Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: இந்த இரண்டு விஷயத்தை பண்ணிடாதே.. ரூல்ஸ் போட்ட மாயாவி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டீஸ், எப்படி இருக்கீங்க.. இன்னைக்கு என்ன கதை படிக்க போறீங்கனு நியாபகம் இருக்கா.. ஆமா மாயா கதைகள் தான். இன்னைக்கு நாம படிக்க போறது ஒரு பயங்கர மாயாவி பத்திதான். என்ன நடந்துச்சுனு படிச்சு தெரிஞ்சிக்கலாம் வாங்க

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரு கிராமத்தில் ஒரு பெரிய மாயாவி வாழ்ந்து வந்தான். அவனுக்கு இருந்த ஒரே ஆசை ஒரு அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்காக அவன் பல வேடங்களில் சென்று கிராமத்தில் இருக்கும் பெண்களை கடத்தி செல்வதை வழக்கமாக வைத்து இருந்தான். ஆனால் இவன் யாரையும் இதுவரை திருமணம் செய்யவில்லை. அவர்களை வீட்டிற்கு திரும்பி அனுப்பவுமில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. அதனால் வாலிப பெண்கள் கவனமாகவே அந்த ஊரில் இருந்தார்கள்.

Kids story in tamil : The Young Sister

அப்படித்தான் ஒரு பெண்ணை இந்தமுறையும் கடத்தி சென்றான். ஆனால் அவளையும் திருமணம் செய்யவில்லை. அந்த ஊரில் வெஸ்லி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு இரு சகோதரிகள் இருந்தார்கள்.

இவர்களை நோட்டம் விட்ட மந்திரவாதி வெஸ்லியின் வீட்டின் முன் ஒரு யாசகனை போல மாறி உணவை கேட்டு கதவை தட்டுகிறான். வெஸ்லியின் முதல் சகோதரி வந்து கதவை திறந்து சில பிரட் துண்டுகளை கொடுக்கிறாள். அவளை பார்த்ததும் அவன் வைத்திருந்த சாக்கு பைக்குள் அவளை கட்டி தூக்கி போட்டு அவனது இடத்திற்கு கொண்டு செல்கிறான்.

அங்கு போனதும் வெஸ்லியின் சகோதரியிடம் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு முன் எனக்கு சில வேலைகள் இருக்கிறது நான் போய் சில நாட்களில் திரும்பி வந்துவிடுவேன், அதுவரை இந்த வீட்டின் அறைகளுக்கான சாவி மற்றும் இந்த முட்டையையும் பத்திரமாக வைத்துக்கொள். முக்கியமாக அந்த கழுகு முத்திரை பொறிக்கப்பட்ட கதவின் சாவியை வைத்து அந்த பரணின் மேல் இருக்கும் அறையை திறந்து விடாதே என கூறிவிட்டு மாயாவி கிளம்பினான்.

வெஸ்லியின் சகோதரி , அந்த வீட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றாள். கடைசியாக அந்த கதவின் அருகில் சென்று திறக்கலாமா? வேண்டாமா? என யோசித்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு ஆர்வம் அப்படி என்னதான் இருக்கிறது என தெரிந்து கொள்ள அந்த கதவை திறந்தாள். கதவை திறந்த அவளுக்கு உள்ளே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அறையில் குளியல் டப் ஒன்று இருந்தது. அதன் உள்ளே எட்டி பார்த்ததும் அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது. அவள் கையில் இருந்த முட்டையையும் அந்த டப்பில் போட்டாள். அந்த டப்பில் முழுக்க இரத்தத்தால் நிறைந்த சில பெண்களின் உடல்கள் வெட்டப்பட்டு கிடந்தன. அவள் பயந்து போய் அந்த முட்டையை எடுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள். முட்டையில் ரத்தக்கறை பட்டதால் அதை சுத்தம் செய்ய முயற்சித்தாள். ஆனால் அந்த முட்டையில் ஒட்டிய கறையை அவளால் சுத்தம் செய்ய முடியவில்லை. வீட்டின் வெளியே மாயாவி வரும் சத்தம் கேட்டு பயந்து போனாள்.

அவளிடம் அந்த அறைக்கு சென்றாயா என கேட்டான். அவள் இல்லை என்று மறுத்தாள். அந்த முட்டையை பார்த்த மாயாவி நீ அந்த அறையை திறந்து பார்க்க ஆசைபட்டாய் அல்லவா, இனிமேல் அங்கேயே இரு என அவளை வெட்டி அந்த டப்பில் போட்டான். அவன் மீண்டும் திருமணம் செய்ய இன்னொரு பெண்ணை தேடி கொண்டு வந்தான் அவளும் அதே போல் நடக்க, அவளையும் வெட்டி அந்த டப்பில் போட்டான். இந்த முறை வெஸ்லியின் வீட்டிற்கு சென்றான்.

வெஸ்லியும் தனது சகோதரிகளுக்கு என்ன நடந்தது என தெரிந்துகொள்ள அவனுடன் சென்றாள். அங்கே போனவளிடம் அதே போல் முட்டை மற்றும் சாவியை கொடுத்துவிட்டு வெளியே சென்றான். கையில் இருந்த முட்டையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு அந்த வீட்டை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு அறையாக திறந்து கடைசியாக அந்த அறையையும் திறந்தாள். அந்த டப்பில் எட்டி பார்த்தவள் அவளது இரண்டு சகோதரிகள் இருப்பதை பார்த்து அதிர்ந்தாள். அவர்களை அதில் அப்படியே ஒன்று சேர்த்தாள். அவர்கள் உயிர் பிழைக்க ஆரம்பித்தார்கள்.

வெஸ்லியும் தனது சகோதரிகளுக்கு என்ன நடந்தது என தெரிந்துகொள்ள அவனுடன் சென்றாள். அங்கே போனவளிடம் அதே போல் முட்டை மற்றும் சாவியை கொடுத்துவிட்டு வெளியே சென்றான். கையில் இருந்த முட்டையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு அந்த வீட்டை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு அறையாக திறந்து கடைசியாக அந்த அறையையும் திறந்தாள். அந்த டப்பில் எட்டி பார்த்தவளுக்கு அவளது இரண்டு சகோதரிகள் இருப்பதாய் பார்த்து அதிர்ந்தாள். அவர்களை அதில் அப்படியே ஒன்று சேர்ந்தாள். அவர்கள் உயிர் பிழைக்க ஆரம்பித்தார்கள்.

Kids story in tamil : The Young Sister

மாயாவி வெளியில் வரும் சத்தம் கேட்கவே அந்த அறையில் அவர்களை ஒரு பகுதியில் மறைத்து வைத்து விட்டு கீழே இறங்கி வந்து அந்த முட்டையையும் கைகளில் எடுத்து கொண்டாள். அவன் அவளை பார்த்ததும் என் வார்த்தைகளை மதித்த உன்னையே திருமணம் செய்துகொள்கிறேன் உனக்கு என்ன வேண்டும் கேள் என்றான். வெஸ்லி அவனிடம் எனக்கு ஒரு கூடை நிறைய தங்க கட்டிகள் வேண்டும் அதை என் தந்தையிடம் நீ கொடுக்க வேண்டும் என்றாள். அதற்குள் நானும் திருமணத்திற்கு ஆயத்தமாகி விடுவேன் என்றாள். மாயாவியும் ஒரு கூடை நிறைய தங்க கட்டிகளை கொண்டு வந்தான். வெஸ்லி அதில் பாதி கட்டிகளை வெளியில் எடுத்துவிட்டு தனது சகோதரிகளை அதில் வைத்து மாயாவியிடம் அனுப்பினாள். அவனும் அவளை நம்பி அதை திறந்து பார்க்காமல் அப்படியே அவளது வீட்டிற்கு சென்றான்.

அவன் வருவதற்குள் ஒரு மண்டை ஓட்டை அழகாக அலங்கரித்து ஒரு நாற்காலியின் பின்புறமாக அமர வைத்தாள் வெஸ்லி. மேலும் மாயாவியின் நண்பர்களை வீட்டிற்கு திருமணத்திற்காக அழைப்பு விடுத்தாள். அனைவரும் வந்தார்கள். மாயாவியும் தங்க கட்டிகளை வெஸ்லி வீட்டில் கொடுத்து விட்டு திரும்பி வந்தான். மாயாவி அலங்காரம் செய்யப்பட்ட வெஸ்லியை நோக்கி நடந்தான். அந்த நேரம் வெஸ்லி வீட்டின் பின்புறமாக தப்பித்தாள். அந்த வீட்டை எல்லா புறமும் தாழிட்டாள். மொத்தமாக வீட்டை தீ வைத்து கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தாள் வெஸ்லி. தனது சகோதரிகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+