவில்லை.வைக்கோல்கள் நிறைந்த மெத்தையில் தான் உறங்கினான். அவனுக்கு நண்பர்களாக இருக்க யாரும் முன் வரவில்லை. மற்ற குழந்தைகளுடைய பெற்றோர்களும் அவனுடன் பழக விடவில்லை. அது இன்னும் அவனுக்கு வருத்தமாக இருந்தது.

அவன் வாலிபனாக வளர்ந்தும் விட்டான். ஆனால் இன்றும் யாரும் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவனுக்கு இந்த கிராமத்தில் இருக்க விருப்பமில்லை என தனது பெற்றோர்களிடம் தெரிவித்தான். அவர்களும் மகனின் நிம்மதி முக்கியம் என சம்மதித்தார்கள். அவன் அவனது தந்தையிடம் அவனுக்கு ஒரு நெருப்பு கோழி , ஒரு கழுதை மற்றும் சில சேவல், கோழிகளை கேட்டான். அவரும் அதை அனைத்தும் கொடுத்தார். அவன் அந்த கிராமத்தை விட்டு கிளம்ப தயாரானான். அப்போது அவனது தாய் அவனிடம் மின்னும் படியான ஒரு அணிகலனை கொடுத்தார். உனக்கு இது ஒருநாள் உதவும் அனால் ஒரே ஒரு முறை தான் உதவும் என்றும் கூறி வழியனுப்பினார்,

அவனும் நெருப்பு கோழியின் முதுகில் அமர்ந்து பயணித்தான். அவன் வெகுதூரம் பயணித்து ஒரு சிறிய நகரத்தை பார்த்தான். அதை பார்த்ததும் அவனை அங்கு ஏற்று கொள்வார்கள் என உள்ளே நகர்ந்து சென்றான். ஆனால் அவனது வித்தியாசமான முள்ளம்பன்றி தோற்றத்தை கண்ட மக்கள் அவனை ஏளனம் செய்தார்கள். ஹான்ஸ் மனம் வருந்தி நடக்க ஆரம்பித்தான். ஒரு அழகான காடு அவன் கண்ணில் பட்டது. அவனும் இங்குதான் நம்மை யாரும் வித்தியாசமாக பார்க்க மாட்டார்கள் என முடிவு செய்து அங்கு ஒரு மாற வீடு செய்தான். அவனை முழுவதுமாக மூடும்படியான உடைகளை அனைத்து கொண்டு நகரத்திற்கு செல்வான். அவன் கொண்டு வந்த கோழிகளில் இருந்து கிடைக்கும் முட்டை மற்றும் கழுதை பாலை விற்று அவனுக்கு தேவையான உணவுகளை வாங்கி கொள்வான்.

நாட்கள் நகர்ந்தன. அவன் தனிமையை அதிகம் விரும்ப ஆரம்பித்தான். சில இசைகளை மீது மகிழ்ந்து கொள்வான். ஆனாலும் அவனுக்கு ஒரு நண்பர்கள் கூட இல்லையே என மிகுந்த வருதல் ஒரு ஓரத்தில் இருந்தது. ஒருநாள் அந்த நகரத்தின் அரசன் அந்த வழியாக வந்து வழி தவறி போய்விட்டார். அவர் ஹான்ஸின் இசையின் ஓசையை கேட்கவே அந்த வழியை நோக்கி நகர்ந்தார். அங்கு ஹான்ஸ் இருப்பதாய் பார்த்த அரசர் அவன் உருவத்தை பார்த்து அதிரிச்சி அடைந்தார். பின்னர் அவனிடம் உதவி கேட்டார். என்னை நகரத்தின் எல்லையில் விட்டால் போதும் என்றார். அவனும் இந்த வாய்ப்பை நழுவ விட கூடாது. அரசரிடம் தனக்கு தேவையான ஒன்றை கேட்கலாம் அதற்கு பதிலாக என்று முடிவு செய்தான்.

அரசரிடம் நான் வால் காட்டுகிறேன் ஆனால் அதற்கு பதிலாக உங்களை யார் முதலில் பார்க்க வருகிறார்களோ அவர்களை என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்கிறான். அரசரும் சரி என்று வாக்கு கொடுக்கிறார். அவன் அரசரை மாளிகை வரை சென்று வழி அனுப்பி நிற்கிறான். அரசரை முதலில் யார் காண வருகிறார்கள் என பார்த்தால் முதலில் அவரது செல்ல பிராணியான ரூபி என்ற நாய் ஓடி வருகிறது. அதன் பின்னே அவரது மகள் ஓடி வருகிறாள் அப்பா, எங்கு சென்றிர்கள். அவர் மகளை விடுத்தது ரூபி வா, வா என அழைக்கிறார்.

ரூபி சட்டென நிற்கவும் அரசரின் மகள் கரோல் வேகமாக அப்பாவை கட்டி தழுவுகிறாள். என்னப்பா நீங்க என்னை விட உங்கள் நாய் மீது தான் பாசம் அதிகமா என செல்லமாக கோபம் கொள்கிறாள். இல்லை மகளே நான் அந்த முள்ளம்பன்றி மனிதனுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன் என அரசர் எடுத்து கூறினார்.

கரோல்,' அப்பா கொடுத்த வாக்கை மீறுவது தவறு, நான் அவனுடன் செல்கிறேன் சில நாட்கள் இங்கு இருந்துவிட்டு ' என கூறினாள். அவரும் அதற்கு சம்மதித்தார். ஆனால் ராணிக்கு இதில் துளி அளவும் விருப்பம் இல்லை. கரோலை அழைத்து செல்ல ஹான்ஸ் வந்தான். அவன் அவளுக்காக அறைகளை தயார் செய்தான். அவளை நன்றாக பத்துக்கொண்டான். முதலில் கரோல் அங்கு இருக்க பிடிக்காமல் அமைதியாக இருந்தாள். போக போக ஹான்ஸின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அவனுக்கு நல்ல நபர்கள் யாரும் இல்லை என்பதை உணர்ந்தாள்.

ராணி, கரோல் காட்டிற்குள் கஷ்டப்படுவாள் என்பதால் அவளை கூடி வந்துவிடலாம் இரவோடு இரவாக என முடிவு செய்தாள். சிப்பாய்களை அழைத்து கொண்டு கரோலை கூட்டி வர கிளம்பினார். அவர்கள் காட்டை நெருங்கியதும் சின்ன வீடாக இருப்பதை பார்த்து அரண்மனையில் வாழ்ந்த என் மகளை இப்படி வாழவைப்பதா என வருத்தப்பட்டார் ராணி. சிப்பாய்களிடம் அவனை கட்டிப்போட்டு கரோலை தூக்கி வர சொன்னார். உத்தரவை செய்தார்கள் சிப்பாய்கள். கரோலை தூக்கி ராணியிடம் ஒப்படைத்தார்கள்.

கரோல் தூக்கத்தில் இருந்து விழித்தாள். ஹான்ஸ், ஹான்ஸ் என அழைத்தாள். அம்மா நீங்க இங்க என்ன பண்றிங்க, ஹான்ஸ் எங்க என கேட்டாள். ராணி அவனை கட்டி போட்டாச்சு நீ அமைதியாக வா என்னுடன் என்றார். அவள் அந்த சரியாட்டில் இருந்து குதித்து ஓடினாள். அவனை கட்டி போட்டிருந்தார்கள். இந்த குழப்பத்திற்கு நடுவே எதோ உறுமும் சத்தம் கேட்டது. பார்த்தால் அங்கு ஒரு புலி வேகமாக கரோலின் மீது பாய்வதற்கு தயாரானது. கரோலின் முன்னே ஹான்ஸ் ஓடினான். அவளை காப்பாற்றுவதற்கு உயிரை கொடுக்க தயாரானான். அந்த சமயம் அவனது கையில் இருந்த ஹான்ஸின் அம்மா கொடுத்த அணிகலன் ஒரு கேடயத்தை உருவாக்கியது. அவன் முதுகில் இருந்த முள்கள் அவனை காத்தது. அந்த ஒளியின் காரணமாக புலி காட்டுக்கு திரும்பியது. ஹான்ஸ் இயல்பான மனிதனாக மாறினான். அவனை அரசவைக்கு அழைத்து சென்றார் ராணி. அரசர், கரோல் மற்றும் ஹன்ஸிற்கு திருமணம் செய்து வைத்தார். இருவரும் ஒன்றாக அரசவையை ஏற்றார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+