குழந்தை நீதி கதைகள்: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல - பவானிடா!
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், நான் திரும்ப வந்துட்டேன். இந்த வாரம் உங்களுக்கு உங்க ஃபரண்டு பத்தி ஒரு கதை சொல்ல போறேன். யாரு அந்த ஃபரண்டுனு பாக்கறீங்களா. அவ பேரு பவானி. மீதிய கதைல சொல்றேன். போலாமா கதைக்குள்ள.
ஒரு பெருநகரத்தில் பவானி என்கிற குட்டி பெண் குழந்தை வாழ்ந்து வந்தாள். பவானியின் அப்பா அம்மா இருவரும் அந்த நகரத்தில் வேலை செய்து வந்தனர். பவானியின் பெற்றோர் அவள் மீது அதிக பாசம் வைத்திருந்தனர். அதனால் அவள் என்ன கேட்கிறாளோ அது அவளுக்கு கிடைக்கும். பவானியை ஒரு ராணி போல வளர்த்து வந்தனர். அதே சமயம் அவளுக்கு ஒழுக்கத்தையும் நேர்மையையும் சொல்லி கொடுத்து வளர்த்தனர்.

அவர்கள் எப்போதெல்லாம் சந்தைக்கு செல்கிறார்களோ அப்போதெல்லாம் பவானிக்கு பரிசுகள் வாங்கி வருவார்கள். அவள் செய்யும் நற்செயல்களை மனம்வியந்து பாராட்டி பரிசு வழங்குவார்கள். பரிசும் பாராட்டும் வாங்குவதற்காகவே பவானி நற்பண்புகளை வளர்த்து கொள்வாள். அதே நேரத்தில் தனது வகுப்பில் படுசுட்டியாக இருப்பாள். பவானி ரொம்ப புத்திசாலி.படிப்பில் சிறந்து விளங்கினாள்.மற்றவர்களுக்கு எப்பவும் உதவும் மனப்பான்மை உடையவள். வகுப்பில் நிறைய நண்பர்களை கொண்டிருந்தாள்.
வழக்கம் போல ஒரு நாள் சென்று தனது தோழி பக்கத்தில் உட்கார சென்றாள் பவானி அப்போது அவள் தோழி ஜனனி சோகமாக அழுதுக்கொண்டிருந்தாள். பவானி என்ன நடந்தது என்று வினவினாள். ஜனனி சொன்னாள், "நா தமிழ் மிஸ்ஸோட வீட்டு பாடம் முடிச்சுட்டு வந்தேன். அதை உமா பாத்துட்டு தரதாக சொல்லி வாங்கினாள். நானும் கொடுத்தேன். அதை வாங்கி கிழித்துவிட்டு சிரிக்கிறாள்,கேட்டால் உன்னை எனக்கு பிடிக்காது அதனால் தான் அப்படி பண்ணேன்னு சொல்றா". என்று கூறி அழுதாள்.பவானி உமாவிடம், "ஏன் இப்படி நடந்துகிட்ட" என்று கோபமாக கேட்டாள். அதற்கு உமா "அன்னைக்கே ஒரு பேனா கேட்டதுக்கு உன்னோட தோழி தராம மிஸ் கிட்ட அடிவாங்க வெச்சா. இப்போ அவ அடி வாங்கட்டும்" என்று சொல்லி சிரித்தாள். பவானி வேறு பேசுவதற்குள் தமிழ் ஆசிரியர் வகுப்பில் நுழைந்தார். உமா நினைத்தது போலவே வீட்டுப்பாடம் எழுதாதவர்களுக்கு ஆசிரியர் தண்டனை வழங்கினார். ஜனனி நடந்ததை சொல்லிப் பார்த்தாள். வகுப்பில் சராசரி மாணவியானதால் எழுதாமல் பொய் சொல்கிறாள்,என ஆசிரியர் நம்பவில்லை. அதனால் வீட்டுப்பாடம் முடித்தும் ஜனனி தண்டனைக்கு உள்ளானாள். அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தாள் ஜனனி.பவானிக்கு ஒரே கஷ்டமாக இருந்தது. உமாவுக்கு சரியான பாடம் புகட்ட நினைத்தாள்.
ஓரிரு நாட்கள் சென்றன. பவானி வகுப்பிற்கு விலை உயர்ந்த பேனாவை கொண்டு சென்றிந்தாள். அனைவரும் அதை வியப்புடன் பார்த்து கொண்டிருந்தனர். ஆசிரியரிடமும் காட்டி தனது பெற்றோர் தனக்கு பரிசளித்ததாக சொல்லி மகிழ்ந்தாள். அன்று மதியம் உணவு இடைவேளை வந்தது.பவானி ஒரு திட்டம் போட்டாள். உமா வெளியே சென்ற சமயத்தில் தனது விலை உயர்ந்த பேனாவை உமாவின் பையில் போட்டுவிட்டாள்.இதை பார்த்துக்கொண்டிருந்த ஜனனி ஒன்றும் புரியாமல்,"பவானி என்ன பண்ற " என்று கேட்டாள் அதற்கு பவானி, "எலிக்கு பொறிவெக்கணும் இல்லையா? அப்போதானே மாட்டும் பொறு" என்றாள்,ஆர்வத்தை தூண்டியவாறு. உணவு இடைவேளை முடிந்து விளையாட்டு நேரம் ஆரம்பம் ஆனது. அனைவரும் விளையாட்டு மைதானம் சென்றனர். உமாவிற்கு விளையாட்டில் நாட்டம் இல்லை . எப்போதும் வரமாட்டாள். வழக்கம் போல அவள் வகுப்பில் இருந்தாள். இதுதான் பவானியின் திட்டத்திற்கு ஆணிவேர். விளையாட்டு நேரம் முடிந்து அனைவரும் வகுப்பிற்கு வந்தனர். அடுத்த நேரத்திற்கு ஆசிரியர் உள்ளே நுழைந்தார். பவானி அனைவரின் முன்னிலையில், "மிஸ் என்னோட பேனாவை காணோம் என்றாள்,கண்ணீருடன். ஆசிரியருக்கு திகைப்பு. "எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அதை கொண்டு வந்து தரும்படி சொன்னார்கள். அனைவரும் விழித்தனர், உமா உட்பட. ஜனனிக்கு மட்டும் தான் உண்மை தெரியும். அவளும் பேசாமல் நடக்கபோவதை எதிர்நோக்கி காத்திருந்தாள். பொறுத்துப்பார்த்த ஆசிரியர் அனைவரின் பையையும் பவானியின் முன்வைத்து சோதனை செய்தார். உமாவும் பயமின்றி காட்டினாள். ஆசிரியர் உள்ளே கைவிட்டார். பேனா வந்தது. உமா திகைத்து போனாள். அவள் மட்டும் தான் கடைசியாக வகுப்பில் தனியாக இருந்தாள் என்பதை தெரிந்து கொண்ட ஆசிரியர் உமாவை திட்டி தீர்த்தார்.உமாவிற்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.அழுதுகொண்டு இருந்தாள்.திருடுவது குற்றம். நாளை தலைமை ஆசிரியரை பெற்றோருடன் சந்திக்க வேண்டும் என ஆசிரியர் கூறினார். இதை கண்டு ஜனனிக்கு புன்முறுவல் ஏற்பட்டது. தனக்காக பவானி இதை செய்ததை உணர்ந்த அவள், பவானியை கட்டி தழுவிக்கொண்டாள்.
மாலை தனது பெற்றோரிடம் நடந்ததை கூறினாள் பவானி. அதற்கு அவர்கள் பாராட்டவில்லை.மாறாக, " நீ புத்திசாலித்தனமாக இந்த காரியத்தை பண்ணிருக்க. ஆனா, நேர்மையா பண்ணல. நாளைக்கு மிஸ்கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்லிடு. அவங்க பாத்துப்பாங்கனு" என்று பவானியின் பெற்றோர் அறிவுரை வழங்கினார். பவானிக்கு அது சரி எனபட்டது. மறுநாள் உமா பெற்றோருடன் தலைமை ஆசிரியர் அறை முன் இருந்தாள்.
பவானி ஆசிரியரிடம் சென்று நடந்த எல்லாவற்றையும் கூறினாள். தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டாள். உமாவும் தனது தவறை ஒப்புக்கொண்டு ஜனனியிடம் மன்னிப்பு கேட்டாள். ஆசிரியர் பவானியின் அறிவுத்திறனை பாராட்டினார். அவளின் நேர்மைக்கும் அறிவுக்கும் பரிசு வழங்கினார்.
என்ன குட்டிஸ் பவானியோட கதை எப்படி இருந்தது. நீங்களும் பவானி மாதிரி நேர்மையாவும் அறிவாவும் இருக்கனும். அதே நேரத்துல நேர்வழில தான் அறத்தை நிலைநாட்டனும். உங்களோட பெற்றோர்கிட்டயும் பாவனியோட கதையை சொல்லுங்க. உங்களுக்கும் பரிசு கிடைச்சாலும் கிடைக்கும். நேர்மையும் உண்மையும் நம் இரு கண் போன்றவை
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications