குழந்தை நீதி கதைகள்: ரகசியத்தை காத்தால் தலை தப்பும்.. ரகசியம் காக்கப்பட்டதா?.. விசித்திர கதைகள்..
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ் , வெள்ளிக்கிழமை வந்தாச்சு நாளைக்கு ஸ்கூல் லீவு இல்லையா, அதனால இந்த மாயாஜால கதையை படிச்சிட்டு சனிக்கிழமை விடுமுறையை கொண்டாடுங்க. அழகான அக்கா, தம்பி பத்திதான் இந்த கதையே. உங்கள் சகோதர , சகோதரிகளிடம் சண்டை போட்டுக்காம இந்த கதையை கண்டிப்பா படிச்சு சொல்லுங்க. வாங்க ஸ்டோரி படிக்கலாம்..
ஒரு அழகான ராஜ்ஜியம் இருந்தது. அரசருக்கு மொத்தம் 12 பிள்ளைகள். அதில் 11 இளவரசர்கள் மற்றும் ஒரு அழகான இளவரசியும் இருந்தார். 12 பேருமே அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்க கூடியவர்கள். 12 பேருமே ஒற்றுமையாக இருந்தார்கள். அரசருக்கு என்ன இருந்தாலும் ஏதோ தனிமையில் இருப்பதாக உணர்ந்தார். அதனால் மறுமணம் செய்து கொண்டார். புது அம்மா வர போறாங்க அப்படினு ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க நம்ம இளவரசர்கள் மற்றும் இளவரசி. ஆனால் , அவங்க எதிர் பார்க்காத ஒன்று நடந்தது.

ராணியாக வந்தவள் ஒரு சூனியக்காரி, ராஜ்ஜியத்தை ஆளவேண்டும் என்ற ஆசையில் முதலில் இளவரசியை ஒரு ஏழை குடும்பத்தில் வளரும்படி ஆணையிட்டார். அவரும் அங்கிருந்து கிளம்பினார். அடுத்து 11 இளவரசர்களும் ரொம்பவே பயந்து போய் இருந்தார்கள். அவர்களை அசிங்கமான பறைவைகளாக மாறும்படி மந்திரங்களை போட்டார் சூனியக்கார ராணி. ஆனால் அவர்கள் மிகவும் சிறியவர்கள், கள்ளம் கபடமற்றவர்கள் என்பதால் அழகிய அன்ன பறவைகளாக மாறினார்.
அவர்களும் நாட்டை விட்டு பறந்தனர். நாட்கள் ஓடின இளவரசி வளர்ந்து பெரியவள் ஆனாள். சரி கோட்டைக்கு செல்லலாம் என முடிவெடுத்தாள். அங்கிருந்து கோட்டைக்கு கிளம்பினாள். அவள் முன்பை விட இன்னும் அழகான இளம்பெண்ணாக மாறியிருந்தாள். இவள் வருவதை பார்த்த சூனியக்காரி இவள் இத்தனை அழகாக இருக்கிறாளே அரசர் இவளை ராஜ்ஜியத்தில் அனுமதித்தால் நம்ம நிலைமை என்னவாகும் என எண்ணி சட்டென அவளை மறித்தாள். ஆகா, என் அழகு செல்லமே நீ இத்தனை அழகாக இருக்கிறாயே முதலில் என் அறைக்கு வா, பின்பு தந்தையை காண செல்லலாம் என பாசமாக பேசி அவளை , தனது அறைக்கு அழைத்து சென்றால் அந்த சூனியக்காரி. அவளும் நம்பி போனால், அவள் அறையில் இருந்த கண்ணாடியின் முன் அவளை அமர வைத்தாள் சூனியக்காரி. அந்த கண்ணாடி ஒரு மாயக்கண்ணாடி என்பதால் இளவரசியை அசிங்கமான பெண்ணாக மாற்றியது. இதை அறியாத இளவரசி அரசவைக்கு சென்றாள். இவள் பார்த்த அரசர்க்கு நீ என் மகளே கிடையாது , அவள் உன்னை விட அழகானவள் வெளியே போ என விரட்டினார். ராணியின் சூழ்ச்சியை அப்போதுதான் உணர்ந்தாள் இளவரசி.
வெளியே வந்ததும் தம்பிகளை எண்ணி அழுதாள், காட்டுப்பகுதியை நோக்கி நடந்தாள். எங்கு போய் தேடுவேன் 11 பேரையும், என நினைத்து கொண்டே நடந்தாள். திடீரென காட்டில் ஒரு வினோத சத்தம் கேட்டதும் ஒரு மரத்தின் பின்னால் ஒதுங்கிக்கொண்டாள். வயதான பெண்மணி ஒருவரை பார்த்தாள் இளவரசி, அவர் இவளை பார்த்ததும் இந்த காட்டுக்குள் என்ன செய்கிறாய் என கேட்டாள். என் தம்பிகளை தேடி வந்தேன் அவர்கள் 11 பேர் என கூறினாள் இளவரசி.
இங்கு அப்படி யாரையும் பார்த்ததில்லை ஆனால் அந்த குளத்தில் 11 அன்னப்பறவைகளை பார்த்திருக்கிறேன் என்றார். அவருக்கு நன்றி கூறிவிட்டு அந்த குளம், நதி அப்படியே நதி கலக்கும் கடலுக்கும் வந்துவிட்டாள் இளவரசி ஆனால் அவர்களை காணவில்லை. நேரம் இருட்ட ஆரம்பித்தது, தூரத்தில் ஏதோ பறந்து வருவது போல் உணர்ந்தாள். ஆமாம் அது இளவரசர்கள்தான் . தரைக்கு வந்ததும் இளவரசர்களாக மாறினார்கள். அவர்களுக்கு பகலில் பறவைகளாகவும் இரவில் இளவரசர்களாகவும் மாற சாபம் தான் கிடைத்தது.
தம்பிகளை பார்த்த இளவரசி சந்தோஷமடைந்தாலும், அவர்களை பழைய நிலைக்கு மாற்ற எண்ணினாள். அவர்கள் அவளை ஒரு துணியில் அமர வைத்து வானில் பறந்து தூக்கி சென்றனர். அவளுக்கு அனைத்தும் புதுமையாக இருந்தது, மேகங்கள் நடுவில் பறந்தால், வளர்ந்து உயர்ந்த மரங்களின் மேலே, மாளிகைகளின் மேலே என அந்த காட்சிகள் அவளுக்கு ஒரு புது உணர்வை கொடுத்தது. அவர்கள் அனைவரும் ஒரு குகைக்கு சென்றார்கள். அங்கு ஓய்வெடுத்தார்கள்.
இரவில் இளவரசி கனவில் ஒரு தேவதை வந்தாள். அவளை பார்ப்பதற்கு காட்டில் இவளுக்கு வழிகாட்டிய வயதான பெண்மணி போலவே இருந்தாள். உன் சகோதரர்களை பழைய நிலைக்கு நீ மாற்ற வேண்டுமானால் கோசிபியம் இலைகளை பறித்து அதில் இருந்து நூல் திரித்து உன் கைகளால் உன் சகோதர்களுக்கு கோட் தயாரிக்க வேண்டும் , ஆனால் நீ இதை தொடங்கி, முடியும் வரை யாரிடமும் பேசக்கூடாது. என்ன நேர்ந்தாலும் பேசக்கூடாது. மீறி பேசினால் 11 பெரும் இறந்து விடுவார்கள் என்று தேவதை சொன்னாள். இதை கனவாக மட்டும் இளவரசி எடுத்து கொள்ளவில்லை.
காட்டுக்குள் இலைகளை பறித்து நூல் திரித்து ஒவ்வொரு கோட்டாக தயாரிக்க ஆரம்பித்தாள். இரவில் திரும்பி வந்த சகோதர்கள் அவளிடம் என்ன செய்கிறாய் என கேட்டார்கள். அவள் பதில் ஏதும் கூறவில்லை. மாறி மாறி கேட்டும் வாய் திறக்கவில்லை இளவரசி. கடைசி தம்பி மட்டும் வந்து அவள் கைகளை பார்த்தான். கைகளில் செடிகளின் இலைகள் குத்தி காயமாகி இருந்தது. அவன் அழுதான், அந்த கண்ணீர் துளிகள் பட்டு அந்த காயம் குணமாகியது.
நாட்கள் ஒவ்வொன்றாக செல்ல செல்ல ஒரு கோட் செய்தாள். அவளுக்கு அருகில் இருந்த ஒரு எலி தினமும் உதவியது. ஒருநாள் காட்டில் இலைகளை பறித்து கொண்டிருக்கும் போது அந்த நாட்டின் இளவரசன் யார் நீ, இங்கு என்ன செய்கிறாய் என கேள்விகளை கேட்டான். அவள் எதற்கும் பதில் கூறவில்லை. இளவரசன் என்னுடன் அரண்மனைக்கு வா, என அழைத்துக்கொண்டு சென்றான். அது மிகப்பெரிய அரண்மனை, ஆனால் அவளுக்கு அது மகிழ்ச்சியாக இல்லை, சகோதரர்களை மிஸ் செய்தாள். இளவரசன் அவளிடம் உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது யோசித்து கூறு என சொன்னான். அவள் அதற்கும் பதில் ஏதும் கூறவில்லை. உன்னுடைய சில பொருட்களை அங்கிருந்து எடுத்து வந்தேன் என அந்த கோட்களை கொடுத்தான். அவளுக்கு ஒரு நிம்மதி கிடைத்தது. மறுபடியும் அவள் கோட் செய்ய ஆரம்பித்தாள்.
இதுவரை 10 கோட்களை செய்து விட்டாள். கடைசி கோட் செய்ய வேண்டும் , ஆனால் இலைகள் இல்லை . அரண்மனைக்கு வெளியே செல்ல முடிவெடுத்தாள். அவள் அந்த இலைகளை பறிக்க சென்றால், இவள் இலைகளை பறிப்பதை பார்த்த தலைமை காவலாளி இது மந்திரங்களை செய்யக்கூடிய இல்லை இதை பறித்து என்ன செய்ய போகிறாய், நீ ஒரு சூனியக்காரி தானே, இரு அரசரிடம் உன்னை அழைத்து செல்கிறேன் என்றார். இளவரசர் உன்னை நம்பினேனே என மனதுருகினார். அரசரும் அவளை சிறையில் அடைத்தார்.
இளவரசி மீண்டும் அமைதி காத்தாள். அவள் சிறையில் இருக்கும்போது அந்த உடைகளை காவலாளி அவளது அறையில் கொடுத்து சென்றான். கடைசி கோட் ஆனால் இலைகள் இல்லாமல் என்ன செய்வது இன்றுந்தான் கடைசி நாள் இதை எப்படி முடிப்பது என கவலையாக இருந்தாள். அந்த சமயம் அந்த ஜன்னலில் எலி ஒன்று வந்தது. அது அந்த எலிதான். அது அவளுக்குகாக காட்டுக்குள் சென்று இலைகளை கொண்டு வந்தது. இளவரசியும் வேக வேகமாக நூலை தயாரித்தாள். விடிய ஆரம்பித்தது. இளவரசியை நாடு கடத்த கப்பல் வந்தது. இளவரசி வேகமாக கோட் தயாரித்து கொண்டிருத்தாள். அந்த கிராம மக்கள் அவளை வினோதமாக பார்த்தார்கள்.
அந்த வண்டி கடல் பரப்பை எட்டியது. கோட் தயாரித்து முடித்தாள் இளவரசி. இப்போது கப்பல் அருகில் வண்டி வந்தது தூரத்தில் எதோ பறந்து வருவதை பார்த்தாள். ஆம் அது இளவரசர்கள் தான். அவர்கள் வருவதற்குள் அவர்கள் மேல் அந்த உடைகளை தூக்கி எறிந்தாள். தரை இறங்கவும் அவர்கள் பகலில் மனிதர்களாக மாறினார்கள். அவர்கள் பழைய நிலையை அடைந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள் இளவரசி. ஊர் மக்கள் அதிர்ச்சி ஆனார்கள். இளவரசி சத்தமாக நான் சூனியக்காரி இல்லை. என் சகோதரர்களுக்காக நான் பேசாமல் இருந்தேன் என்றாள்.
அந்நாட்டின் இளவரசர் அவளிடம் மன்னிப்பு கேட்டு என்னை மணந்து கொள்வாயா? என்றார். இளவரசியும் ஒப்பு கொண்டார். திருமணம் கோலாகலமாக நடந்தது. இப்போது 11 இளவரசர்களும் தங்கள் ராஜ்ஜியத்திற்கு சென்றார்கள். இளவரசி மற்றும் இளவரசர்கள் சேர்ந்து சூனியக்காரி ராணியை சிறையில் அடைத்தார்கள். அரசரும் மந்திர கட்டில் இருந்து விடுவிக்கபட்டார். ராஜ்ஜியம் செழிப்பாக மாறியது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications