குழந்தை நீதி கதைகள்: வலையை வீசிய மீனவனுக்காக காத்திருந்த பூதம்
சென்னை: Kids story in Tamil: ஹலோ சுட்டீஸ், என்ன பண்றீங்க. ஸ்கூல் போய்ட்டு வந்தாச்சா? வெள்ளிக்கிழமை வந்தாச்சு இல்லையா? யாரெல்லாம் ஆசையா இருக்கீங்க நம்ம விசித்திரங்கள் நிறைந்த கதையை படிக்க. சரி வாங்க கடலுக்கு போகலாம், சாரி சாரி கதைக்குள்ள போகலாம்.

ஆல்பர்ட் கடலுக்குள்ள வலையை வீசினான். அவனது படகு சிறியதுதான். அவனது வளையும் அதே போல சிறியதுதான். ஆனால் அந்த வலை தளும்ப அவனுக்கு எப்போதும் மீன் கிடைக்கும். அவனது அன்றாட வலக்கையை ஓட்டுவதற்கு அது அவனுக்கு போதுமானதாக இருந்தது. ஆல்பர்ட் ஏழையாக இருந்தாலும் மிகவும் தன்மையானவன். அவனுக்கு மனைவி ஜூலியட் இருந்தாள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சிறிய வீடு தான். ஜூலியட் எப்போதுமே ஆல்பெர்ட்டை குறை கூறி கொண்டே இருப்பாள். ஆனால் அவன் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் அமைதியாக கடந்து சென்று விடுவான்.
அன்று காலை உணவை சாப்பிட்டு கொண்டிருந்தான். பின்னாலிருந்து ஒரு குரல், நீ இப்படியே தின்னுட்டு இரு, நாளைக்கு திங்க சமைக்குறது விறகு இல்ல வரும்போது வாங்கிட்டு வா என கடிந்து கொண்டாள். அவன் அமைதியாக தலையை ஆட்டி கொண்டு கடலுக்கு கிளம்பினான். வலையை கடலில் வீசினான். வலை அவனை மிஞ்சிய எடையில் அவனால் இழுக்க முடியாமல் இருந்தது. தம் கட்டி இழுத்தான், வலையில் இருந்தது ஒரு குட்டி மீன் மட்டுமே.
அவனுக்கு அதிர்ச்சி, இதுவா இத்தனை கணமாக இருந்தது. அதை எடுத்து அவன் படகில் இருந்த வாளியில் இட்டான். அது ஏதோ வாயசைப்பதை பார்த்து அதனருகில் சென்றான். அது சத்தமாக என்ன விட்டுவிடு, உனக்கு என்ன வேண்டுமென்றாலும் செய்கிறேன் என்றது. அது பார்ப்பதற்கு நல்ல கோல்டன் பிஷ் போல இருந்தது. அது முகத்தை மிகவும் சோகமாக வைத்திருந்தது. இதை கொண்டு போய் விற்றால் யார் வாங்குவார்கள் என்று எண்ணி கொண்டு அதை கடலில் விட்டான் ஆல்பர்ட்.
உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மீன் என்ன வேண்டும் என கேட்டது. அவன் வீட்டுக்கு போனால் மனைவி விறகு கேட்பாள். உன்னால் முடிந்தால் அதை மட்டும் கொடு என்றான். மீன், சரி நீ வீட்டுக்கு செல் அங்கு விறகு இருக்கும் என்று சொல்லி கடலுக்குள் சென்றது. ஆல்பர்ட் தயக்கத்துடன் வீட்டுக்கு சென்றான். மீன் சொன்னபடி விறகுகள் வீட்டில் இருக்குமா? இல்லை மனைவி வகுந்துவிடுவாளா? என சென்றவனுக்கு மிகுந்த அதிரிச்சி.
அவனது வீட்டின் ஒரு பகுதி முழுக்க விறகுகளால் நிறைந்து இருந்தது. வீட்டின் உள்ளே சென்று ஜூலியட்டிடம் நடந்தவற்றை கூறினான். அவள் வெளியே வந்து பார்த்து உறுதி செய்ததும் ஆல்பெர்ட்டை திட்டினாள். விறகை மட்டும் வைத்து கொண்டு என்ன செய்வது முட்டாள். நீ சென்று மீனிடம் சென்று சாப்பாட்டிற்கு தானியங்கள் வேண்டும் என சொல்லு என்றான். அவனும் மீனிடம் சென்று கேட்டான். அதுவும் கொடுத்தது.
ஜூலியட் அலமாரி முழுக்க புடவையால் நிரம்பி வழிந்தது. சில காலங்கள் கழித்து ஒருநாள் அவள் தனது உறவினர் வீட்டில் நடந்த விசேஷத்திற்கு சென்றிந்தாள். அங்கு அவர்கள் பெரிய வீடு மற்றும் நகைகளுடன் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தார்கள். ஜூலியட்டிற்கு அதை பார்த்ததும் பேராசை கொப்பளிக்க ஆல்பெர்ட்டை நச்சரித்தாள். அவன் நம்மிடம் என்ன இல்லை வாழ்வதற்கான அனைத்தும் உள்ளது. நானும் கடலுக்கு போகாமல், நன்றாகவே வாழ்கிறோம். இதற்குமேல் என்ன வேண்டும் ஏன் இப்படி இருக்கிறாய் என்றான். ஜூலியட் அதை கேட்பதாக இல்லை. சரி மீனிடம் சென்று கேட்கிறேன் என்றான்.
ஜூலியட் அலமாரி முழுக்க புடவையால் நிரம்பி வழிந்தது. சில காலங்கள் கழித்து ஒருநாள் அவள் தனது உறவினர் வீட்டில் நடந்த விசேஷத்திற்கு சென்றிந்தாள். அங்கு அவர்கள் பெரிய வீடு மற்றும் நகைகளுடன் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தார்கள். ஜூலியட்டிற்கு அதை பார்த்ததும் பேராசை கொப்பளிக்க ஆல்பெர்ட்டை நச்சரித்தாள். அவன் நம்மிடம் என்ன இல்லை வாழ்வதற்கான அனைத்தும் உள்ளது. நானும் கடலுக்கு போகாமல், நன்றாகவே வாழ்கிறோம். இதற்குமேல் என்ன வேண்டும் என் இப்படி இருக்கிறாய் என்றான். ஜூலியட் அதை கேட்பதாக இல்லை. சரி மீனிடம் சென்று கேட்கிறேன் என்றான்.
கடலில் சென்று மீனை அழைத்தான். அதுவும் வந்தது, இவன் நகைகள் பெரிய வீடு என கேட்டான். அதுவும் உன் விருப்பபடியே என்று சொல்லி கடலுக்குள் சென்றது. வீட்டிற்கு வந்து பார்த்தால் அனைத்துமே மாறியிருந்தது. ஆல்பர்ட் அதிர்ச்சியில் உறைந்தான். சரி இதற்குமேல் எதுவும் வேண்டாம். மகிழ்ச்சியாக வாழலாம் என்றான். ஆனால் இப்போதுதான் புது பிரச்சனை முளைத்தது. இவ்வளவு தங்கம் வீட்டில் இருந்தால் வீட்டை திருடர்கள் சூறை ஆடி விடுவார்கள். பாதுகாப்பு வேண்டும் என்ன செய்யலாம் என்றாள் ஜூலியெட். நாம் இருக்கிறோமே பார்த்துக்கொள்ளலாம் என்றான் ஆல்பர்ட். இல்லை இல்லை நீ மீனிடம் சென்று கேட்டு வா என அவனை அங்கிருந்து விரட்டினாள்.
ஆல்பர்ட் கடலை நோக்கி தயங்கி நடந்தான். மீனை சத்தமாக கூப்பிட்டான். மீன் வரவில்லை, ஆனால் ஒரு வெளிச்சம் மேலே தோன்றியது. கடலுக்குள் இருந்து மீனின் சத்தம் கேட்டது.ஆல்பர்ட் மனைவி சொல்லியதை மீனிடம் சொன்னான். மீன் அப்படியா, உன் விருப்பப்படியே ஆகட்டும் என்றது. அந்த வெளிச்சமும் மறைந்தது.

ஆல்பர்ட் வீட்டை அடைந்தான். வீட்டின் முன்னாள் ஏதோ பெரிய உருவம் இருப்பதை உணர்ந்தான். மீன் தான் பாதுகாப்பிற்கு ஏதோ ஒன்றை அனுப்பியிருக்கிறது என்று எண்ணினான். அருகில் வர வர அந்த உருவம் பயங்கரமாக இருந்தது. கை விரல்கள் நீளமாக, நகங்கள் கோரமாக, பற்கள் பெரிதாக ஒரு அரக்கியை போல தெரிந்தது. அருகில் வந்து பார்த்தாள் அது ஜூலியட். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளிடம் நீ எப்படி இப்படி மாறினாய் என்றான். அந்த மீன்தான் என்னை இப்படி மாற்றி விட்டது இனிமேல் யார் வருவார்கள் என் வீட்டிற்கு என்று கலங்கினாள்.
ஆல்பர்ட் உடனடியாக கடலுக்கு விரைந்தான். எவ்வளவு கூப்பிட்டும் மீன் வரவில்லை, பதிலும் தரவில்லை. ஜூலியட்டின் பேராசையால் அரக்கி ஆனதுதான் மிச்சம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications