குழந்தை நீதி கதைகள்: ஜீ பூம் பா.. வந்தது பூங்கொத்து ஆ இல்லை? மந்திரவாதியின் கதை
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டீஸ்.. வெள்ளிக்கிழமை வந்தாச்சு, ரெடியா இருக்கீங்களா சுட்டீஸ் நம்ம மந்திர உலகத்துக்கு போக. என்ன கதைன்னு சொல்ல மறந்துட்டேன் பாத்தீங்களா, மாய வித்தைகள் அறிந்த ஒரு மந்திரவாதியின் மாயன்கள் காணாம போச்சுன்னா என்ன நடக்கும்னு படிக்க போறோம். வாங்க மாயாஜாலத்தை படிக்கலாம்..
ஒரு அழகான பெரு நகரம். எப்போவும் ஜொலி ஜொலிக்கும் ஒரு தண்ணீரால் நிரம்பிய பாவுண்டைன். அதில் வரக்கூடிய தண்ணீர் ரொம்ப கலர்புல் ஆ இருக்கும். அப்புறம் அந்த நகரமே ஒரு மாதிரி பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்க கூடிய நகரம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் கைகளை சுழட்டினாலே பிரகாசமான நட்சத்திரங்கள் வரும். அவர்கள் கை விரல்களால் சொடுக்கினால் கலர்புல் வெளிச்சம் வந்து மகிழ்ச்சியை கொடுக்கும்.

இந்த நகரத்திலே தான் நம்ம மேஜிசியன் மந்திர தந்திர நிகழ்ச்சிகளை செய்து வந்தார். இவரது நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காகவே மொத்த மக்களும் கூடி விடுவார்கள். அவர் மாயாஜாலங்கள் திடீரென பூ மழை பொழிய வைப்பார். திடீரென மேக கூட்டங்களை மக்களுக்கு நடுவே இறக்கி விடுவார். அவர் செய்யும் மாயாஜாலங்களால் அவரது நிகழ்ச்சிக்கு எப்போதுமே கூட்டம் அள்ளும். ஆனால் நிலைமை அப்படியே இருக்கவில்லை.
நகரங்களுக்கிடையே போர் தொடங்க ஆரம்பித்தது. அவரவர்கள் உயிர் பிழைக்க அங்கும் இங்குமாய் தப்பி ஓடி கொண்டிருந்தார்கள். நம்ம மாய நகர் மேல் பனி படர்ந்த மாதிரி மேகங்கள் சூழ்ந்தன. இந்த நகரத்தில் மட்டும் எந்த வித போர் குண்டுகளும் தாக்கவில்லை. மக்கள் பயத்தின் விளிம்பில் இருந்தார்கள். அவர்கள் நகரத்தின் பிரகாசம் மங்க ஆரம்பித்தது. கருமேகங்களால் சூழ்ந்த நகரமாக மாறியது. அந்த மிகபெரிய பவுண்டேனில் நீர் விழுவது நின்று போனது. மக்கள் கைகளில் இருந்த பிரகாசம் காணாமல் போனது.
இறுதியாக போர் முடிவுக்கு வந்தது. போர் நின்றாலும் மக்கள் இயல்பான நிலைக்கு வரவில்லை. மேகங்களும் அங்கிருந்து அகலவில்லை. அந்த நகரத்தில் இருந்த பீட்டர் என்ற சிறுவன் மட்டும் மிகவும் நம்பிக்கையோடு இருந்தான். தங்கள் நகரம் பழைய நிலைமைக்கு மாறும் என்று தினமும் ஜன்னலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். எப்போதும் போல மேஜிசியன் தனது நிகழ்ச்சியை தொடங்கினார். நினைத்த அளவுக்கு கூட்டம் இல்லை அவர் காட்டும் வித்தைகளை யாரும் விரும்பியும் பார்க்கவில்லை. அவர் சோர்வாக காணபட்டார். பழைய நிகழ்ச்சியில் மக்களின் உற்சாகத்தை நினைத்து பார்த்தார். ஏதாவது செய்து மக்களை குஷி படுத்த எண்ணினார். கூட்டத்தில் இருந்து ஒருவரை மேடைக்கு அழைத்தார்.
அங்க தான் வெடிச்சது பூகம்பம். அவர் கஷ்டப்பட்டு சில மந்திரங்களை போட்டார். அந்த மந்திரங்களால் வந்து விழுந்தது பெரிய யானை. அதுவும் அந்த பெண் மேலே விழுந்தது, அவரால் நடக்க முடியாமல் போனது. அரசர் மேஜிசியனை சிறையில் அடைத்தார். பிரகாசமாக இருந்த நகரம் இன்னும் இருளில் ஆழ்ந்தது. இருந்த ஒரு மகிழ்ச்சியும் போனது. அந்த யானையை ஒரு சங்கிலியால் கட்டி போட்டார்கள். பலரும் அந்த யானையை கொல்ல முடிவு செய்தார்கள். சிலரோ அது காட்டில் வாழ கூடிய மிருகம் நகரத்தில் வைப்பதை விட , அதன் கூட்டத்திற்கே திருப்பி அனுப்பி விடலாம் என கூறினார்கள்.
மேஜிசியனை தினமும் சிறையில் வந்து பார்த்த பெண் என்னை ஏன் இப்படி ஆக்கினாய். ஏன் மந்திரத்தை தவறாக உபயோகித்தாய் என கேட்டார். அதற்கு, தவறான மந்திரம் இல்லை அழகான பூங்கொத்து வரவே மந்திரம் போட்டேன் யானை வரும் என எதிர்பார்க்கவில்லை. முன்பெல்லாம் என் நிகழ்ச்சியை அதனை ஆர்வமாய் பார்த்த மக்கள் ஏதோ விருப்பமே இல்லாமல் பார்த்தார்கள். அவர்களின் கவனத்தை திருப்பவே அவ்வாறு செய்தேன். என் மேல் நீங்கள் நம்பிக்கை வைத்திருந்தால் கண்டிப்பாக இப்படி நடந்திருக்காது என கூறினார் மேஜிசியன்.
இது ஒரு பக்கம் நடக்க, பீட்டர் யானையை அதன் காட்டிற்கு அனுப்புவதில் தெளிவாக இருந்தான். அரசரோ இதை எப்படி அனுப்ப முடியும் என யோசைனையில் தீவிரமாக மூழ்கினர். அப்போதான் ஒரு நிமிடம் அனைவரும் சிலையை போல் நின்றார்கள். நம்பிக்கையின் தேவதை அங்கு தோன்றினால், பீட்டர் காதுகளில் எங்கு தொடங்கியதோ அங்கே விடை கிடைக்கும் என காதுகளில் கூறி விட்டு மறைந்தார். அனைவரும் இயல்பு நிலைக்கு வந்தனர். பீட்டர் காதுகளில் கேட்டதை மீண்டும் மீண்டும் யோசித்தான்.
அப்போதுதான் அவனுக்கு மேஜிசியன் கொண்டு வந்த யானை அப்போ அவரால் மட்டுமே அதை திருப்ப அனுப்ப முடியும் என கூறினான். அரசரும் அதற்கு சரி என கூறினார். மேஜிசியனை உடனடியாக சிறையில் இருந்து விடுவித்தார். யானையை அழைத்து கொண்டு பவுண்டைன் இருந்த இடத்திற்கு வந்தார்கள் மக்களும் அங்கு கூடினார்கள். பீட்டர் மற்றும் மேஜிசியன் அங்கு வந்தார்கள். அனைவரும் ஒரு சேர நம்பிக்கையுடன் தொடங்குங்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்றனர். மேஜிசியன் மந்திரத்தை போட்டார். ஒரு நிமிடம் அனைத்தும் ஸ்தம்பித்தது.
நம்பிக்கை தேவதை வந்தார். யானையின் அதன் கூட்டத்திற்கே அனுப்பினாள். நகரம் பழைய நிலைக்கு திரும்பியது. ஒரு பிரகாசம் கிடைத்தது. நம்பிக்கை தேவதை மறைந்தார். மக்கள் இயல்பாக மாறினார். தங்களின் நகரம் பழைய நிலைக்கு மாறியதை கண்டு உற்சாகம் மிகுந்து நடனமாடினர். பவுண்டேனில் நீர் விழ ஆரம்பித்தது. பீட்டரின் நம்பிக்கை வீண் போகவில்லை. மேஜிசியனும் தனது நிகழ்ச்சியை தொடங்கினார். முன்பை விட மக்கள் இன்னும் ஆர்வமாய் அவரது நிகழ்ச்சிக்கு சென்றார்கள்.












Click it and Unblock the Notifications