குழந்தை நீதி கதைகள்: இதுதான் ரூல்ஸ்.. அம்மா கொடுத்த அந்த பொருட்கள் உதவியதா?
சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டீஸ், எல்லோரும் எப்படி இருக்கீங்க. இன்னைக்கு கொஞ்சம் மந்திரம் கொஞ்சம் புத்திசாலித்தனம் கொண்ட ஒரு கதையை தான் படிக்க போறீங்க. கதையை படிக்க தயாரா இருக்கீங்களா, வாங்க கதைக்குள்ள போகலாம். அதுக்கு முன்னாடி நீங்க இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இருந்தா என்ன பண்ணுவீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
ஒரு பெரிய ராஜ்ஜியத்தில் அரசர் ஒருவர் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு மகன் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு குறை இருந்ததால் ராஜ்ஜியத்தின் ஒரு சிறு பகுதியில் வசித்து வந்தார். அங்கு வாழ்ந்த மக்களுக்கு அவர் அந்த பகுதிக்கு வந்த பிறகு நிம்மதி பறிபோனது.

இளவரசருக்கு முடிவெட்ட செல்லும் அக்கிராமவாசிகள் ஒருபோதும் திரும்ப வரவில்லை. வாரம் ஒருமுறை முடி திருத்த செல்லும் நபர்களை அந்த மக்கள் இழந்து கொண்டே இருந்தனர். அதன் பின்னால் இருந்த ரகசியம் யாருக்கும் அறியவில்லை.
அந்த கிராமத்தில் சலீம் என்ற இளம் வயது சிறுவன் இருந்தான். அவனுக்கு அம்மா மட்டும் தான். அவர் துணிகளை தைத்து கொடுத்து தனது குடும்பத்தை பார்த்து கொண்டார். இந்தமுறை சலீம் முடி திருத்த செல்ல வேண்டும். அவனுக்கு மிகவும் பயம் ஏற்பட்டது. அவனது தாய்க்கு அவன் ஒருவன் மட்டுமே ஆதரவாக இருந்தான். அவனையும் இழந்து விட்டால் என்ன செய்வது என யோசித்தார். சலீம் கிளம்பும் தருணம் வந்தது. அவனிடம் 3 ரொட்டிகள் மற்றும் ஒரு புல்லாங்குழல் என அவனது அம்மா கொடுத்தார். சலீம் அம்மா சொன்னார், உனக்கு உயிரே போகுமளவுக்கு பசியாக இருந்தாலும் இந்த ரொட்டியை நீ உண்ண கூடாது என கூறினார். சலீம் சரி அம்மா என கூறிவிட்டு நகர்ந்தான்.
இளவரசர் இருந்த இடத்திற்கு சிப்பாய்கள் அழைத்து சென்றனர். உள்ளே சென்ற சலீம் இளவரசருக்கு வணக்கம் சொல்லிவிட்டு முடி திருத்த தயாரானான். அங்குதான் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இளவரசர் தலையில் இருந்த பாகையை கழட்டினார். அவர் தலையில் நீண்ட கொம்பு ஒன்று இருந்தது. சலீமுக்கு புரிந்தது. வேலையை முடித்ததும் இளவரசரிடம் சென்று விடை பெறுகிறேன் என்றான். இளவரசரோ நீ மிகவும் அருமையான வேலையை செய்துள்ளாய் அந்த பெட்டியில் இருக்கும் பொற்காசுகளில் உனக்கு வேண்டுமளவுக்கு எடுத்து செல் என்றார்.
பெட்டியை திறந்தவனை பின்னாலிருந்து இளவரசர் உள்ளே தள்ளி விட்டார். சலீம் ஒரு குகைக்குள் விழுந்தான். குகை நீண்டு பொய் கொண்டே இருந்தது. அவன் ஒரு பொற்குவியலின் மேல் பொத்தென விழுந்தான். நன்றாக மாட்டிக்கொண்டோம் என்றும் எண்ணினான். ஏனென்றால் அவனை சுற்றி நிறைய மண்டை ஓடுகள் மற்றும் மனித எலும்புகள் இருந்தன. சிறிது நேரத்தில் ஒரு பெரிய மலைப்பாம்பு அவன் முன் தோன்றியது. சலீம் திகைத்தான்.
அவன் கைப்பையில் இருந்த புல்லாங்குழலை எடுத்து இசையை வாசித்தான். அந்த இசையை கேட்ட பாம்பு மெய் மறந்து ஆடியது. அவன் அருகில் நெருங்கியதும் பையில் இருந்த ஒரு ரொட்டியை அதனிடம் நீட்டினான். அதுவும் அதை உண்டுவிட்டு அவனை சாப்பிட மனமில்லாமல் குகையின் மேல் பகுதியில் கொண்டுபோய் விட்டது.
அது ஒரு அடர்ந்த காடு, அந்த காட்டில் நுழைந்ததும் ஒரு உறுமல் சத்தத்தை கேட்டான். சட்டென அவன் மேல் ஒரு வயதான ஓநாய் பாய தயாரானது. அவன் ஓடி பொய் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்தான். மூச்சு வாங்கி அவனுக்கு பசி கிள்ளியது. ஒரு முறை ஓநாயை பார்த்தான். அவன் அம்மா சொன்னதை நினைவு கூர்ந்தான். கொஞ்சம் நிதானம் அடைந்தான். வயதான ஓநாய் என்பதால் அது மரத்தின் மேல் ஏறவில்லை. மேலும் அது களைத்து போய் இருந்தது.
இந்த முறை ரொட்டியை எடுத்து ஓநாயிடம் நீட்டினான் சலீம். அது அதை வாங்கி கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தது ஓநாய். அதுதான் சமயம் என புல்லாங்குழல் எடுத்து வாசித்தான். பசி அடங்கிய மயக்கத்தில் ஓநாய் அவன் அருகில் வந்தது. அதற்கு மேல் சாப்பிட ஓநாய் வயிற்றில் இடம் இல்லை. சலீமை முதுகில் ஏற்றி காட்டின் ஒரு எல்லையில் கொண்டுபோய் விட்டது.
அங்கு ஒரு வீடு இருந்தது. அதில் இருந்து ஒரு அழகான இளம்பெண் வெளியில் வந்தாள். சலீமை வீட்டிற்குள் அழைத்து சென்றாள். அவனை கட்டி போட்டு ஒரு கொதிக்கும் கொப்பரையில் இட தயார் செய்தாள். சலீம் அவளிடம் எனக்கு ஒரு கடைசி ஆசை என்றான். அவளும் சரி என்ன என்றாள். சலீம் அவன் புல்லாங்குழலை இசைக்க வேண்டும் என்றான். அவளும் ஒப்பு கொண்டாள். அவன் இசையை மீட்ட ஆரம்பித்ததும் அந்த இளம்பெண் தன்னை மறந்து நடனம் ஆடினாள். அவள் மேல் இருந்த கோட் கழண்டு விழுவது கூட அறியாமல் ஆடினாள். அது விழவும் அவள் ஒரு வயதான சூனியக்காரியை போன்று மாறினாள். அந்த கோட் விழுந்த இடத்தில் ஒரு வாடிய செடி இருந்தது. அது செழிப்பான செடியாக மாறியது. அதன் மகிமையை புரிந்து கொண்டான் சலீம்.

இசையால் திளைத்து போன சூனியக்காரிக்கு மீதம் இருந்த கடைசி ரொட்டியை கொடுத்தான். அவள் சாப்பிட்டு விட்டு அந்த கோட்டை அவனிடம் கொடுத்து மகிழ்ச்சியாக இரு என்று கூறி வழி அனுப்பினாள்.
வீட்டிற்கு வந்த சலீம், இளவரசருக்கு தகுந்த பாடம் புகட்ட முடிவு செய்தான். தனது கிராம மக்களையும் காப்பாற்ற எண்ணினான். இந்தமுறை அந்த கோட்டை போட்டு கொண்டு வயதானவனாய் மாறி இளவரசரை பார்க்க சென்றான். முடிகளை திருத்தினான். அரசர் பெட்டியை காண்பித்து உனக்கு தேவையான பொன்னை எடுத்துக்கொள் என்றார். சலீம், அவரிடம் இங்கு நிறைய இருக்கிறது. எனக்கு இவ்வளவு வேண்டாம் என்றான். அரசரும் ஆச்சரியமாக பெட்டியை எட்டி பார்த்தார். வயதான சலீம் அவரை உள்ளே தள்ளி விட்டான். சலீமின் தடியை பிடித்து கொண்டார் இளவரசர். அவ்வளவுதான் சலீமுக்கு பயம் ஒட்டியது.
அடுத்த கணமே அந்த கோட்டை கழட்டினான். அவனது பழைய இளைய பருவத்திற்கு வந்தான். தாடி மறைந்தது, இளவரசரும் குகைக்குள் விழுந்தார். அந்த கோட்டை திருப்பி போட்டு குழந்தையாக மாறி அங்கிறது தப்பி சென்றான். கிராம மக்களும் நிம்மதியாக வாழ தொடங்கினர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications