குழந்தை நீதி கதைகள்: வினோத பறவையால் வாழ்ந்தது யார்? வீழ்ந்தது யார்?
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், என்ன பண்றீங்க. சரி கண்டிப்பா உங்க எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் இன்னைக்கு நீங்க படிக்கப்போறது விசித்திர கதைகள் தான். இப்போ உங்க கண்ணு முன்னாடி தங்க சிறகுகள் கொண்ட நல்ல பெரிய பறவை வந்து நின்றால் என்ன பண்ணுவீங்க.
சரி யோசிச்சிகிட்டே கதையை படிங்க. ரஞ்சனியோட அம்மா வேணி ஒரு பெரிய பணக்கார வீட்டில் வேலை செய்துட்டு வந்தாங்க. அங்க வேலை முடிஞ்சதும் கொடுக்குற சிறிய அளவு அரிசியை வைத்து அவங்க ரெண்டுபேரோட அன்றாட வாழ்க்கையை கழித்தார்கள். வேணி ஒருநாள் வேலைக்கு போகவில்லை என்றாலும் இருவரும் பட்டினி தான் இருப்பார்கள். வேணியும், ரஞ்சனியும் கிடைப்பதை வைத்து எளிய வாழ்க்கையாக இருந்தாலும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

குட்டி பொண்ணு ரஞ்சனி அம்மா கஷ்ட படுறாங்க அப்படின்னு பெருசா ஆசை பட்டு எதுவும் கேட்டுக்கிட்டது இல்லை. மகளுக்காக வேணியும் விடாமல் வேலைக்கு சென்று விடுவாள். தினமும் கொண்டு வரும் அரிசியை உலர்த்தி பிறகு சமைத்து சாப்பிடுவார்கள். அன்று வேணி அடுத்த நாளுக்கான அரிசியையும் சேர்த்து கொண்டு வந்திருந்தாள். அதில் கொஞ்சம் வண்டுகள் இருந்ததால், வெயிலில் நன்றாக காய வைத்துதான் சமைக்க வேண்டும் என்றாள் வேணி. முற்றத்தில் துணியை விரித்து உலர்த்த வைத்து விட்டு மகளிடம் ஒரு குச்சியை கொடுத்து பாதுகாத்துக்கொள் என்று வேலைக்கு கிளம்பினாள் வேணி.
அவளும் அமைதியாக அமர்ந்து இருந்தாள். அப்போது ஒரு சிட்டு குருவி அவள் அருகில் வந்து நின்றது. அதை பார்த்ததும் 2 அரிசிகளை கொடுத்தால் அதுவும் மகிழ்ச்சியாக பறந்து சென்றது. சிறிது நேரத்தில் ஒரு வயதான காகம் அவள் அருகில் வந்தது. பார்ப்பதற்கு அது மிகவும் சோர்வடைந்து இருப்பதை உணர்ந்தாள் ரஞ்சனி. சரி கொஞ்சம் தானே என காகத்திற்கு அரிசியை கொடுத்தாள்.
இந்தமுறை அவள் உயரத்திற்கு தங்க சிறகுகளை கொண்ட ஓரு பறவை வந்து நின்றது. அது தனது தலையை தொங்க போட்டு கொண்டு, எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. எங்கு தேடியும் உணவு கிடைக்கவில்லை என்றது. அந்த பறவை பேசியதை பார்த்து அதிர்ந்த ரஞ்சனி, என்னிடத்தில் இவவளவுதான் தானியம் இருக்கிறது. என் அம்மா மிகவும் கடின பட்டு இதை ஈட்டுகிறார்கள். உன்னை பார்த்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது. சரி கொஞ்சமாக சாப்பிட்டு கிளம்பிவிடு என் அம்மா வரும் நேரம் ஆகிவிட்டது என்றாள். கண் மூடி திறப்பதற்குள் மொத்த அரிசியையும் காலி செய்தது அந்த பறவை.
ரஞ்சனி என்ன இப்படி செய்துவிட்டாய், என் அம்மாவிடம் என்ன சொல்ல போகிறேன் என வருந்தினாள். பறவை என்னை மன்னித்துவிடு பசி மிகுதியால் யோசிக்காமல் சாப்பிட்டுவிட்டேன். என் வீடு அருகில் தான், உன் அம்மா கோபப்படாமல் இருக்க உனக்கு நான் தருகிறேன். அதை வைத்து உன் அம்மாவை சமாதானம் செய் என்றது. இல்லை அவர் வரும் நேரம் ஆகிவிட்டது, என்றாள் ரஞ்சனி. தூரத்தில் தெரியும் ஆலமரத்தில் தான் என் வீடு வா என அழைத்து, அவளும் உடன் சென்றாள். அந்த மரத்தின் மேல் தங்கத்தால் ஆனா வீடு போல ஒன்று இருந்தது. நான் இந்த வழியாக பலமுறை சென்றுள்ளேன் ஆனால் இதை பார்த்ததே இல்லையே என வியந்தாள்.
சரி எப்படி மேலே வருவது எனக்கு மரம் ஏற தெரியாதே என்றாள் ரஞ்சனி. பறவை உனக்கு எந்த மாதிரி ஏணி வேண்டும் என்றது. அவளுக்கு தெரிந்த ஒரே ஏணி, மரத்தால் ஆனதுதான். அவள் கேட்டது ஏணி வந்தது. அந்த வீட்டிற்குள் சென்றதும், அங்கு இருந்த மேசை, நாற்காலி என அனைத்துமே தங்கத்தால் இருந்தது. ஆச்சர்யமாக பார்த்த ரஞ்சனியிடம் நீ உணவு உட்கொள்ள என்ன வேண்டும் என்றது. எங்க அம்மா வர வழியில் வாழை இலை கொண்டு வந்து அதில் உணவு பரிமாறுவங்க அதுதான் வேண்டும் என்றாள். திருப்தியாக சாப்பிட்டாள்
பறவை ரஞ்சனி முன்னால் 3 பெட்டிகளை வைத்து இதில் எது வேண்டுமோ எடுத்துக்கொள். அதில் இருக்கும் பொருளை பார்த்தால் உன் அம்மா கோப பட மாட்டார்கள் என்றது. 3 பேட்டியும் ஒன்றை விட ஒன்று பெரிதாக இருந்தது. ஏற்கனவே நேரம் இல்லாததால் இருக்கும் பெட்டிகளில் சிறிய பெட்டியை எடுத்து சென்றாள் ரஞ்சனி.
வேணி ரஞ்சனிக்காக, காத்திருந்தாள். அவள் வந்ததும் நடந்ததை அம்மாவிடம் கூறினாள். அந்த பெட்டியை திறந்ததும் தங்க காசுகள் இருந்தன. அதைவைத்து சிறியதாக ஒரு கடையை ஆரம்பித்தார்கள். அதில் வரும் வருமானத்தை வைத்து நல்ல நிலைக்கு வந்தார்கள். இந்த விஷயம் அக்கம் பக்கம் முழுக்க பரவியது. பணியாள் வேலைக்கு சென்றவளுக்கு இப்படி ஒரு அதிருஷ்டமா என நிறைய பேர் பொறாமை கொண்டார்கள்.
வேணியின் பக்கத்து வீட்டில் இருந்த மாயாவிற்கு எப்படியாவது இன்னும் பணக்காரியாக ஆசை வந்தது. ஒரு வாளி நிறைய தானியங்களை எடுத்துக்கொண்டு அந்த பறவையாக காத்திருந்தாள். அப்போது சிட்டுக்குருவி வந்தது அதை விரட்டி விட்டாள் மாயா. பிறகு காகம் வந்தது அதையும் விரட்டி விட்டாள், இறுதியாக அந்த தங்க சிறகு உள்ள பறவை வந்தது. நிறைய சாப்பிடு என வலியுறுத்தினாள் மாயா. சரி போதும் கிளம்புகிறேன் என்றது பறவை. சாப்பிட்டாய் அல்லவா சன்மானம் கொடு என கேட்க, பறவை தனது இருப்பிடத்திற்கு வர சொன்னது.
மாயாவும், ஆர்வமாக போனாள். மரத்தின் அடியில் நின்றதும் பறவை ஏணியை கேட்டது. மாயா தங்க ஏணி கேட்டாள். பறவை வரவழைத்தது. சாப்பிடுவதற்கு என்ன வேண்டும் என கேட்க தங்க தட்டை கேட்டாள். அதுவும் வந்தது. முடிந்ததும் 3 பெரிய பெட்டிகளை கொடுத்து ஒன்றை எடுத்துக்கொள் என்றது பறவை.இருப்பதிலே பெரிய பெட்டியை கேட்டாள் மாயா. பறவை அதை கொடுத்து அவளை அனுப்பியது. மூன்றையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றாள்.
வீட்டுக்கு சென்றது தங்க தட்டு, வெறும் தட்டாக மாறியது. ஏணி பழைய மூங்கிலில் ஆனது போல இருந்தது. சரி பெட்டி இருக்கிறது என நிம்மதியோடு திறக்க, உள்ளே இருந்து பாம்பு சட்டென சீறியது. தலைதெறிக்க பதறி ஓடினாள் மாயா.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications