குழந்தை நீதி கதைகள்: கடமையை செய் பலனை எதிர்பாராதே- ஷூ மேக்கரும் எல்வ்ஸும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ், எப்படி இருக்கீங்க? வாரம் வாரம் விசித்திரங்கள் நிறைந்த மாயாஜால கதைகள் படிக்கிறிங்க இல்லையா, இன்னைக்கும் அதே மாதிரி ஒரு மாயாஜாலம் உள்ள கதைய படிக்கலாமா?.. வாங்க கதைக்குள்ள போலாம். சாரி , சாரி ஒரு நிமிஷம்.. இந்த கதைல எல்வ்ஸ் னு கேரக்டர் வராங்க , அவங்கள கவனமா நோட் பண்ணிக்கோங்க.. இப்போ கதை படிக்கலாமா.. ஒகே,

ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தை ஒரு சிற்றரசன் ஆட்சி செய்து வந்தான். பெரிய செல்வந்தர்கள் , ஜமீன்தார்கள் இருந்தாலும் வறுமையில் வாடுற ஏழை மக்களும் அந்த கிராமத்தில இருந்தாங்க. அங்கதான் நம்ம ஷூ தயாரிக்கிற டைசன் வாழ்ந்து வந்தார். அவர்க்கு ஹெலன் அப்படிங்கர அழகான பெண் மனைவியாக வாழ்ந்து வந்தார். சொல்லிக்கிற மாதிரி அவர்க்கு வருமானம் கிடைக்கவில்லை. ஏதோ அன்றாடம் வாழ்க்கையை ஒட்டுறதே ரொம்ப கஷ்டமா போயிட்டு இருந்துச்சு.

Kids story in tamil :The eleves and The Shoemaker

டைசன் தினமும் காலைல ரெடி ஆகி ஹெலன் கிட்ட சொல்லிட்டு அவரது ஷூ ரெடி பண்ற கடைக்கு போவார். ஷூக்களை தைத்து முடித்து விற்பதற்காக சந்தைக்கு போவார். அது நல்ல பெரிய சந்தை , அந்த மொத கிராமமும் அங்கதான் அவங்களுக்கு தேவையானவற்றை வாங்கிப்பாங்க. டைசனோ வாடிக்கையாக ஷூ வாங்கும் கடையில வித்துட்டு வருவாரு. அவர் எதிர் பாக்குற மாதிரி அவோரட ஷூக்களுக்கு மதிப்பு கிடைச்சதில்லை. வர வருமானத்தில் கொஞ்சம் தோல்கள் , அப்புறம் வீட்டுக்கு தேவையான உணவு வகைகளை வாங்கிட்டு வருவாரு. தினமும் இரவு ஹெலெனிடம் தனது ஷூக்களுக்கு மதிப்பே இல்லனு புலம்பி தீர்ப்பார்.

ஹெலன் அவருக்கு மன தைரியத்தை கொடுத்து கொண்டே இருப்பார். " நீங்க கவலைப்படாதீங்க , நம்ம செய்ற வேலை ஒரு நாள் அங்கீகரிக்க படும் , அதுவரை எதிர்பாராமல் கடமையை செய்ங்க " என்று ஆறுதலாக கூறினார் ஹெலன். " ஒருநாள் கையில் இருக்கும் இருப்பு தீர்ந்து விடும், அன்று வாழ்வதற்கு வழியின்றி இறக்க வேண்டி வரும்" என விரக்தியில் பேசினார் டைசன். ஹெலன் மீண்டும் ஆறுதல் கூறினார்.

ஆமாம் அவர் சொன்ன நாலும் வந்தது. கடைசி ஒரு ஜோடி தயாரிக்க தேவையான தோல்கள் மட்டுமே இருந்தன. அவர் அதன் அளவுகளை வெட்டி சரியாக செய்து வைக்க முடிவு செய்தார். இதுதான் கடைசி ஷூ என்பதால் சிறப்பாக இருக்க வேண்டும் என நேரம் எடுத்துக்கொண்டார். அந்த இரவு அவரால் முடிக்க முடியாமல் பாதியில் வைத்து விட்டு காலையில் செய்து விடலாம் என வீட்டிற்க்கு திரும்பினார். மனைவியிடம் கடைசி ஷூ செய்ய போகிறேன் மேல் கொண்டு வருமானம் வர வாய்ப்பில்லை என்று கூறினார். ஹெலன் " நம்ம நேர்மையா ஒரு செயலை செய்தால் அதற்கான பலன் கண்டிப்பாக வந்து சேரும் " என்றார். நம்பிக்கையாக பேசினார்.

விடிந்ததும் டைசன் கடைக்கு செல்ல தயாராகினான். ஹெலன் தன்னம்பிக்கை கொடுத்து அனுப்பி விட்டாள். டைசன் தனது கடையை திறந்து பார்த்தான். அவனுக்கு அப்படி ஒரு ஆச்சர்யம் , பாதியில் வைத்துவிட்ட ஷூக்கள் தயாராகி இருந்தன, அதுவும் வெள்ளி நூல்களால் மிகவும் சிறப்பான வேலைபாடுடன் நேர்த்தியாக இருந்தன. டைசன் அதிரிச்சியில் மீளாமல் ஒரு நொடி நின்றான். பிறகு அதை எடுத்து கொண்டு சந்தைக்கு புறப்பட்டான். அவன் எதிர்பார்த்ததை விட மிக அதிக விலைக்கு அந்த ஷூக்கள் விற்றன. அவன் மேல்கொண்டு சில தோல்களை வாங்கி வந்தான். வீட்டுக்கு தேவையான உணவுகளையும் வாங்கினான்.

மனைவியிடம் நடந்தவற்றை கூறினான். அவள் நம்பிக்கையோடு நான் சொன்னேன் அல்லவா என்றாள். அவனும் மனைவியை பாராட்டிவிட்டு அன்றிரவை மகிழ்ச்சியாக கடந்தான். மறுநாள் கடையில் சென்று வாங்கி வந்த தோல்களுக்கு அளவான ஷூக்களை வெட்டி தயார் செய்தான். அவனால் வேலையை முடிக்க முடியவில்லை. சரி காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பினான். மறுநாள் கடையை திறந்தால் அவனுக்கு மீண்டும் ஆச்சர்யம் அவன் வெட்டி வைத்த அளவுக்கு ஏற்றவாறு ஷூக்கள் தயாராகி இருந்தன. அதுவும் மிகவும் நேர்த்தியாக அழகாக இருந்தது.

அதை கொண்டு சந்தையில் விற்றான் , அவனுக்கு இன்னும் அதிகமான வருமானம் கிடைத்தது. அதற்கு தேவையான அளவு தோல்கள் வாங்கி வந்தான். மீண்டும் அவற்றை பாதியில் வைத்து விட்டு வீட்டுக்கு சென்றான். ஹெலெனிடம் நடந்தவற்றை சொன்னான். இது வாடிக்கையாக தொடர்ந்து. டைசன் அது யார் நமக்கு உதவுவது என்ற ஆவலில் தினமும் பாதி வேலை செய்து வைத்து வந்தான். மறுநாள் ரெடி ஆகி இருக்கும் ஷூக்கள் மிக நேர்தியானவை என்பதால் சந்தையில் நல்ல லாபத்திற்கு விற்றன. அவன் பழைய வாழ்க்கை முறையில் இருந்து இன்னும் வசதியாக மாறினான். ஹெலெனிடம் நமக்கு உதவுபவர்கள் யாரென்று தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று தினமும் கூறி வந்தான்.

ஹெலன் , டைசனிடம் " சரி நாளை நானும் கடைக்கு வருகிறேன் நாம் ஒரு அறையில் மறைந்து கொள்ளலாம் அது யார் என்பதை ஒளிந்து இருந்து பார்ப்போம் என்று கூறினாள். டிசைனும் சரி என்று ஆந்திராவு வேலையை பாதியில் வைத்து விட்டு கிளம்பி செல்வது போன்று பக்கத்துக்கு அறையில் ஒளிந்து கொண்டான். மனைவி ஹெலெனும் திட்டமிட்ட படி அந்த அறையில் ஒளிந்து இருந்தார். திடீரென காற்று வீசியது , ஏதோ ஒரு பாடல் வரிகள் இருவர் காதிலும் விழுந்தது.

இருவரும் பயந்து கொண்டே அந்த அறையின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். இரண்டு எல்வ்ஸ் அங்கே நடனமாடி கொண்டு மிகவும் உற்சாகமாக அந்த ஷூக்களை தயாரித்தன. அவர்கள் உடை மிகவும் கிழிந்த நிலையில் இருந்தது. மிகவும் குள்ளமாக இருந்தனர். ஆனாலும் மகிழ்ச்சியாக அந்த ஷூக்களை தயார் செய்தனர். இதை பார்த்த டைசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இவர்கள் செய்த உதவி மிக பெரியது, அவர்கள் எந்நிலையிலும் மகிழ்ச்சியாக அவர்கள் வேலையை செய்கிறார்கள் என்றார் மனைவியிடம்.

டைசன் அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று ஹெலனிடம் கூறினார். ஹெலன் , "அவர்கள் கிழிந்த துணிக்கு பதிலாக புது துணி நான் தைக்கிறேன்" என்றாள். டைசனும் அவர்களுக்கு நான் ஷூ தைத்து கொடுக்கிறேன் என்றார். அன்றிரவு எல்வ்ஸ் கு இவர்கள் தயார் செய்த உடைகள் மற்றும் ஷூக்களை கடையில் வைத்து விட்டு மறைந்து இருந்து பார்த்தனர்.

எல்வ்ஸ் அந்த பரிசை பார்த்ததும் துள்ளி குதித்தனர். அதை போட்டு பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். ஜன்னல் வழியாக குதித்து மயமாகினர். டைசன் ஹெலன் இருவரும் மகிழ்ச்சியாக வீடு திரும்பினார். மறுநாள் டைசன் கடைக்கு வந்து ஷூ தயாரிக்கும் வேலைகளை செய்தான். முன்பை போலவே வேலைகளை பாதியில் விட்டு சென்றார். மறுநாள் காலை வந்து கடையை திறந்தார். அவருக்கு அதிரிச்சி காத்திருந்தது. ஷூக்கள் அவர் விட்டு சென்ற மாதிரியே இருந்தன. எந்த வேலையும் முடிக்கவில்லை. அவரே அதை முடித்து சந்தைக்கு சென்று விற்று வந்தார்.

ஹெலனிடம் இந்த மாதிரி வேலை நடக்க வில்லை என்றார். ஹெலன் " அப்படியா , சரி இதற்குமேல் நீங்கள் அந்த வேலைகளை செய்ய கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் நமக்கு உதவ வந்தார்கள் , நம் வாழ்வை மேலே உயர்த்தி விட்டு சென்றார்கள். இதற்கு மேலும் அவர்களை எதிர் பார்க்க வேண்டாம். நீங்களே வேலையை செய்யுங்கள்" என்றார். டைசன் " ஆமாம் , இனிமேல் அவர்களை போல் நேர்த்தியாக வேலை செய்வேன் , உற்சாகமாக செய்தால் கண்டிப்பா அதற்கான மதிப்பு கிடைக்கும்" என்றார். இருவரும் மகிழ்ச்சியாக வள ஆரம்பித்தனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+