குழந்தை நீதி கதைகள்: இந்த மாதிரி ஒரு வரம் உங்களுக்கு கிடைத்தால் நீங்க என்ன பண்ணுவீங்க?
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எல்லோரும் என்ன பண்றீங்க, வீக்கென்ட் வரப்போகுது லீவு ல என்ன பண்ண போறீங்க. உங்க பிளான் எல்லாத்தையும் ஒரு ஓரமா வச்சிட்டு நம்ம கதையை 2 நிமிடம் ஒதுக்கி படிச்சிட்டு போங்க. முக்கியமா இன்னைக்கு நீங்க படிக்க போற கதை ஒரு மாயாஜாலம் நிறைந்த கதைதான். வெள்ளிக்கிழமை வந்தாச்சு இல்லையா அதான் விசித்திரமான கதைகளை படிக்க போலாமா..
அழகான இளைஞன் ஒருவன் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் அழகில் அந்த கிராமத்தில் இருந்த பெண்களுக்கு அப்படி ஒரு இஷ்டம். அவனது பெயர் ரிஷி. பெயருக்கு பொருத்தமான வாட்ட சாட்டமான இளைஞன் அவன்.

ரிஷியை திருமணம் செய்து கொள்ள பல பெண்கள் விருப்பப்பட்டாலும் அவன் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த கிராமத்தில் ஒரு பூனை அவன் வீடு வழியாக கடந்து சென்றது. அப்போது அது ரிஷியை பார்த்து என்ன இவன் இவ்வளவு அழகாக இருக்கிறான். இவனை போல ஒருத்தனை நான் எப்படி கல்யாணம் பண்ண முடியும் என யோசித்தது. நானோ பூனை, இவன் மனிதன் ஆச்சே என்ன பண்ணலாம் என யோசிக்க ஆரம்பித்தது.
அந்த கிராமத்தில் ஒரு சூனியக்காரி வீடு இருப்பதாய் தெரிந்து கொண்ட பூனை அங்கு சென்றது. சூனியக்காரியிடம் பூனை என்னை எப்படியாவது ஒரு அழகான பெண்ணாக மாற்றுங்கள் என மன்றாடியது. சூனியக்காரி, நீ அவனுக்கு சரியானவள் இல்லை என்றார். பூனை விடுவதாக இல்லை என்ன செய்தால் என்னால் ரிஷியை திருமணம் செய்து கொள்ள முடியும் என்றது. அப்போது சூனியக்காரி நீ பூனையின் குணாதிசயத்தை மாற்ற வேண்டும் என்றார். பூனையும் கண்டிப்பாக மாற்றி கொள்கிறேன். எனக்கு ரிஷி வேண்டும் என பிடிவாதமாக சொன்னது.
சூனியக்காரி ஒரு அழகிய பெண்ணாக பூனையை மாற்றினார். ரிஷி பெண்ணாக மாறிய பூனையை திருமணம் செய்து கொண்டான். இவர்களது வாழ்க்கை மிகவும் சந்தோசமாக சென்று கொண்டிருந்தது. பூனை நிஜமாக அதன் குணாதிசயத்தை மாற்றி விட்டதா என சூனியக்காரி பார்க்க நினைத்தாள்.
பூனை இருக்கும் இடத்தில் நல்ல நெய் மணக்க செய்தாள் சூனியக்காரி. அந்த மனம் அந்த பெண்ணை வெகுவாக இழுத்தது இருந்தாலும் அடக்கி கொண்டு தான் ஒரு பூனை அல்ல என அமைதி ஆனாள். இதை பார்த்த சூனியக்காரிக்கு ஆச்சர்யம் ஒருவேளை பெண்ணாகவே மாறிவிட்டதா பூனை என எண்ணினாள். சில நாட்கள் சென்றது.
ரிஷி அந்த பெண்ணோடு இன்னும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தான். இப்போது சூனியக்காரி அவர்களை பார்த்து பொறாமை கொண்டாள். ஒரு பூனைக்கு இப்படி ஒரு வாழ்க்கையா? விட கூடாது என இந்த முறை அந்த பெண் இருக்கும் பக்கங்களில் சில மீன் துண்டுகளை போடு வைத்தால் சூனியக்காரி.
அந்த பெண்ணுக்கு மீன் வாசனை மூக்கை துளைத்தது. அதை பச்சையாக சாப்பிட்டு பழக்க பட்ட அந்த பெண்ணுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ரிஷி அந்த சமயம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்தான். சட்டென நிதானம் அடைந்த அந்த பெண் மீனை சமைத்து ரிஷிக்கு அழகான விருந்து வைத்தாள். தோல்வியடைந்த சூனியக்காரி இன்னும் கோபமாக அங்கிருந்து கிளம்பினாள்.
எப்படியாவது இவர்களை பிரிக்க வேண்டும் என எண்ணி யோசித்து கொண்டிருந்த சூனியக்காரிக்கு ஒரு யோசனை வந்தது. உடனடியாக ரிஷியின் வீட்டுக்கு அருகில் சென்றாள். அங்கு இருவரும் பேசி சிறிது கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணின் தலையில் ஏதோ விழுவது போன்று உணர்ந்து திடுக்கென எழுந்தாள். ஒரு குட்டி எலி அவள் மீது விழுந்ததை உறுதி செய்த அந்த பெண் சட்டென அதை பிடித்து கடித்து சாப்பிட்டாள். அவள் வாயெல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட பார்த்த ரிஷிக்கு பயங்கரமான அதிர்ச்சி.
சூனியக்காரியை நம்பி இந்த செயலை செய்து இறுதியில் அவளே தன்னை பழிவாங்கிவிட்டாலே என பூனை வருத்தமானது. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு சான்று இதுதான்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications