Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்!.. கடைக்குட்டி கார்டெல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஸ்கூல் ஓபன் ஆகலைனு சோகமா இருக்கீங்களா.கவலைய விடுங்க. ஒரு சூப்பரான இளவரசர் கதையோட வந்துருக்கேன். படிக்க ரெடியா கடைக்குட்டிங்களா? சொல்றேன் கேளுங்க

நம்ம கதையோட நாயகன் கடைக்குட்டி கார்டெல். அதென்ன கடைகுட்டின்னு பாக்குறீங்களா. பல வருடங்களுக்கு முன்னாடி ஒரு ராஜா நாட்டை அழகா ஆட்சி புரிந்து வந்தாரு.அவருக்கு மொத்தம் ஏழு பசங்க. முதல் ஆறு பசங்களும் பலசாலிங்க. ராஜாக்கு பக்க பலமா இருக்குறவங்க. எல்லாருக்கும் ஒவ்வொரு பொறுப்பு அரசரால் வழங்கப்பட்டிருக்கு. அவரவர் பொறுப்புகளை சிறப்பா செய்து வந்தாங்க. ஆனா ஏழாவது மகனோ வயதிலும் வலிமையையும் குறுகியவன். அரசருக்கு இவனோட உதவு தேவைப்பட்டதனால மிகவும் செல்லமா வளர்க்கப்படுறான். அதனாலயே தன்னோட அண்ணண்மார்களால் கேலி செய்யப்படுவான்.

ஒருநாள் கார்டெல் தன்னோட அறையிலிருந்து வெளிய வரும்போது தன்னோட அண்ணன்களை பாக்குறான். வணக்கம் தெரிவிக்கிறான். அவனோட அண்ணன்களோ கார்டெல்லை பார்த்து, "என்ன கார்டெல் இப்போதான் எழுந்தியா? உன்னோட அறையில காற்றோட்டம் எப்படி இருக்கு, மெத்தை நல்ல மென்மையா இருக்கா?" கேட்டு சிரிக்கறாங்க. கார்டெல் திருதிருவென முழிக்கிறான். "அது சரி ஏதாவது குறைன்னா சொல்லு ,அப்பா சரிசெய்வர். நீ அப்பாவோட செல்லமாச்சே!"னு கேலி செய்றாங்க. சோகமான கார்டெல் அவனோட அறை கதவை மூடிக்கிட்டான். இது மாதிரியான நிகழ்வுகள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கும். இதேமாதிரி ஒருநாள் எல்லாரும் சாப்பிட்டுட்டு இருந்தாங்க. இளவரசர் கார்டெல்லும் சாப்பிட வந்தான். அண்ணன்கள் எல்லாரும் மாமிசம் சாப்பிட்டுட்டு இருந்தாங்க. கார்டெல்லும் மாமிசம் சாப்பிட ஆசைப்பட்டான். ஆனால் பணியாளோ "இளவசரே, உங்களுக்கு அரசர் ஊட்டச்சத்து உள்ள உணவை அளிக்க கூறியிருக்கிறார்."அதனால் இதை உண்ணுங்கள்னு" ஒரு உணவை கொண்டுவந்து கொடுக்கிறார். கார்டெல் அவனிடம், "நான் ஒன்றும் வலுவற்றவன் இல்லை. எனக்கு மாமிசம் வேண்டும்" என்று கேட்கிறான். அதற்கு ஒரு அண்ணன் சொல்கிறார், "மாமிசம் உனக்கு செரிமானம் ஆகாது குட்டி பையா"னு சொல்லிட்டு சிரிக்கிறார். கோபமாக அங்கிருந்து எழுந்து போகிறான்.

Kids story in tamil : The little boy Prince

அவனுக்கு இளவரசன் என்ற எண்ணமே போய்விட்டதாக உணர்ந்தான். மறுநாள் காலை பணியாட்கள் அரசரிடம் ஓடிவந்து ஆறு இளவசர்கள் மாளிகையில் இல்லை என்று கூறுகிறார்கள். அப்போதுதான் விஷயம் தெரிகிறது. இளவரசன் கார்டெல்லை தவிர மற்ற இளவசர்கள் நடுஇரவு சில படைவீரர்களை அழைத்துக்கொண்டு தடைசெய்யப்பட்ட பகுதிக்கு சென்றனர் என்று. ஆனால் அவர்கள் திரும்பவில்லை. அரசருக்கு இது பெரும் கவலையானது. "ஏன் மற்ற இளவரசர்கள் கார்டெல்லை போல அறிவாக செயல்படுவதில்லை" என புலம்பினார். தனது படைவீரர்கள் அனைவரையும் அனுப்பி தேடச்சொல்ல உத்தரவிடுகிறார். இளவரசன் கார்டெல் அரசரிடம், "அப்பா அண்ணன்களின் இந்த நிலை எனக்கும் கவலை தருகிறது. நான் நமது படைவீரர்களை வழிநடத்தி போகிறேன்". என்றான். அரசர் அதற்கு, மகனே, நீ குழந்தை! வீரர்கள் பார்த்துக்கொள்வார்கள், நீ விடு. என்றார். "இல்லை அப்பா. அண்ணன்மார்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும் நான் பார்த்து கொள்கிறேன். நம்பி அனுப்புங்கள் என்று கெஞ்சி சம்மதம் வாங்கிக்கொண்டான்.

தன்னுடன் சில வீரர்களை மட்டும் கூட்டிக்கொண்டு காட்டுக்குள் சென்றான். பாதை பிரியும் இடம் வந்தது. அங்கு இளவரசன் இடதுபக்கம் செல்லலாம் என்றான். படைத்தளபதி மற்ற வீரர்களிடம், இன்றுதான் இவன் கோட்டையைவிட்டே வெளியே வருகிறான். இவனுக்கு என்ன தெரியும். நாம் அந்த பக்கம் போகலாம் என்றார். கார்டெல்லுக்கு அது சரியாகபடவில்லை. படை இரண்டாக பிரிந்தது. தளபதி மூத்த வீரர்களை கூடிட்டுக்கொண்டு அவருடைய பாதையில் சென்றார். இளவரசன் அவன் யோசித்த வழியில் சில வீரர்களை கூடிட்டுக்கொண்டு போனான்."அவங்க மேல தப்பு இல்லை. அவங்கள வழிநடத்த நா இன்னும் பக்குவபடல. சரி வாங்க பாத்துப்போலாம்னு" தன்னோட சக வீரர்களிடம் பேசிட்டு அங்க இருந்து நகர்ந்து போறாங்க. ரொம்ப தூரம் நடந்த பிறகு ஒரு அடர்ந்த காட்டை பாக்குறாங்க. "இவ்ளோ பெரிய காட்டுல என்னோட சகோதாரர்களா எப்படி கண்டு புடிக்கறது தெரிலையேனு" சொல்றான்.

ஒரு புதற்குள்ள இருந்து கரும்சிறுத்தை வந்து, "அங்க தெரியுற அரண்மனைல ஒரு அழகான பொண்ணு இருக்க அவகிட்ட கேளு சொல்லுவானு சொல்லுது." கரும்சிறுத்தையை பார்த்து எல்லாரும் பயந்தாங்க. அதேநேரத்துல எப்படி அது பேசுதுன்னு ஆச்சர்யபட்டாங்க.

"என்னோட பெயர் வைலெட். இந்த காடு மாயாஜாலங்கள் நிறைந்தது. என்னையும் சேத்துதான் சொல்றேன். இங்க இருக்குற எல்லா உயிரினங்களும் பேசும்னு" கரும்சிறுத்தை அதை அறிமுகப்படுத்திக்குது.

இளவரசன் தன்னோட அண்ணன்களை பத்தி சொல்றான். "நேத்து நா அந்த ஆறு பேரையும் பாத்தேன். இந்த அரண்மனைல இதயமில்லாத ஜாயிண்ட் மந்திரங்களை தப்பா பயன்படுத்தறதா சொன்னாங்க. அத பாக்க போறதா சொன்னாங்க. நா பயந்து அங்க இருந்து கெளம்பிட்டேன். நீங்க அங்க போய் பாருங்கனு" சொல்லுது. இளவரசன் அந்த அரண்மனை கதவு கிட்ட போய் தட்டி, "இங்க பெண்மனி யாராவது இருக்கீங்களா?னு கேக்குறான். கதவுல இருந்து ஒரு பெண்மணி வர்றா. ஆச்சர்யமா பாத்த இளவரசன் கிட்ட, "நா ஒரு புறா. இந்த கதவு கிட்ட தெரியாம வந்து மோதிட்டேன்.இங்க வந்து மாட்டிகிட்டேனு" சொல்றா. கார்டெல் தன்னோட அண்ணன்கள பத்தி கேக்குறான். அதற்கு அந்த பெண்மணி, "ஆமா அந்த ஆறு பேரும் இங்க வந்தாங்க. நான் அவங்க கிட்ட உதவி கேட்டேன். அவங்களும் எனக்கு உதவு செய்யறான்னு சொல்லிட்டு உள்ள வந்தாங்க. ஆனா திரும்ப வரவே இல்ல. என்ன ஆச்சுன்னு தெரியலனு?" இளவரசன் கிட்ட சொன்னா. கோவமான இளவரசன், "அந்த ஜாயிண்ட் இவ்வளவு கொடூரமானவனா?.நா அவன விடமாட்டேன். இளவரசர்களான என்னோட அண்ணன்கள சிறைவெச்சுருக்கான். நான் உன்னையும் காப்பாத்துறான். ஜாயிண்ட ஒரு கை பாக்குறேனு" கொந்தளிக்குறான். புறாபெண்ணோ, "உன்னோட அண்ணன்கள் கம்பிரமானவங்களா பலசாலிங்களா இருந்தாங்க. அவங்களாலேயே ஜாயிண்ட ஒன்னும் பண்ண முடில. உன்னோட பலத்த வெச்சு ஒன்னும் பண்ணமுடியாது. நீ வேற வழிய யோசிச்சாகனும்னு" சொல்றா. இளவரசன் யோசிக்கிறான். "அந்த ஜாய்ண்ட்டோட இதயம் அந்த இதயத்தை கண்டுபுடிச்ச போதும். எல்லாம் சரி ஆயிரும். நா அதுக்கு வழி பண்றனு" சொல்லி அங்க இருந்து கெளம்பறான்.

வயலட்(கரும்சிறுத்தை)யோட உதவியோட இளவரசன் இதயம் இருக்க வீட்டை அடைஞ்சான்."இந்த வீட்டுக்குள்ள ஒரு கிணறு இருக்கு.அதுல தா அந்த ஜாய்ண்ட்டோட ஹார்ட் இருக்கு.ஆனா இதுக்கு முன்னாடி நெறைய பேர் இங்க வந்து அடிபட்டு திரும்ப போயிருக்காங்க. நீ பத்திரமா பாத்து போகணும்."னு சொல்லுது. இளவரசன் அங்க போக தயாராகுறான். "எனக்கு இந்த இடம் ரொம்ப பழக்கப்பட்ட இடம் மாதிரி இருக்குனு" சொல்லிட்டு அங்க இருந்து கெளம்புது வயலட். இளவரசன் உள்ள போறான். நிறைய பொருட்கள் ஒடஞ்சு கிடந்தது. கிணறை பாத்து எப்படியோ கயிறைவெச்சு உள்ள இறங்கிட்டான். ஜாய்ண்ட்டோட இதயத்தை தேடுறான். அப்போ அங்க ஒரு வாத்து இளவரசனை பார்த்து வேகமா வந்துச்சு. பயந்து போன இளவரசன் அதுகிட்ட சொல்றாரு, "இங்க பாரு நான் அந்த ஜாய்ண்ட்டோட இதயத்தை தேடி வந்துருக்கேன் வேற ஏதும் எனக்கு வேணாம்னு சொல்றான்".

வாத்து அதற்கு சொல்லுது, "இதை முன்னாடியே சொல்லிருக்கவேண்டியது தானே. இந்த பெட்டிக்குள்ள தான் இருக்குனு". சொல்லிட்டு ஒரு பெட்டியை தருது. இளவரசன், "நீயும் பேசுவியா

வாத்தேனு! கேக்குறான். அதற்கு வாத்து சொல்லுச்சு. "நான் வாத்து இல்ல. முன்னாடி இந்த வீட்டோட உதவியாளர். ரொம்ப வருஷம் முன்னாடி இந்த இடம் ஒரு மந்திரவாதியால ஆளப்பட்டது. சாலமன் அன்பான மனிதர். ஒருநாள் அவர் தனக்கு புடிச்ச பெண்மணியோட பேசிட்டு இருந்தாரு. அத பாத்த அந்த மந்திரவாதி. கோபப்பட்டு சாலமன் ஆ இதயமற்ற ஜாயிண்ட்டா மாத்திட்டான். அந்த பெண்மணியை கரும்சிறுத்தையா மாத்திட்டான். தடுக்க போன என்ன வாத்தா மாத்திட்டான். கொஞ்ச நாளில அந்த மந்திரவாதி இறந்து போறான். ஆனா அந்த மந்திரம் அப்டியே இருக்கு. அவர் ஆசைவெச்ச பெண்மணி தேடி பாக்கறாரு. அவள் எங்கேயும் அதனால ஒரு கோவமுள்ள அரக்கனா ஆயிட்டாரு. நீ இதை கொண்டு போய் ஜாயிண்ட் கிட்ட சேத்திடுனு" அந்த பெட்டைய குடுக்குது.

இளவரன் அந்த பெட்டியை கொண்டு போறான். ஜாயிண்ட் இருக்க அரண்மனை போறான். கதவை திறக்குறான். உள்ள போய் ஜாயிண்ட்டா பாக்குறான். மிகவும் ஆக்ரோஷமாக இருந்த அந்த ஜாயிண்ட் இளவரசனை புடிக்க வருது. இளவரசன் அந்த பெட்டியை திறக்குறான். ஜாய்ண்ட்டோட இதயம் அதுகிட்ட போய் சேருது. அன்பான சாலமன் ஆ மாறுறாரு. அவர்மட்டும் இல்லாம எல்லாரும் சரி ஆகுறாங்க. கதவு பெண்மணி புறவா மாறுது. வாத்து வீட்டு பணியாளரா மாறுறாங்க. கரும்சிறுத்தை ஒரு அழகிய பெண்ணா மாறுது. அதுதான் சாலமன் தேடுன பெண்மணி. இரண்டுபேரும் சேருறாங்க. கடைக்குட்டி அவனோட அண்ணன்களை காப்பாத்துறான். எல்லாரும் குட்டி இளவரசன் கார்டெல்லை பாராட்டுறாங்க. அவனுக்கான மரியாதையை அதுக்கு அப்பறம் கிடைக்க ஆரம்பிக்குது.

குட்டிஸ் ஸ்டோரி எப்படி இருந்துச்சு. பலத்த வெச்சு யாரையும் குறைவா எடைபோட கூடாதுனு புரிஞ்சுதா. சீக்கரம் இன்னொரு கதையோட திரும்ப வரேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+