குழந்தை நீதி கதைகள்: திடீரென புதையல் கிடைச்சா நீங்க என்ன பண்ணுவீங்க.. இவர் என்ன பண்ணுனாரு பாருங்க
சென்னை: Kids story in Tamil: ஹலோ சுட்டிஸ், எப்படி இருக்கீங்க. இன்னைக்கு என்ன கதை படிக்க போறோம்னு சொல்லுங்க பாப்போம். ஆமா தேவதை கதை தான். தலைப்புலயே தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு எதை பத்தி படிக்கப்போறோம்னு தெரிஞ்சிருக்கும். சரி வாங்க கதைக்குள்ள போலாம்.
அது ராஜ்ஜாகள் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். அங்க ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் டாரிஸ் அப்படினு ஏழை தொழிலாளி இருந்தான். அவனுக்கு அன்றாட வாழ்கை போவதே மிகவும் கடினமாக இருந்தது. தினமும் வேலைக்கு சென்று அவன் பொழுதை கழித்து கொண்டிருந்தான். அவன் ஈட்டும் பொருள் உணவுக்கு கூட போதவில்லை.

ஒரு நாள் டாரிஸ், வேலை ஏதும் கிடைக்காமல் தேடி அலைந்து கொண்டிருந்தான். அவன் கையில் இருந்த உணவு பொட்டலத்தை எடுத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தான். நெடுதூரம் நடந்தும் அந்த காட்டு பாதையில் அவனுக்கான வேலை அன்று கிடைக்கவில்லை. அன்னைக்குனு பார்த்து நல்ல காத்து வீச தொடங்கியது, அவன் சாப்பிடும் நேரமும் வந்தது. சரி எங்காவது ஓரமாய் அமர்ந்து உணவு உண்ணலாம் என ஒரு இடத்தை தேடினான்.
டாரிஸ் கண்ணில் ஒரு பெரிய மரம் கண்ணில் பட்டது. அந்த மரத்தில் ஒரு ரம்மியமான அமைதியை கண்டான். அவன் உணவு பொட்டலத்தை விரித்து சாப்பிட ஆரம்பித்தான். அந்த உணவு அவனுக்கு போதுமானதாக இல்லை. அந்த பொட்டலத்தில் ஒரு கைப்பிடி அளவுதான் உணவு இருந்தது. அதை சாப்பிட்டுவிட்டு சோகமாக மரத்தின் மேல் தலையை சாய்த்தான். மேல பார்த்தவனுக்கு ஒரு அதிர்ச்சி.
அழகான பெண் ஒருத்தி அந்த மரத்தின் கிளையில் அமர்ந்து இருந்தாள். உத்து பார்த்தான், அது ஒரு தேவதை. அழகான இறக்கைகள் , கையில் புல்லாங்குழல் வைத்து இசையை மீட்டி கொண்டிருந்தாள். டாரிஸை பார்த்த தேவதை, ஏன் சோகமாக இருக்கிறாய் டாரிஸ்? என்றாள். ரொம்ப கஷ்ட படுறேன், கடினமா உழைக்குறேன் அதுக்கான தக்க சன்மானம் கிடைக்கல, சாப்பிடுறதுக்கே வழி இல்லை என புலம்ப ஆரம்பித்தான் டாரிஸ். தேவதை அவனிடம், சரி என்ன வேண்டும் உனக்கு நீயே சொல், நான் தருகிறேன் என்றது. டாரிஸ் , இல்லை தேவதையே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம். அன்றாட சாப்பாட்டிற்கு ஏற்ற மாதிரி ஒரு வேலை கிடைத்தால் போதும் என்றான்.
தேவதை சொன்னாள், தூரத்தில் தெரிகிறதல்லவா அந்த மரத்தின் அடியில் புதையல் ஒன்று இருக்கிறது. அங்கு சென்று அந்த மரத்தை சுத்தி தோண்டு. அங்கு உனக்கு ஒரு புதையல் கிடைக்கும் அதை வைத்து உன் வாழ்க்கையை நீ வாழலாம் என்றாள். அவனும் தேவதைக்கு நன்றி சொல்லிவிட்டு அந்த மரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
மரத்தை சுத்தி தோண்டினான். அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் தோண்டினான். ஒரு வழியாக புதையல் மேல் தோண்டும் போது டோங் என ஒரு சத்தம் கேட்டது. தோண்டி வெளியில் எடுத்தான். தங்க காசுகள் அடங்கிய இரும்பு பெட்டி அவன் கையில் கிடைத்தது. இதை தேவதை என்னை வைத்துக்கொள்ள சொன்னார்களா? நான் இதை எப்படி வைத்து கொள்ள முடியும். என்னவாக இருந்தாலும் இது என்னுடையது இல்லையே? என பல விஷயங்களை யோசித்து கொண்டிருந்தான்.
புதையலை எடுத்து கொண்டு அரசவைக்கு சென்றான். நடந்தவற்றை அரசரிடம் சொல்லி, தேவதை கொடுத்ததாக இருந்தாலும் இது என்னுடையதல்ல என்று கூறினான். சரி ஆனால் அதை வைத்து நீ வாழ்ந்திருக்கலாமே என்றார் அரசர். என்னுடைய வேலைக்கு ஏற்ற சன்மானம் கிடைத்தால் போதுமே தவிர ஆடம்பர வாழ்கை வேண்டாம் என்றான் டாரிஸ்.

அரசர் அவனின் நேர்மையை கண்டு வியந்தார். டாரிஸ், தேவதை கொடுத்ததை நான் உனக்கே தருகிறேன். ஆனால் இன்னொன்றும் தருகிறேன். அதையும் நீ சிறப்பாக செய்வாய் என நம்புகிறேன் என்றார் அரசர். டாரிஸ்க்கு ஒன்றும் புரியவில்லை. திரு திருவென முழித்தான். அரசர், ஒன்றுமில்லை என்னுடைய கஜானாவை நேர்மையாக கவனித்துக்கொள்ள உன்னை போன்ற ஒருவர் கிடைக்க மாட்டார்கள். ஆகையால் இந்த வேலையையும் எனது பரிசாக ஏற்றுகொள் என்றார். இதை பார்த்த டாரிஸ்க்கு மகிழ்ச்சி கொள்ளவில்லை.
தேவதை கொடுத்த புதையல் ஏதோ ஒருநாள் தீர்ந்து விடும். ஆனால் அதை வைத்து அவன் நேர்மை அவனுக்கு ஈட்டியது வாழ்நாள் புதையல். டாரிஸ் மகிழ்ச்சியில் தேவதைக்கு மனதார நன்றி தெரிவித்தான்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications