குழந்தை நீதி கதைகள்: சூனியக்காரியிடம் மாட்டிய குழந்தைகள்.. எப்படி நேக்கா தப்பிச்சாங்க பாத்தீங்களா?
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ், எல்லோரும் வீகென்ட் வருதுன்னு ஆவலா இருக்கீங்களா? அப்படியே நம்ம விசித்திர கதைக்கு ஒரு விசிட் போடுங்க. இந்தவாரம் மாயாஜால வாரம்.. அப்படினு சொல்லிட்டே கதைக்குள்ள போலாமா..
ஒரு அடர்ந்த காடு, அங்கு ஒரு வேட்டையாடுபவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு அது பழக்கப்பட்ட காடு என்பதால் பயப்படாமல் சென்று கொண்டிருந்தார். மிருகங்களின் சத்தத்தை வைத்தே அவர் அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என குறி பார்த்து வேட்டையாடுவதில் வல்லவர். அவருக்கு திடீரென ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கிறது.

அந்த திசைல் நடந்தவருக்கு ஒரு அதிர்ச்சி. அங்கு ஒரு சின்ன குழந்தை தனியாக விடப்பட்டு அழுது கொண்டிருந்தது. யாரோ வேண்டுமென்றே குழந்தையை விட்டு சென்றதாக எண்ணிய அவர் அந்த குழந்தையை வீட்டுக்கு கொண்டு சென்றார். அவருக்கு ஏற்கனவே லினா என்ற பெண் குழந்தை இருந்தது. இது ஆண் குழந்தை என்பதால் அர்னால்ட் என பெயரை வைத்தார். இருவரையும் ஒன்று சேர வளர்த்தார். லீனாவும் அர்னால்ட்டும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் வாழ்ந்தார்கள்.
லீனாவின் வீட்டில் சனா என்ற சமையல் செய்யும் பெண் ஒருவர் இருந்தார். அவள் பல நாளாக ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து செல்வதை கவனித்த லினா, ஒருநாள் சனாவிடம் எதற்காக தண்ணீர் எடுத்து காட்டுக்குள் செல்கிறாய் என்று கேட்டாள். சனா , அது ஒன்றுமில்லை என கூறி அப்போது மழுப்பி விட்டு சென்றாள். லீனாவிற்கு இது எதற்காக என தெரியாமல் தலையே வெடிக்கும்படியாக இருந்தது. அவளை பின் தொடர்ந்த லீனாவிற்கு அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. சனா ஏதோ ஒரு பெரிய கொப்பரையில் அந்த தண்ணீரை சேமித்து கொண்டிருந்தாள். ஒளிந்து இருந்த பார்த்த லீனாவிற்கு அடுத்த அதிர்ச்சி அவள் அதில் யாரையோ போட்டு சமைத்து சாப்பிட போகிறாள் என தெரிந்தது.
யாராக இருக்கும் என அவளையே நோட்டமிட ஆரம்பித்தாள் லீனா. அவள் அதில் அர்னால்டை போட்டு சாப்பிடுவதாக பணியாளர்களிடம் கூறி கொண்டிருந்ததை கேட்டாள். அவ்வளவுதான், தம்பியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும், அப்பா வேட்டைக்கு சென்றால் வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என்ன செய்யலாம் என முடிவு செய்தாள்.
இரவோடு இரவாக அர்னால்டிடம், சனா உன்னை சமைத்து சாப்பிட போகிறாள், ஆகையால் நாம் இங்கிருந்து தப்பி செல்ல வேண்டும். விடிவதற்குள் கிளம்பிடலாம் என கூறிவிட்டு தூங்க சென்றாள். அதே போல் இருவரும் வீட்டை விட்டு கிளம்பினார்கள். காலையில் சனா அர்னால்ட் படுக்கையில் இல்லை என்பதை பார்த்தாள்.
பணியாளர்களை அழைத்து, அவர்கள் இந்த காட்டை விட்டு எங்கும் தப்பி சென்றிருக்க மாட்டார்கள். போய் தேடுங்கள் என்று அனுப்பினாள். கொஞ்ச நேரத்தில் பணியாளர்கள் வருவதை பார்த்த லீனா தம்பியிடம் நான் ரோஜாப்பூவாக மாறிவிடுகிறேன் நீ அதன் செடியாக மாறிவிடு என கூறினாள். அதே போல இருவரும் மாறினார்கள். பணியாளர்களும் எதுவும் கிடைக்கவில்லை என சனாவிடம் கூறினார்கள். அந்த பொல்லாத சமையல்காரி எதையுமே பார்க்கவில்லையா என பணியாளர்களை கடிந்து கொண்டாள். போய் தேடுங்கள் என விரட்டி விட்டாள்.

இன்னும் கொஞ்ச தூரம் சென்றவர்கள் ஒரு சர்ச் மற்றும் அதனுள் ஒரு பெரிய அலங்கார விளக்கு இருந்ததை பார்த்து விட்டு அப்படியே போய் அவளிடம் கூறினர். அட மரமண்டைகளா, அது அவங்கதான் இந்த காட்டுக்குள்ள எப்படி அப்படி ஒரு சர்ச் வந்துச்சு உங்கள சொல்லி தப்பு இல்ல நானே போறேன் என்றாள்.
இந்த முறை லீனா தம்பியிடம் எப்படியும் அவள் நம்மை தேடி வருவாள். அதனால் இந்த முறை நீ குளமாக மாறி விடு, நான் வாத்தாக மாறுகிறேன் என்று மாறினார்கள். இதை பார்த்த சனா இது அவர்கள் தான் அந்த நீரை நான் குடித்தால் சரியாக இருக்கும் என முடிவு செய்தாள். குளத்தின் அருகில் முகத்தை வைத்த சனாவை முகத்திலேயே கொத்தி வாத்து தண்ணீருக்குள் இழுத்தது. சனா வெளியில் வர முடிவு செய்தாள். வாத்து விடாமல் அவளது தலையில் கொட்டியதால் நீருக்குள் தலை மூழ்கி இறந்தாள். தம்பியை காப்பாற்றிய நிம்மதியில் சந்தோசமாக வீட்டுக்கு சென்றார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications