Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: நீங்க நல்லவங்களா, கெட்டவங்களா? உங்க பேருதான் என்ன.. பறக்கும் சூனியக்காரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ சுட்டீஸ், எப்படி இருக்கீங்க. மழை பெய்றதுனால யாருக்கெல்லாம் ஸ்கூல் லீவ் , சரி கண்டிப்பா மாயாஜாலங்கள் நிறைந்த கதைனா நம்ம எல்லோருக்கும் பிடிக்கும் இல்லையா. இப்போ ஒரு சூனியக்காரி பத்தி தான் படிக்க போறோம். கதையை படிச்சிட்டு நம்ம சூனியக்காரி நல்லவங்களா இல்ல கெட்டவங்களா சொல்லுங்க.

முன்னொரு காலத்துல ஒரு அழகான கிராமத்தில் மெடோரா அவளுடைய அம்மாவுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு அம்மா மட்டும்தான். ஒரு பெரிய வீட்டில் அவங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருந்தாங்க. மெடோரா அம்மா பெரு எலிசா. மெடோரா எப்போதும் அவளுயடைய தோட்டம் அப்புறம் அவளுடைய புத்தங்கங்களுடன் நேரங்களை செலவழிப்பாள்.

Kids story in tamil : The Flying Witch

எலிசா ஒரு நாள் மெடோரா கிட்ட ஒரு பொம்மையை குடுத்து இத உன்னோட துணைக்கு வச்சிக்கோ, ஒருவேளை உன் கூட நான் இல்லாம போனா கூட இது உனக்கு துணையா இருக்கும். இந்த பொம்மை எனக்கு என்னோட தோழி கொடுத்தா. அவளும் நானும் உயிர் தோழிகளா இருந்தோம். ஒரு சின்ன சண்டையின் காரணமா நானும் அவளும் பேசிக்காமலே போய்ட்டோம். அவ இல்லாத குறைய இந்த பொம்மை தான் எனக்கு தீர்த்து வச்சது. இதை எப்போவும் உன்கூட வச்சிக்கோ என்றாள் எலிசா.

அவளும் அதை வாங்கி வைத்து கொண்டாள். மாதங்கள் கடந்தன. ஒருநாள் அவளது அம்மாவும் அவளை பிரிந்தாள். நாட்கள் கடந்தன. அவள் தனியாக அந்த பெரிய வீட்டில் இருந்தாள். அவள் தனியாக இருப்பதை உணர்ந்தாள். அவளது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட முடிவு செய்தாள். தம்பதிகள் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்க வந்தனர். அவர்கள் இருவரும் இவளிடம் கனிவாக நடந்ததை பார்த்த மெடோரா அவர்களிடம் எந்த தகவலையும் வாங்காமல் வீட்டில் தங்க வைத்தாள்.

இவள் தனியாக இருப்பதை புரிந்துகொண்ட தம்பதிகள் அவளது பெரிய வீட்டை அவளிடம் இருந்து பறித்து கொள்ள முடிவு செய்தனர். அவர்கள் இருவரும் நாடகமாடினர். வில்லிங்டன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். உன்னால் மட்டும் தான் அவரை காப்பாற்ற முடியும் என விலிங்டன் மனைவி மெடோராவிடம் கூறினார். அவளும் இரக்க குணம் உள்ளவள் என்பதால் என்ன செய்ய வேண்டும் என கேட்டாள்.

காடுகள் , மலைகள் தாண்டி ஒரு சூனியக்காரி இருக்கிறாள், அவளிடமே அந்த மருந்து இருக்கிறது உன்னால் மட்டுமே உதவ முடியும் என மெடோராவிடம் கெஞ்சி கேட்கிறாள். இவர்களின் சூழ்ச்சியை அறியாத மெடோரா அங்கிருந்து கிளம்பினாள். காடுகளை தாண்டி வேகமாக சென்று கொண்டிருக்கும் போது மிகுந்த வேகத்துடன் காற்று வீச தொடங்கியது. மெடோரா பயந்து மரத்தின் பின்னால் ஒதுங்கினாள். அப்போது ஒரு பறக்கும் தட்டில் சூனியக்காரி போவதை பார்த்து அதிர்ந்தாள் மெடோரா.

மெடோரா இதற்குமேல் என்னால் போக முடியாது , என அழுதாள். அப்போது முடியும் உன்னால் மட்டும்தான் முடியும் என ஒரு சத்தம் கேட்டது. மெடோரா பயந்து போய் யாரது, யாரது என்று கேட்டாள். அவள் கொண்டு வந்த பையில் இருந்து சத்தம் கேட்டது. எடுத்து பார்த்தால் அவள் அம்மா கொடுத்த பொம்மை பேசியது. பயப்படாதே! தைரியமாக முன்னே செல், அங்கு ஒரு பூனையும் நாயும் இருக்கும். நீ உன் பையில் இருக்கும் பாலையும், ப்ரெடையும் கொடு, பிறகு நடப்பதை பாரு என்றது. அவளும் நடக்க ஆரம்பித்தாள். சூனியக்காரி வீட்டில் நுழைந்தாள் மெடோரா.

மெடோரா ஒளிந்து இருந்து சூனியக்காரியை பார்த்தாள். அவளின் அசைவுகளை உணர்ந்த சூனியக்காரி யார் நீ, எப்படி உள்ளே வந்தாய் என கோபமாய் கேட்டாள். மெடோரா' கோவப்படாதிங்க , என் வீட்டில் இருக்கும் வில்லிங்டன் அவருக்கு உடல் நிலை சரி இல்லை, அவர் சரியாக வேண்டுமென்றால் அந்த மருந்து உங்களிடம் இருக்கு என கூறினாள். சூனியக்காரி ஒரு பெரிய பாத்திரத்தில் சென்று சில மந்திரங்களை போட்டு, பார்த்தாள் வில்லிங்டன் தம்பதிகள் நடனம் ஆடி கொண்டிருந்தார்கள். சூனியக்காரி இதை பார்த்ததும் என்ன பொய் சொல்கிறாயா இரு உன்னை குதிரையாக மாற்றுகிறேன். அதற்கு எனக்கு சில பொருட்கள் வேணும் நான் போய் எடுத்து வருகிறேன் என சொல்லிவிட்டு மெடோராவை ஒரு அறையில் அடைத்து விட்டு சென்றாள்.

அவள் அந்த பொம்மையை எடுத்து கொண்டு அழ ஆரம்பித்தாள். எனக்கு தயவுசெய்து உதவு என கேட்டாள். பொம்மை பேசவில்லை. அப்போது அங்கு வந்த பூனையும் நாயும் அவளை பார்த்தது. பொம்மை சொன்னது நியாபகம் வந்தது. அவள் கொண்டு வந்த பால் மற்றும் பிரட் இரண்டையும் அதற்கு வைத்தாள். இதை சாப்பிட்ட பூனை ஒரு சீப்பை அவளிடம் கொடுத்தது. நாய் ஒரு மாயக்கண்ணாடியை கொடுத்தது. இரண்டும் பேச ஆரம்பித்தது. என்ன நீங்க பேசுறீங்க என ஆச்சர்யப்பட்டாள் மெடோரா. பூனை சொன்னது வெட்டியாக பேச உனக்கு நேரம் இல்லை. இந்த சீப்பை வைத்து கொள். சூனியகாரியின் தட்டு வேகமாக பறக்கும். அவள் உன்னை நெருங்கும்போது இந்த மந்திர சீப்பை அவள் முன்னால் போடு பிறகு ஓடு அவள் தட்டு மெதுவாகும் மீண்டும் வரும்போது இந்த மாயக்கண்ணாடியை போடு அதன் பிறகு நீ தப்பித்து விடலாம் என்றது.

நாய் மெடோரா தப்பித்து கொள்ள வழியை காண்பித்தது. மெடோரா சூனியக்காரி துரத்துவதை போல் வேகமாக ஓட ஆரம்பித்தாள். சூனியக்காரி இப்போதுதான் வீட்டிற்கு சென்று அறையை பார்த்தால் அங்கு மெடோரா இல்லை. கோபமாக அவள் அங்கிருந்து பறந்தாள். மெரோடா காற்று வேகமாக வீசுவதை உணர்ந்தாள். பொம்மை சொன்னது சீப்பை எடுத்து கீழே போடு, மெரோடாவும் கீழே போட்டு கொண்டு மறைந்து கொண்டாள். இப்போது சூனியக்காரியின் பறக்கும் தட்டு வேகம் குறைந்தது. அந்த சீப்பு பறந்து வந்து சூனியக்காரியின் தலையை வாரியது. பல வருடங்களாக சிக்கு பிடித்த தலை அதை வாரியதும் சூனியக்காரி என்ன பண்ணுகிறாய் என்று கத்திகொண்டே மீண்டும் பறக்க ஆரம்பித்தாள்.

அவள் வருவதை பார்த்த மெடோரா மீண்டும் ஓடினாள். சூனியக்காரி நெருங்குவதை உணர்ந்த மெடோரா அந்த கண்ணாடியை கீழே போட்டாள். பொம்மை சொன்னது மறைந்து கொள் இல்லையென்றால் மாட்டிக்கொள்வாய். அவளும் ஒரு பெரிய பாறையின் பின்னால் மறைந்தாள். அந்த கண்ணாடி வெடித்து பெரிய பளிங்கு பாறையாக மாறியது. சூனியக்காரி தட்டு அங்கு வரவும் பளிங்கு பாறை கண்ணாடியாக மின்ன சரியாக இருந்தது. என்ன இது என்று முகத்தை மறைத்தாள் சூனியக்காரி. அதற்குள் சூனியக்காரி முகம் பளிங்கில் மின்னியது. யாருக்குத்தான் கண்ணாடியில் முகம் பார்க்க பிடிக்காது. சூனியக்காரியின் முகத்தை பார்த்ததும் அவள் அவளை ரசித்தாள். பழைய நினைவுகளை அசைத்தாள். என் தோழி எலிசா இருக்கும்போது என்னை பார்த்து கொண்டாள். அவள் மட்டுமே என்னை அக்கறையாக பார்த்தாள், அவள் போன பிறகு நான் கண்ணாடி பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். அவளிடம் என் நியாபகமாக மாய பொம்மை ஒன்றை கொடுத்தேன். ஆனால் அவள் நியாபகமாக என்னிடம் எதுவும் இல்லையே என வருந்தினாள்.

மெடோராவிற்கு இப்போதுதான் ஒன்று புரிந்தது. அவள் கையில் இருந்தது சூனியக்காரி கொடுத்த பொம்மையாக இருக்குமோ, ஒருவேளை இவர் கூறுவது என் அம்மாவையா என யோசித்து கொண்டே நான் அவரை காயப்படுத்திவிட்டேன் என சூனியக்காரி அருகில் நெருங்கினாள். அவளிடம் நீங்கள் கூறுவது இந்த பொம்மையா என்றாள். ஆமாம் உன்னிடம் இது எப்படி வந்தது என்று சூனியக்காரி கேட்டாள். உங்கள் தோழியின் பெயர் எலிசவா, அது என் அம்மாதான், அவர்தான் என் துணைக்காக இதை என்னிடம் கொடுத்தார். சூனியக்காரி மெடோராவை வாரி அணைத்து கொண்டாள். ஒரு சண்டையில் நான் அவளை பிரிந்துவிட்டேன் என்றாள்.

இருவரும் மெடோராவின் வீட்டிற்கு சென்றார்கள். அங்கிருந்த வில்லிங்டன் தம்பதிகளுக்கு சூனியக்காரி நல்ல படம் புகட்டினாள். அவர்களால் இனி யாரையும் இப்படி ஏமாற்ற முடியாது. அவர்களை கழுதையாக மாற்றி விட்டாள் சூனியக்காரி. தன் மகளை போல மெடோராவை பார்க்க ஆரம்பித்தாள் சூனியக்காரி. அவளது வித்தைகளை மற்றவர்களை குணமாக்க பயன்படுத்தினாள். எலிசா என்னுடன் இருக்கும்போது நான் அவளை மகிழ்விக்க மட்டுமே இதை உபயோகித்தேன். அவள் போன பிறகுதான் கெட்ட விஷயங்களுக்கு செயல்படுத்தினேன் என்றாள் சூனியக்காரி. மெரோடா ' ஆமா.. உங்க பேரு என்ன' என்றாள். சூனியக்காரி சிரித்துக்கொண்டே 'ஹெர்மோயினி' என்றாள். நாம் செய்யும் செயல்களே நம்மை யாரென்று தீர்மானிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+