குழந்தை நீதி கதைகள்: திருடன்லேயே நான் கொஞ்சம் அறிவாளி திருடனாக்கும்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ சுட்டிஸ், எப்படி இருக்கீங்க. சரி பொங்கல் லீவுக்கு எல்லாரும் தயார் ஆயாச்சா. சரி இங்க அறிவாளியா இருக்குற திருடனை பத்தி தான் படிக்க போறீங்க. ம்ம்.. படிச்சிட்டு கதை எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

பீட்டர் ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்த ஒரு திருடன். அவனுக்கு தான் கொஞ்சம் அறிவாளி அப்படின்னு மிதப்பு வேற இருந்தது. ஆனா உண்மையா சொல்லக்கூடாது மாட்டிக்காம திருட அவனுக்கு தெரியும். ஒருநாள் திருடர்கள் எல்லாம் ஒன்னு கூடுற ஒரு க்ளப் ல எல்லாரும் ஜாலியா பேசிட்டு இருக்காங்க. அப்போ ரெனோல்ட் ஒரு கூட்டத்துல சத்தமா சிரிக்கிற சத்தம் கேட்டு பீட்டர் அங்க போறான். அப்போ யார் நல்ல திருடர்கள்னு அவங்களுக்குள்ள ஒரு பேச்சு வருது, அதை கேட்ட பீட்டர் நான்தான்னு சொல்ல ரெனோல்ட் அதெப்படி நீ சொன்னதும் ஒத்துக்க முடியும் என்றான். சரி வா போட்டி வச்சி பார்த்துடலாம்னு சொன்னதும் அந்த கூட்டமே கூச்சல் போட்டு தயாரானார்கள்.

Short story for kids in Tamil : The clever thieves

ஒரு பெரிய சந்தையில் ஒரு நகைக்கடை முன்னாள் பீட்டர், ரெனோல்ட் இருவரும் நிற்க. சரி நான் முதலில் என் திறமையை காட்டுறேன்னு பீட்டர் முந்தி கொண்டு நகைக்கடை வாசலில் இருந்து வெளிய வந்த ஒருவரின் பர்ஸை அவருக்கே தெரியாமல் எடுத்தான். அதை கொண்டு ரெனோல்ட் இடம் கொடுத்தான். அவன் அதில் இருந்த 10 தங்க நாணயங்களை எடுத்து 4 வெள்ளி நாணயங்கள் மற்றும் 6 தங்க நாணயங்களை மாற்றி வைத்தான்.

சரி இப்போ வேடிக்கைய பாரு அவனையே திருடனாக்குறேன் என்றான் ரெனோல்ட். பீட்டர் உற்று கவனித்து கொண்டிருக்க, அந்த இன்னொரு நபரிடம் பர்ஸை அவனுக்கே தெரியாமல் வைத்து அவன் கையை பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என்று கத்தினான் ரெனோல்ட். அதிர்ச்சி ஆன அந்த நபர் நான் திருடவில்லை இது என்னுடைய பர்ஸ் என்று சொல்ல அப்படியா என்னுடையதில் 10 தங்க நாணயங்கள் இருக்கு என்றான். ரெனோல்ட் என்னுடைய பர்ஸில் 4 வெள்ளி நாணயங்கள் மற்றும் 6 தங்க நாணயங்கள் இருக்கிறது என்று சொன்னான். சுற்றி இருந்தவர்கள் ரெனோல்ட் சொன்னது போலவே இருந்ததால் அவனை மிரட்டி அனுப்பினார்கள். அவன் ஒன்றும் புரியாமல் நடந்தான். தூரத்தில் இருந்த பார்த்த பீட்டர் நீதான் அறிவாளி என்று ஓடி வந்து கட்டி பிடித்தான்.

இருவரும் படி படியாக திருடி திருடி நல்ல நண்பர்களாக மாறினார்கள். இருவரும் ஒன்றாகவே திருடுவது கொள்ளையடிப்பது என ஜாலியாக இருந்தார்கள். ஒருநாள் இப்படி சின்னதாக திருடி திருடி சோர்ந்துவிட்டோம் இனிமேல் கைவைத்தால் அரசு கஜானாதான் என்று சொல்ல, ஏன் அதையும் அடிக்கலாமே என்று சொன்னார்கள். இருவரும் அரசு கஜானா இருக்கும் இடத்தை நோட்டம் போட, சுற்றி காவலர்கள்கள் எப்படி அடிப்பது என பல நாட்கள் திட்டம் போட்டார்கள்.

ஒருவழியாக மேலே துளை போட்டு உள்ளே குதிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். போட்ட திட்டத்தின்படி கஜானாவை கைபற்றி கொள்ளையடித்தார்கள். அங்கிருந்து தப்பிக்கவும் செய்தார்கள். அரசவை கூடியது, அரசர் ஒரு தடயம் கூட சிக்கவில்லையே எப்படி என்று மந்திரிகளிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது மிகவும் அனுபவசாலி வயதில் மூத்த மந்திரி ஒரு யோசனையை கொடுத்தார். அது சரியான வழி என்று அரசருக்கு தோன்றியது.

அரசர் அவர்களை பிடித்தாரா? இல்லை தப்பித்தார்களா? என்பதை அடுத்தவாரம் சொல்றேன் குட்டிஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+