குழந்தை நீதி கதைகள்: வெயிலா, மழையா, குளிரா யாரு பெருசுன்னு தெரிஞ்சிக்கணுமா? இதை படிங்க..
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், லீவு முடிஞ்சு எல்லாரும் ஸ்கூல் போக தயாராகிட்டீங்களா? இன்னும் கொஞ்ச நாள் லீவு இருந்தா நல்லா இருக்கும்னு தோணுதா? சரி லீவு வேணுன்னா மழை வேணுமே. அப்போ எல்லா பருவநிலையை விட மழை தான பெருசு. அதுதான லீவு வாங்கி தருது. அப்படின்னு நெனச்சீங்கனா அதுதான் இல்லை. கதையை படிச்சு தெரிஞ்சிக்கலாமா.
கடவுள் பூமியை படைத்து அதில் மனிதர்கள், விலங்குகள் என உயிரினங்களையும் படைத்தார். அவங்க சந்தோசமா இருக்காங்க அப்படினு நெனச்சி பூமியை பார்த்த கடவுளுக்கு ஏதோ ஒரு குறை தெரிந்தது. அப்போ அவரோட தம்பிகளை வரவைத்தார். பகல், இரவு, வெயில், மழை, குளிர், காற்று இவர்கள் வந்ததும் பூமிக்கு நீங்கள் போய் கொஞ்ச காலம் இருந்து வாருங்கள் அப்போது ஒருவேளை அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றார் கடவுள்.

அனைவரும் மகிழ்ச்சியாக யார் எப்போது போகவேண்டும் என அவர்களுக்குள் சண்டை வந்தது. கடவுள் அவர்களுக்கு நேரத்தை பிரித்தார். பகல் மற்றும் இரவுக்கு 24 மணி நேரம் என்றார். இருவரும் ஒருநாள் பகல் இன்னொரு நாள் இரவு என்று பிரித்து கொண்டார்கள். மற்றவர்களுக்கு 365 நாட்கள் ஒவ்வொருவராக பொய் வாருங்கள் என்றார். வெயில் முதலில் நான் போகிறேன், நான்தான் பெரியவன் என்றான். அடுத்து மழை அப்படியென்றால் அவன் வந்த பிறகு நான்தான் என்றான். எதுவும் பேசாமல் அமைதியாக காற்று இருந்தது. அதுதான் கடைசி தம்பி என்பதால் குளிர் கேட்கவில்லை. வரிசையாக ஒவ்வொருவரும் பூமிக்கு செல்ல தயாரானார்கள்.
முதலில் பகல் மற்றும் இரவு மாறி மாறி இருக்க மனிதர்கள் 24 மணி நேரம் இருளை கண்டு பயந்தார்கள். பகல் இருப்பதனால் அவர்களது உறக்கம் வீணானது. வெயில் போக மக்கள் சந்தோசமாக ஆரம்பித்தார்கள். அவர்கள் பயிரிட்ட நெற்பயிர்கள் வளர ஆரம்பித்தன. வெயில் ஆரம்பித்து கொஞ்ச காலத்தில் அதே பயிர்கள் கருக ஆரம்பித்தன. மக்களால் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவிக்க ஆரம்பித்தார்கள். பயந்து போன வெயில் கடவுளிடம் சொல்ல மழை பூமிக்கு சென்றது.
மழையை கண்ட மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து மீண்டது போல இருந்தது. மேலும் பயிர்கள் செழித்தன. மழை பெய்து கொண்டே இருக்க ஆறு, குளம், குட்டை, கடல் என நிரம்பி வழிய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகின. மக்களும் உடல்நிலை மோசமாக ஆரம்பித்தது. உடனே குளிர் அதிரடியாக பூமிக்கு போக மக்களால் அதில் தாக்கு பிடிக்க முடியாமல் போனது.
காற்று பூமிக்கு வந்தது. இவர்கள் ஆக்கிய சேதாரத்தை சரி செய்ய போவதாக எண்ணி பெருமை கொண்ட காற்று வீசும்போது தென்றலாக ஆரம்பித்து சூறாவளியாக மாறி மக்களை வாழவிடாமல் கஷ்டப்படுத்தியது. சோகத்தில் கடவுளிடம் வந்தவர்களுக்கு கிடைத்தது ஒரு யோசனை. 365 நாட்களும் ஒரே ஆள் இருந்தால் அவர்களால் தாக்கு பிடிக்க முடியாது. அதற்கு பதில் நாம் 4 பெரும் பிரித்து கொள்ளலாம் என்றது வெயில். அப்போது மீண்டும் சோகமான காற்றிடம், நீ எல்லா வருடமும் தேவை ஆனால் எப்போதும் தேவை இல்லை என்றார் கடவுள். மேலும் நீங்கள் எடுத்த இந்த முடிவு சரி, ஆகையால் மக்களும் சந்தோசமாக வாழ இதுதான் சரியான வழி என்றார். இதை கேட்ட பகலும் இரவும் நாங்களும் சரியாக பிரித்து கொள்கிறோம். ஒரு பாதி பகலும் ஒரு பாதி இரவும் இருக்கட்டும் என்று முடிவு செய்தார்கள்.
இயற்கை அழிவுகள் அவ்வப்போது இருந்தாலும், இந்த பருவ நிலைகள் மனிதர்களின் வாழ்க்கையில் தேவையான ஒன்று. ஆகையால் இதில் யார் பெரியவர் என்பதை விட ஒன்றாக யோசித்து சரியாக பிரிந்து செயல்பட்டால் அமைதி நிலவும்.












Click it and Unblock the Notifications