குழந்தை நீதி கதைகள்: எங்க ஏரியா உள்ள வராதே!- வாழு வாழ விடு
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எல்லாரும் நல்லா இருக்கீங்களா. பாத்து பத்திரமா இருங்க. வெயில் காலம் மனிதர்களை விட விலங்குகளுக்கு கொடுமையாக இருக்கும். குடிநீர் தேடி கூட்டம் கூட்டமா அலைவாங்க. அவங்கள பத்தி ஒரு கதை சொல்லப்போறேன் வாங்க.
வெயில் காலம் வந்ததுனால காட்டுல இருந்த நதி சுத்தமா வற்றி போச்சு. காட்டுல நிறைய மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அதுல ஒரு பெரிய யானை கூட்டம் இருந்துச்சு. அந்தக் கூட்டத்தை யானை ராஜா தான் பத்திரமா பார்த்துகிட்டு இருந்தாரு. அப்போது தண்ணீர் இல்லாம மற்ற விலங்குகள் இறந்து போகிறதை பார்த்து தன் கூட்டத்தை நினைத்து பயந்து போனார் யானை ராஜா.
ராஜாவுக்கு தெரியும் அவர் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு பிடிக்கணும்னு இல்லனா ஒவ்வொரு யானையாக இறந்து போய்விடும் . ஒரு நல்ல தீர்வை காண எல்லா யானைகளையும் ஒன்று கூட்டினார். "தண்ணீர் உள்ள ஒரு இடத்துக்கு நாம் போகவில்லை என்றால் நம்முடைய வாழ்க்கை ரொம்ப மோசமாக போக நிறைய வாய்ப்புகள் இருக்கு" என்று ராஜா யானை சொன்னது.

"தண்ணீயா! எனக்கு ஒரு இடம் தெரியும் ஆனா அங்க போகணும்னா ரொம்ப தூரம் போகணும். நாம எல்லாரும் அங்க போய்டலாம்னு" சொல்லுச்சு இன்னொரு யானை. அதுக்கு மற்ற யானைகள் ஒத்துக்கிட்டாங்க. பயணத்தை ஆரம்பிச்சாங்க. ரொம்ப தூரம் நடந்த அப்பறம் தாகமா இருந்த யானைகள் தூரத்தில் ஒரு நதியை பார்த்ததும் அதை நோக்கி ஓடின. அவங்க அப்படி ஓடி போகும் வழியில் தங்கியிருந்த ஒரு சுண்டெலி கூட்டத்தின் வீடு சுத்தமா அழிஞ்சு போச்சு. எல்லா எலிகளும் "நம்ம வீட்டுக்கு என்ன ஆச்சுன்னு" கலந்து பேசினாங்க.
யானைகள் புகுந்தது அறிந்து ," நம்ம எல்லாரும் யானை கிட்ட போய் நம்ம வாழும் இந்த வழியை விட்டுட்டு வேற வழியா நதிக்கு போக சொல்லி கெஞ்சலாம்" என்று எலி கூட்டம் முடிவு எடுத்தாங்க. எல்லா எலிகளும் யானை கூட்டத்துக்கு முன்னாடி நின்னு யானை ராஜாகிட்ட கனிவா முறையிட்டாங்க. "என் ராஜாவே! நாங்க இந்த நதி பக்கத்துல ரொம்ப வருசமா வாழ்ந்துகிட்டு இருக்கோம். உங்க யானைகள் இந்த வழியா தண்ணீர் குடிக்க போகும்போது நாங்க தங்கியிருக்கும் இடம் சுத்தமாக அழிந்து போகிறது. இப்போவே நாங்க பாதி இடத்தை இழந்து விட்டோம். தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். உங்க யானைகள் வேற வழியில் போக சொல்லுங்க" என்று கெஞ்சினாங்க. ராஜா யானையோ, "சரி நான் எங்க கூட்டத்துக்கிட்ட பேசறேன்னு" சொன்னாங்க. அதேபோல் தன் கூட்டத்திடம், "யானைகளே நம்ம தண்ணீர் குடிக்க போகிற வழியில ஒரு சுண்டெலி கூட்டம் இருக்கு.நாம ஓடி வரும்போது அந்த இடத்தை சேதப்படுத்திட்டோம். இப்போ இருந்து அவங்க வழியில போகாம வேற வழியில தான் போகணும்" என்றது.
'ஐயா! நீங்க ஒரு சின்ன விலங்குகிட்ட பேசுனதே பெரிய விஷயம் அவங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதீங்க. நாம இதுக்கு ஒத்துக்க கூடாது" என்றது ஒரு யானை. "நேரம் வரும்போது அவங்க உதவி நமக்கு தேவை. நாளையிலிருந்து நாம வேறு வழியா தான் போகணும்" என்று ராஜா யானை தன் கூட்டத்திடம் சொன்னது.
யானைகள் ராஜா சொன்னது போல அடுத்த நாள் வேற வழியாக தண்ணீர் குடிக்க போனார்கள். தண்ணீர் குடித்து விளையாடி ரொம்ப ஜாலியா இருந்தாங்க, ஆனா அந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. ஒருநாள் யானைகள் நதியில் விளையாடிட்டு இருக்கும்போது சில வேட்டைக்காரர்கள் யானையை வேட்டையாட நினைச்சாங்க. அடுத்தநாள் வழக்கம்போல யானைகள் நதிக்கு போய்க்கொண்டிருக்கும்போது திடீரென சில யானைகள் வேட்டைக்காரர்கள் வைத்திருந்த கயிறு பொறிக்குள் மாட்டிக்கொண்டாங்க. ராஜா யானையும் அதில் மாட்டி இருந்தார்.

அவர் மற்ற யானையிடம் "எல்லாரும் உடனே எலிகள் தங்கி இருக்கும் இடத்துக்கு போங்க, இங்கு நடந்ததை சொல்லுங்க. அந்த வேட்டைக்காரங்க திரும்பி வருவதற்குள் நமக்கு உதவி செய்ய சொல்லுங்க" என்றது. உடனே யானைகள் எலிகள் கிட்ட போய் நடந்ததை சொன்னாங்க. அவங்க சொன்னதை கேட்டதும் யானைகள் மாட்டிய இடத்துக்கு எலிகள் வந்தன. வேக வேகமா கயிறை கடிக்க தொடங்கினாங்க. வேட்டைக்காரர்கள் வருவதற்குள் யானைகளை காப்பாற்றினாங்க. யானை ராஜா எலிகள் கிட்ட தன் நன்றியை சொன்னார். எலிகளை ஏளனமாக பார்த்த மற்ற யானைகள் ஒருவர் எவ்வளவு சின்னதாக இருந்தாலும் நாம அவர்களை குறைவாக பார்க்க கூடாது என்று உணர்ந்து கொண்டார்கள். அன்று முதல் எலிகளும் யானைகளும் நண்பர்களாக பழகி வந்தார்கள்.
கதை எப்படி இருந்தது குட்டிஸ். புடிச்சுதா உங்களுக்கு, மனிதர்கள் தான் விலங்குகளை வேட்டையாட துடிக்கிறாங்க அதனால நிறைய விலங்கினங்கள் அழிவுக்கு வந்திருக்கு. விலங்குகள் அதற்கான தேவைகளை அதுவே பாத்துக்கும். மனிதர்களான நாம அதற்கு வழிவிட்டா போதும். மேலும் யாரையும் எப்பவும் நமக்கு கீழ வைத்து பார்க்கக் கூடாது. சமமாக நடத்தணும். அப்போதான் யானை ராஜா மாதிரி உங்களுக்கும் நன்மை நடக்கும். சமத்துவம் பழகு
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications