குழந்தை நீதி கதைகள்: இப்போ ஜீவா கைய முறுக்குவான் பாரு.. தற்பெருமையால் வந்த வினை..
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ், எல்லோரும் எப்படி இருக்கீங்க..உங்க ஸ்கூல்ல, உங்கள விட பெரிய பசங்ககிட்ட நீங்க யாரெல்லாம் நண்பர்களாக இருக்குறீங்க, உங்களை விட சின்ன பசங்களுக்கு இதுவரை ஏதாவது உதவி பண்ணி இருக்கீங்களா.. நம்ம கதைல வர பென் மாதிரி யாராவது இருந்தா சொல்லுங்க.. இப்போ கதைக்குள்ள போலாமா.
ஹாய் பென் , கோடை விடுமுறை முடிஞ்சு ஸ்கூல் வந்தாச்சு எப்படி நினைக்கிறனு நண்பன் கேட்டான். எப்பவும் போலதான்டா நம்மள மிஞ்ச யாரு இருக்கா, யாராவது நம்மள அடிச்சிருவாங்களா இல்ல அழ தான் வச்சிடுவாங்களா என்றான் பென். நண்பன் மனதிற்குள்ளே முனங்கினான் , அதான இவன் திருந்திருவானா.

ஆமாம் முன் கூட்டியே பென் ஒரு தற்பெருமைவாதி. அப்படினா என்னால் முடியதுது ஏதும் இல்லை, நான் பெரிய பலசாலி, என்னை யாராலும் அழவைக்க முடியாது, விளையாட்டுனு வந்துட்டா என்ன மிஞ்ச யாரு இப்படி அவனுக்குள்ளே பெரிய மனக்கோட்டை கட்டி வாழ்பவன். அட நிஜமாவான்னு யோசிக்கிறீங்களா, அதெல்லாம் இல்லை குட்டீஸ் பென் விளையாடுறது எப்போவும் அவனுடைய ஜூனியர் பசங்க கூடத்தான். அப்போ இவன் விளையாடும்போது தோற்கிற மாதிரி இருந்தா இவன் உருவத்தை பார்த்தே அவங்க பென் ஜெயித்ததா ஒத்து கொள்வார்கள். அவன் எப்பவும் போல அவர்களை மிரட்டியே விளையாடிடுவான்.
பென்னோட இந்த நடவடிக்கை பலருக்கும் பிடிக்காது. ஆனால் இவனோட நண்பர்கள் இருக்காங்களே இவன இப்படியே ஏத்திவிட்டு அதில் ஜாலி பண்ணறவங்க. பென்னோட இந்த முரட்டு குணத்தை பத்தி அவங்க அம்மா எடுத்து சொல்லியும் காதில் வாங்கியது இல்லை.
இதையெல்லாம் கவனிச்சிட்டே இருந்த அவனோட ஸ்கூல் மைதானத்தில் இருந்த புல் இவனுக்கு படம் புகட்ட ஆசை பட்டுச்சு. ஏன்னா அவன் எப்போவும் மைதானத்தில் விளையாடும்போது மற்ற சிறுவர்களை பயமுறுத்துவது, மிரட்டுவது இந்த மாதிரி வேலைகளை பண்ணி வந்தான். ஒரு நாள் கால்பந்து விளையாடி கொண்டிருந்தான் பென்.
அவன் எப்போடா கீழ விழுவான் என காத்திருந்த அந்த புல், அவன் விழுந்ததும் அவன் கண்களில் தன கூர்மையான இலைகளால் குத்தியது. சில துண்டுகள் அவன் கண்களிலே சிக்கி கொண்டன. அதன் கூர்மையான பகுதி அவன் கண்களில் மிக ஆழமாக குத்தியதால் வலி பொறுத்துக்கொள்ள முடியாமல் கத்த ஆரம்பித்தான் பென். அம்மா வலிக்குதே என பயங்கரமாக அழுதான். நண்பர்கள் அவனை ஓடி வந்து தூக்கி முதல் உதவி அறைக்கு கொண்டு போனார்கள். அங்கு அவனுக்கு முதல் உதவி செய்யப்பட்டது. அவனால் மாலை வரை கண்களை திறக்க முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.
வீட்டுக்கு சென்று அம்மாவிடம் நடந்ததை கூறினான். அவன் அம்மா ஒரு சிறு புல் உன்னை அழ வைத்து விட்டது பார்த்தாயா, இங்கு வலியவன், எளியவன் என்று யாரும் இல்லை, என்று அறிவுரை கூறினார். அவனுக்கும் உண்மை உறைத்தது போல் தலையசைத்தான். உடனடியாக மாறவில்லை என்றாலும், நமக்கும் வலிகள் உண்டு என்பதை உணர்ந்தான்.
ஆக குழந்தைகளே, இப்போ சொல்லுங்க பென் மாதிரி உங்க கிட்ட மாத்திக்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறதா?. அப்படி மாற்றி கொள்ளவேண்டும் என்று ஒரு வாய்ப்பு கிடைத்தால் குணத்தை மாற்றி கொள்ளுங்கள். முடிந்தவரை மற்றவர்களை காயப்படுத்தாதவாறு நடந்து கொள்ளுங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications