குழந்தை நீதி கதைகள்: இந்த உலகம் நீங்க வாழ்றதுக்கானது மட்டும் அல்ல.. யோசித்து செயல்படுங்கள் சுட்டீஸ்!
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ், எப்படி இருக்கீங்க.. யாரெல்லாம் கதையை படிக்காம மிஸ் பண்ணீங்க. உங்களுக்காக ஒரு குட்டி கதையை இன்னைக்கு ரெடி பண்ணிருக்கேன். வாங்க கதைக்குள்ள போலாம்.
ஒரு சின்ன கிராமம், அங்க ஒரு அழகான குளம் இருந்தது. அந்த குளத்தில் நிறைய தவளைகள் வாழ்ந்து வந்தன. தவளைகள் அங்க இருக்க பூச்சி, கொசுக்கள் அப்படினு சாப்பிட்டு ஜாலியாக இருந்து வந்தன. அந்த கிராம மக்கள் குளத்திற்கு குளிக்க செல்வது வழக்கம்.

அந்த குளத்தில் சிறுவர்கள் சென்றால் இந்த தவளை குட்டிகளை மீன் என நினைத்து விடுவார்கள். இதனால் தவளை கூட்டம் மனிதர்கள் நடமாடும் இடத்திற்கு அந்த பக்கமாகவே இருந்து வந்தன. சில நாட்களுக்கு பிறகு இந்த தவளை குட்டிகளை பிடிக்க சில சிறுவர்கள் குளத்திற்கு வந்தார்கள். அவர்கள் எவ்வளவு தேடியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பையன் மட்டும் தூரமாக இருந்த தவளை கூட்டத்தை பார்த்தான். ஏய் அங்க பாரு நிறைய தவளைகள் இருக்கு. இன்னொருவன் சொன்னான், அத வச்சி என்னடா பண்றது , நமக்கு மீன் குட்டி தான் வேண்டும் குளத்தில் கிடைக்குதான்னு பாரு என்றான். சிலர் குளத்தில் குளித்து கொண்டு விளையாடி கொண்டிருந்தார்கள்.
அந்த ஒரு சிறுவனுக்கு மட்டும் அந்த தவளை கூட்டம் கண்ணை உறுத்தியது.குளத்தின் அருகில் இருந்து சில கற்களை எடுத்து அந்த தவளைகள் மீது வீச தொடங்கினான். இதை பார்த்த தவளைகள் பயந்து தண்ணீருக்குள் குதித்தன. அந்த சிறுவனுக்கு அது ஒரு விளையாட்டாக தெரிந்தது.
இதையே வேலையாக அவர்கள் வரும்போதெல்லாம் செய்தார்கள். தவளைகள் மிகவும் கலங்கி இருந்தன. ஒரு தவளை மட்டும் சரி இந்த முறை அவர்கள் கல்லால் அடித்தால் நாம் ஏதாவது செய்யலாம் என தன் கூட்டத்திடம் கூறியது. சிறுவர்கள் குளத்திற்கு குளிக்க வந்ததும் , தவளைகளை நோக்கி கல் எறிய ஆரம்பித்தனர். அருகில் இதை பார்த்து கொண்டிருந்த தவளை அவன் மேல் ஏறி குதித்தது. அந்த சிறுவன் பயந்து தண்ணீருக்குள் குதித்தான்.

அந்த தவளை சொல்லியது உங்களை போலத்தான் நாங்களும் , இதையே தான் எங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு நீங்கள் பயப்பட வைக்கிறீர்கள். நாங்கள் இல்லையென்றால் இந்த குளத்தில் பூச்சிகள், கொசுக்கள் என நிரம்பி வழியும். அதை நாங்கள் சாப்பிடுவதால் உங்களுக்கு எந்த உபாதையும் வராமல் தடுக்க படுகின்றன. இந்த உலகம் நாம் அனைவரும் வாழ்வதற்குத்தான். இயற்கை ஒன்றோடு ஒன்று பிணைக்க பட்டுள்ளது என்றது. மன்னிப்பு கேட்டுக்கொண்ட சிறுவர்கள் பிறகு அப்படி செய்வதை நிறுத்தி கொண்டார்கள்.
எனவே சுட்டீஸ், யாரையும் வதைக்காமல் , நாமும் நம்மை வதைக்காமல் இந்த வாழ்க்கையை இயற்கையோடு ஒன்றி அதன் அழகியலை ரசித்து கொண்டே வாழலாம். ஒரு செயலை செய்வதற்கு முன் பல முறை யோசித்து செயல் படுங்கள். அதனால் யாரெல்லாம் பாதிக்கபடுவார்கள் என்பதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications