குழந்தை நீதி கதைகள்: இதுக்கெல்லாமாடா சங்கம் வைப்பீங்க! சங்கத்தால் வந்த வினை..

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க. மழையெல்லாம் முடிந்து யாரெல்லாம் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டீங்க, யாரெல்லாம் எங்க ஊர்ல மழையே இல்ல லீவும் இல்லன்னு வெறுப்பா போறீங்க. சரி எந்த வேலையும் செய்யாம சும்மா இருக்க உங்களுக்கு பிடிக்குமா? அப்படின்னா ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் உங்களால இருக்க முடியும். இந்த கதையில என்ன சொல்லபோறேன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

ராஜு.. ராஜு.. மனைவி கணவனை அழைத்தாள். உங்க அம்மா கூப்பிடுறாங்க. என்னம்மா என்றான் ராஜு. அந்த தாடியையும் மீசையையும் கொஞ்சம் எடுக்கலாமே டா என்றார் அம்மா. அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்லமா என்றான் ராஜு. காடு போல வளர்த்து வைத்திருக்கிறாய் அதை பொய் முதலில் சரி செய்து வெட்டி வா என்றார் அம்மா. எங்கெல்லாம் அதற்கு நேரமில்லை என்று அலுத்து கொண்டான் ராஜு. அப்படி என்ன வேலை செய்கிறான் ராஜு என்று தானே நினைக்கிறீங்க.

Short story for kids in Tamil : The lazy man

எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பதே அவன் மிக பெரிய வேலையாக நினைக்கிறான். அம்மாவும், மனைவியும் எடுத்து சொல்லியும் அவன் மாறவே இல்லை. உதாரணத்திற்கு வீட்டில் தண்ணீர் இல்லை கிணற்றில் எடுத்து தாருங்கள் என்றால், கிணற்றிலும் நீர் இல்லை என்பான். சரி வீட்டில் விறகு இல்லை அதை எடுத்து வாருங்கள் என்றால், மரத்தில் இருந்து தானாகவே விழும் அதை எடுத்துக்கொள் என்பான். இது இப்படி இருக்க அவனது மனைவி ராதா சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் வாங்க என்றால் உடனடியாக காட்டில் இருந்து இறங்கி வந்து நீ கஷ்டப்பட்டு சமச்சிருக்க அதை வீணாக்குவேனா, எடுத்து வை என்று சாப்பிட்டான்

இவன் தான் இப்படி இருக்கிறான் என்றால் அந்த ஊரில் இருக்கும் ஒரு கூட்டமே இவனை போலத்தான் இருக்கிறார்கள். மனைவிமார்களே வீட்டின் மொத வேலைகளையும் செய்ய இவர்கள் சாப்பிட மற்றும் தூங்குவதற்கே வீட்டிற்கு செல்கிறார்கள். மற்ற சமயங்களில் ஊரின் நடுவில் ஒரு இடத்தில அமர்ந்து பொது அறிவை வளர்ப்பதாக சொல்வார்கள். ஆனால் உண்மையில் புறணி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இவர்கள் இதற்கென சங்கமும் அமைத்துள்ளார்கள். சும்மா இருப்போர் சங்கம் அதன் பெயர்.

ஒருநாள், அந்த சங்கத்தில் பேசி அவர்களுக்குள் சிரித்து கொண்டிருக்கும்போது, திடிரென ஒருவனுக்கு நம்மில் யார் மிகவும் சும்மா இருப்பவர் என்ற கேள்வி எழுந்தது. சங்கமே ஒன்று கூடி அதை விவாதிக்கலாம் என ஆரம்பித்தார்கள். ஒருவன் சொன்னான், நானெல்லாம் 15 நாளுக்கு ஒரு முறைதான் குளிக்கிறேன். அதுவும் ஒருவேலை தான், அதோடு நீர் மிகவும் பாதுகாக்க படவேண்டியது என்றான். அவர்களுக்குள்ளே சிரிக்க, இன்னொருவன் நானெல்லாம் சாப்பிடுவதற்கென்று தனியாக பாத்திரம் கூட எடுத்துக்கொள்ள மாட்டேன். சமைத்த பாத்திரத்தில் சாப்பிடுவேன், வேலையும் மிச்சம், தண்ணீரும் மிச்சம் என்றான். அவ்வளவுதான் ராஜுவுக்கு...

நாம இந்த கூட்டத்தில் தலைவனை போல ஆகவேண்டுமெனில் இதைவிட பெரியதாக ஒன்றை சொல்ல வேண்டுமே என யோசிக்க சங்கமே அவன் என்ன சொல்ல போகிறான் என காத்துக்கொண்டிருந்தது. ராஜு சொன்னான், எனக்கு இருக்குற இந்த பெரிய தாடியில் தீ பிடித்தால் கூட நான் சும்மா எதாவது குழிபறித்து கொண்டிருப்பேன் என்றான். ஆஹா வித்தைக்காரன் தானடா நீ என அனைவரும் புகழ்ந்து பேச, எங்கிருந்தோ தீ அவர்கள் கிராமத்தில் பரவ ஆரம்பித்தது.

இவர்கள்தான் சும்மா இருப்பவர்கள் ஆயிற்றே தாங்கள் இருக்கும் கூடாரத்தை விட்டு வெளியில் வந்து கூட யாரும் பார்க்கவில்லை. மொத்த கிராமமே தீயை அணைக்க போராடி கொண்டிருக்கிறது. இவர்கள் கூடாரத்தையும் தீ நெருங்க அதன் வெப்பம் உள்ளே இறங்க ஆரம்பித்தது. அனல் கொதிக்குது என சொல்லிக்கொண்டே நம்ம சும்மாத்தா இருக்கனும் என எல்லோரும் உள்ளேயே அமர்ந்து இருந்தார்கள்.

தீ பரவ கூடாரம் இடியுற நிலை வர எல்லோரும் வெளியேறினார்கள். ராஜு அவனது கெத்தை காமிப்பதற்காக உள்ளே இருந்தான். கூடாரம் இடியவும் வேறு வழி இல்லாமல் வெளியேறினான். அந்த சமயம் அவன் தாடியில் நெருப்பு பிடித்தது. அவனது கூட்டாளிகள் கத்த ஆரம்பித்தார்கள். ராஜு அதற்கு அதெல்லாம் மழை வரும் தாங்களாகவே அணைந்து விடும் என்றான். இவ்ளோ சும்மா இருக்க முடியுமா என பேசி கொண்டிருக்க, தாடியில் பற்றிய நெருப்பு விறு விறுவென மேலே ஏறியது. ராஜு கதற ஆரம்பித்தான், ஆனால் ஒருவரும் உதவி செய்யவில்லை. மழை வரும் காத்திரு என கேலி செய்தார்கள். சிலரோ குழி பறிப்பேன் என்றாய் அல்லவா அதை செய் என்று அவனை சீண்டினார்கள்.

Short story for kids in Tamil : The lazy man

பயத்தில் கதறிய ராஜுவின் மேல் தண்ணீர் கொட்டியது. மழை எனக்கு மட்டும் கொட்டியதா என திரும்பி பார்க்க அவனது மனைவி ராதாவும், ஊர் மக்களில் சிலரும் ஊரின் தீயை அணைப்பதற்காக வைத்திருந்த தண்ணீரால் ராஜூவை காப்பற்றினார்கள்.

சும்மா இருந்த உயிர் வாழலாம் ஆனால் பிழைக்க முடியாது என மனம் திரும்பிய ராஜு, அவனது முடி, தாடியை வெட்டி இப்போது வீட்டில் மனைவிக்கு உதவும் ஒருவனாக மாறினான். பெருமை பேசும்போது இருந்த நண்பர்கள் கூட ஆபத்தில் வரவில்லை. அவனது மனைவியால் இந்த உயிர் பிழைத்தான் என்பதை உணர்ந்தான் ராஜு.

ஆகவே குழைந்தைகளா, எப்போதும் சும்மா இருப்பது சரியான பொழுதுபோக்கு அல்ல. அந்த சமயத்தில் புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளுங்கள். ஒருநாள் அது உதவலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+