குழந்தை நீதி கதைகள்: தொட்டதெல்லாம் பொன்னாக.. அடிச்சுது பாருங்க யோகம்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க. தேவதைகள் வந்து திடீரென உங்களுக்கு எதாவது வரம் கொடுத்தா நீங்க என்ன கேட்பீங்க. இவங்க என்ன கேட்டாங்கன்னு நீங்களே பாருங்க.

அவன் சரியான புலம்பல்வாதி, யாரோ இருவர் பேசிக்கொண்டிருக்க அதை கேட்டபடியே அதை கண்டுகொள்ளாமல் நடந்தான் ஆல்பர்ட். அவன் அந்த அளவுக்கு வறுமை கோட்டில் வாழவில்லை என்றாலும் பெரிய பணக்காரன் இல்லை. கடினமாக உழைத்தாலும் அதை குறை சொல்ல கூடியவன். என்னதான் உழைத்தாலும் நிறைய தங்கம் நம்மிடம் இல்லையே என சலித்து கொள்வான். வருவதும் போவதும் அவனுக்கு சரியாக இருந்தது. அழகான, அன்பான மனைவி.

Short story for kids in Tamil : The golden touch

அவனுக்கு போதுமான அளவுக்கு நல்ல வாழ்க்கை. சந்தோசமாக வாழாமல் எதற்கெடுத்தாலும் புலம்பல். வீட்டில் நிறைய சேர்த்து வைக்க வேண்டும். கை நிறைய தங்கம் வேண்டும். பணக்காரனாக வேண்டும். அவன் புலம்பல் கேட்டு அந்த ஊரில் வாழும் அனைவருக்குமே சலிப்பு தட்டியது. ஆனால் அவன் நல்ல வேலைக்காரன் என்ற பெயரை மட்டும் வாங்கியிருந்தான்.

ஒரு நாள் காட்டுவழியே இப்படி புலம்பிக்கொண்டே நடக்க அவன் முன் ஒரு தேவதை தோன்றினாள். ஆல்பர்ட், ஆல்பர்ட் ஏன் இவ்வளவு புலம்புகிறாய். தேவதையை பார்த்த ஆல்பர்ட், உனக்கென்ன தெரியும் இங்க சந்தோசமா வாழணும்னா நிறைய நகை பணம் வேண்டும். அதுதான் என்கிட்டே இல்லையே, இருந்திருந்தால் நானும் சந்தோசமாக இருப்பேன் என்றான். சரி நான் உனக்கு உதவுகிறேன் என்ன வேண்டும். சட்டென சிந்தனையில் எதுவும் வராத ஆல்பர்ட், நான் தொடுற எல்லாமே பொன்னாக வேண்டும் என்றான். அப்படியா சரி அப்படியே ஆகட்டும் என்றாள் தேவதை.

சோதித்து பார்க்கவா என்று கேட்க, தேவதையும் சரி என தலையாட்டினாள். அருகில் இருந்த ஒரு மரத்தின் குச்சியை தொட்டான். அது தங்கமாக மாறியது. அவ்வளவுதான் துள்ளி குதித்து இப்போதே வீட்டுக்கு போய் எல்லாத்தையும் தொடணும் என ஓடினான்.

வீட்டுக்கு போனதும், அங்கிருந்த பொருட்கள், பாத்திரங்கள் என அனைத்தையும் தொட்டான். எல்லாமே தங்கமாக மாற சந்தோஷத்தில் குதித்தான். அவனுக்கு பசி வரவே அருகில் இருந்த மாம்பழத்தை எடுத்தான். அவன் வாய் பக்கம் வருவதற்குள் அது தங்கமாக மாற, அய்யயோ என்னடா இது இன்னொரு பழத்தை எடுக்க அதுவும் தங்கமாக மாற அவனுக்கு மனசே கஷ்டமானது. மனைவியை அழைத்து நடந்ததை சொல்ல, அவள் அவனுக்கு பழத்தை எடுத்து ஊட்டினாள். அவனும் தீர்வு கிடைத்தது போல மகிழ்ச்சி அடைந்தான். சந்தோஷத்தில் அவளை கட்டிப்பிடிக்க கண் இமைக்கும் நொடிக்குள் மனைவி தங்கமாக மாற ஆரம்பித்தாள்.

அவனால் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்தான். என்ன செய்வதென தெரியாமல் அழ ஆரம்பித்தான். அப்போதுதான் தெரிந்தது தங்கத்தைவிட வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்தான். அவன் அழுவதை பார்த்த தேவதை அவனிடம் எல்லாத்தையும் திரும்பி பழைய நிலைக்கு தருகிறேன் ஆனால் உன்னால் மீண்டும் எதை தொட்டாலும் தங்கம் ஆக்க முடியாது, இல்லையென்றாலும் இந்த வரத்துடன் இப்படியே தங்கம் நிறைய நீ எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்கும் என சொன்னாள்.

ஆல்பர்ட், எனக்கு எந்த வரமும் வேண்டாம். என் மனைவி மீண்டும் பழைய நிலை வந்தாலே போதும் என்றான். அப்போ இந்த தங்கமெல்லாம் காணாமல் போய்விடுமே என்று தேவதை சொல்ல, பரவாயில்லை எனக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்பது தெரிந்துவிட்டது. ஆகையால் அவளை திருப்பி கொடுங்கள் என்று கேட்க தேவதை அல்பெர்ட்டின் மனைவியை பழைய நிலைக்கு மாற்றினாள். ஆல்பர்ட் அதன் பிறகு புலம்புவதையே நிறுத்திவிட்டான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+