குழந்தை நீதி கதைகள்: என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க - மனைவிடம் வாங்கி கட்டிய கொக்கு
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க.ஸ்கூல் நல்லா ஜாலியா போகுதா?. இந்த வாரம் கொக்க வெச்சு ஃபிரெஷ்ஷா ஒரு கதையை ரெடி பண்ணியிருக்கேன். என்னனு பார்க்கலாமா வாங்க. அதுக்கு முன்னாடி நம்ம எதிரிக்கு கூட துரோகம் பண்ணக்கூடாதுன்னு ஞாபகம் வெச்சுக்கோங்க. சரி கதைக்கு போலாம் வாங்க.
ஒரு காட்டுக்கு நடுவுல ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றங்கரையில ஒரு மரத்துல ஒரு கொக்கு தன் மனைவியுடன் வசித்து வந்தது. ஒவ்வொரு முறையும் பெண் கொக்கு கூடுகட்டி முட்டைகளை இடும். அப்போதெல்லாம் ஒரு பெரிய கருநாகபாம்பு அவற்றை உண்டு செல்லும் . கொக்கும் அதன் மனைவியும் மிகவும் கவலையாக இருந்தன. கொக்குக்கு ஒரு வாத்து நண்பனாக இருந்துச்சு.

ஒரு நாள் கொக்கு நண்பனிடம் தன் பிரச்சனையை துயரத்துடன் சொல்லிச்சு. "அந்தப் பொல்லாத திருடன் அடிக்கடி எங்க முட்டைகளை திருடி திண்றுவிடுகிறான். இதை தடுப்பதற்கு எனக்கு ஒரு வழியும் தெரியல நண்பா" னு வருத்தத்துடன் வாத்திடம் புலம்பியது. "கவலைப்படாதே, நண்பா" என்று வாத்து அதை ஆறுதல்படுத்தி, பிறகு கூறியது: "நான் இருக்கேன் உனக்கு. நல்லதா யோசிச்சு ஒரு வழிய கண்டு பிடிப்போம்"
கொக்கின் பக்கத்துல உட்கார்ந்து வாத்து யோசனை செய்தது. திடீரென்று துள்ளிக் குதித்து, "நண்பனே ! ஓர் அருமையான திட்டம் மாட்டிக்கிச்சு"னு வாத்து கொக்கின் காதுல தனது திட்டத்தை சொல்லிச்சு. முதலில் உடன்படாத கொக்கு வாத்தின் சமாதான பேச்சுக்கு அப்புறம் மகிழ்ச்சி கொண்டது. உடனே தன் கூட்டிற்குப் பறந்து சென்றது. தன் மனைவியிடம் வாத்தின் திட்டத்தை விவரித்தது.
அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அது மிகவும் துடிப்பாக இருந்தது. "நீ சொல்றத போல இதை நிறைவேற்ற முடியுமா?" என்று அதன் மனைவி கேட்டது. "நாம் செய்வதில் ஏதாவது தவறாக நிகழ்ந்து விடுமோ ? மீண்டும் நல்லா யோசிச்சு பிறகு திட்டத்தைச் செயல்படுத்து," என்று எச்சரித்த மனைவியின் சொற்களை அலட்சியப்படுத்தியது அந்தக் கொக்கு. வாத்து சொன்ன வசனத்தை சொல்லி அங்கிருந்து கிளம்பியது. திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதில் அது ஆவலாக இருந்துச்சு .
கொக்கு ஆற்றங்கரைக்குச் சென்றது. மீன் பிடிக்கத் தொடங்கியாச்சு. வாத்தும் கூட இருந்துச்சு. நிறைய சிறிய மீன்களைப் பிடித்தனர். வாத்து கிளம்பியது. வாத்தின் திட்டப்படி கொக்கு, ஒரு கீரி வசித்து வந்த ஒரு பொந்துக்கருகில் சென்று ஒரு மீனைப் போட்டுச்சு. சிறிது தொலைவு சென்று மற்றொரு மீனைக் கீழே போட்டுச்சு. இப்படி வரிசையாக மீன்களைப் போட்டபடி தனது கூடு இருக்கும் மரத்தருகில் வந்து முடித்தது கொக்கு.
மீன் வாசனையை முகர்ந்தபடி பொந்திலிருந்து வெளியே வந்துச்சு கீரி. "ஆ, இதோ ஒரு மீன் !" என்று கத்திகிட்டே மகிழ்ச்சியுடன் உடனே அந்த மீனை எடுத்துத் தின்றது. அடுத்தது, அடுத்தது என வரிசையாகக் கீழே கிடந்த மீன்களை ஒன்னு ஒண்ணாத் தின்றபடி கொக்குகளும் பாம்பும் இருந்த மரத்தினடியில வந்து நின்னுச்சு. அதற்குப் பிறகு அங்க மீன் இல்லாததால் அங்கே நின்று சுற்று முற்றும் பார்த்துச்சு கீரி. மரத்தினடியில் இருந்த கருநாகபாம்பு திடீரென்று அதன் கண்களில் தென்பட்டது. கீரியைப் பார்த்த நாகமும் சண்டைக்குத் தயாரானது. இரண்டிற்கும் பயங்கர சண்டை ரொம்ப நேரம் போச்சு. பாம்ப விடாம கீறி சண்டை போட்டுச்சு. கடைசில கீரி பாம்பைக் கொன்றது. இந்தச் சண்டையைக் கூட்டிலிருந்து பார்த்த கொக்குகள் பாம்பு இறந்தவுடன் நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டன.
மறுநாள் அந்தக் கீரி அதே போல் உண்ணுவதற்கு மீன்கள் கிடைக்குமா?னு அதே வழியாக வந்துச்சு. உணவு ஏதும் கிடைக்காமல் மரத்தடிக்கு வந்துருச்சு. மரத்துக்கு மேல ஏறி ஏதாவது தின்பதற்கு இருக்குமா?னு பார்த்தது. ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றிருந்த இரு கொக்குகளும் அந்த நேரம் திரும்பி வந்து கொண்டிருந்தன. மரத்திலிருந்து கீழே இறங்கும் கீரியைப் பார்த்தன. மனசுல ஒரு பயம் இருந்துச்சு. பறந்து சென்று கூட்டை அடைந்தன. இந்த முறை கீரி கொக்கின் முட்டைகளைத் தின்றிருந்தது. இரண்டும் புலம்ப ஆரம்பித்தன. குறிப்பாக பெண் கொக்கு தனது கணவனை திட்டிதீர்த்தது."ஐயோ ! ஒரு எதிரிப் போய் இப்போ இன்னொரு எதிரி வந்துட்டான்னு மனைவி புலம்பியது. "எதிரிக்கு எதிரி நண்பன்னு அந்த வாத்து பையன் சொன்னான். எதிரிக்கு துரோகம் பண்ணி பாவி ஆயிட்டேன். எல்லாம் விதி. இனி வேற மரத்த பாத்து போகவேண்டியது தான்" னு சொல்லி கொக்கு தனது மனைவியை கூட்டிட்டு கிளம்ப தயாரானது.
குட்டிஸ், கதை எப்படி இருந்துச்சு. நல்லா தெரிஞ்சுக்கோங்க. நமக்கு ஒருத்தங்க கெடுதல் பன்றாங்கன்னு நாமளும் திரும்ப செஞ்சா. அது நமக்கும் கெடுதலதான் முடியும். முடிஞ்ச வரைக்கும் எதிரிக்கும் நல்லது நினைங்க. உங்களுக்கும் நல்லது நடக்கும்.
எண்ணித் துணிக கருமம்












Click it and Unblock the Notifications