குழந்தை நீதி கதைகள்: கிணற்றில் விழுந்த ஊசி.. உள்ளே காத்திருந்தது என்ன தெரியுமா?
சென்னை:Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. விசித்திரமான கதைகளை படிக்க யாருக்கெல்லாம் பிடிக்கும். பிடிக்கும்னா இங்க வாங்க, இங்க ரெண்டு பொண்ணுங்க கிணற்றில் விழுந்த ஊசியை எடுக்க போய் என்ன நடந்துச்சு தெரிஞ்சுப்போமா..
தாரா, வீனா ரெண்டு பேருமே சகோதரிகள். ஆனால் வீனாவின் அம்மா தாராவிற்கு சித்தி என்பதால் அவளை மிகவும் கொடுமை செய்வாள். தாரா அன்பிலும், அறிவிலும் சிறந்தவள். வீனா அழகு மட்டும் தானே தவிர வேறு எதுவும் கிடையாது.

தாராவின் சித்திக்கு தன் மகள் மட்டுமே பெரிதாக தெரிய வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அதனாலேயே தாராவிற்கு வேலைகளை கொடுத்து மிரட்டி, அடித்து கொடுமை படுத்தினார். அப்படிதான், ஒருநாள் நிறைய வைக்கோல்களை கொடுத்து நூலாக திரிக்க சொன்னார். அது முடியும்வரை நீ வெளியில் வர கூடாது என கட்டளையும் இட்டார். தாரா அவர் சொன்னது போலவே நாள் கணக்காக அந்த வீலை சுத்தினர். அதை சுத்தி சுத்தி அவள் கைகள் காய்ப்பு பிடித்து ரத்தமே வர ஆரம்பித்தது.
கைகளை கழுவிக்கொள்ள முடிவெடுத்த தாரா, கிணற்றின் அருகில் சென்றாள். கையில் இருந்த நூல் கண்டு மற்றும் ஊசியை ஒரு ஓரமாக கிணற்றின் மேல் வைத்துவிட்டு கைகளை கழுவி கொண்டிருந்தாள். திடீரென திரும்பும்போது கைபட்டு ஊசியுடன் நூல் கிணற்றில் விழுந்தது. பதட்டத்தில் என்ன செய்வதென தெரியாமல் கிணற்றின் உள்ளே இறங்கினாள் தாரா.
அவள் உள்ளே இறங்கி நடக்க தண்ணீரே இல்லாமல் வெறும் நிலமாக அவளுக்கு தெரிந்து அதன் உள்ளே ஊசியை தேடி அலைந்தாள். அந்த கிணற்றில் ஒரு வீடு இருப்பதை பார்த்து அதன் கதவை தட்டினாள் தாரா. உள்ளே இருந்து ஒரு வயதான பெண்மணி வெளியே வந்தார். தாராவை பார்த்து பரிதாபப்பட்டு முதலில் அவளுக்கு உண்ண உணவளித்தார். பிறகு தாரா அவருடனே தங்கி விட்டாள். அவர் பெயர் மதர் ஹால்டா. அவருக்கு வேண்டிய உதவிகளை செய்தாள்.
மதர் ஹால்டாவும், தாராவை நன்றாக கவனித்து கொண்டார். இருந்தாலும் தாராவிற்கு அவளை அறியாமலே உடல்நிலை சரி இல்லாமல் போனது. என்ன கொடுமைகள் செய்தாலும் அவளுக்கு அவளது சித்தி மற்றும் தங்கையின் நினைவாக இருந்தது. அதனால் நோய்வாய்பட்டாள். மதர் ஹால்டா அவளை வீட்டிற்கே திருப்பி அனுப்ப முடிவெடுத்தார்.
அவளது ஊசியை எடுத்துக்கொண்டு மேலே போகும்போது மதர் ஹால்டா அவள் மேல் தங்க மழை பொழிய வைத்தார். இதை பார்த்த அவளது சித்தி வீணா மீதும் இப்படி வரவேண்டும் என ஆசைப்பட்டார். மீண்டும் அது எப்படி நடந்தது என தாராவை கொடுமை செய்தாள்.
தாரா நடந்தவற்றை கூற, வீனாவை நூல் சுற்ற வைக்கிறாள் அவளது அம்மா. ஆனால் கையில் ரத்தம் வர பல நாட்கள் ஆகுமே என அதே ஊசியை வைத்து கைகளில் குத்தி ரத்தம் வர வைக்கிறார். பின்னர் கிணற்றில் கை கழுவ வைத்து வேண்டுமென்றே ஊசியை உள்ளே போட்டார். வீணாவை உள்ளே இறங்கி மதர் ஹால்டா வீட்டை தேடு என அனுப்பி வைக்கிறாள். வீணாவும் தேடி அலைந்து மதர் ஹால்டாவை கண்டுபிடித்து கதவை தட்டி உணவை கேட்டாள்.
வெளியில் வந்த மதர் ஹால்டா கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். வீணாவை பார்த்ததும் மதர் அவள் மேல் மந்திரத்தை போட, அவள் மேலே தார் மழை கொட்ட தொடங்கியது. மேலே செல்ல செல்ல, அவள் உடல் முழுவதும் தார் ஒட்டியது. வாழ்நாள் முழுவதும் அதோடு வாழ்ந்தாள் வீணா. அம்மாவின் பேராசையும் அவள் இப்படி ஆனதற்கு காரணமாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications