குழந்தை நீதி கதைகள்: அஞ்சே, அஞ்சு ஸ்பூன் உப்பு.. மறதியால் என்ன நடந்துச்சு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ், எப்படி இருக்கீங்க. கோடை விடுமுறையில் என்ன பண்றீங்க. வீட்டில் பலருக்கும் கடைக்கு செல்லும் வேலைகள் என சின்ன சின்ன வேலைகளை கொடுத்திருப்பாங்க இல்லையா, அது போலத்தான் நம்ம கதையில் வரும் சனா வீட்டில். ஆனால் அவள் ஒரு மறதி கேஸ்.. சரி என்ன நடந்துச்சுன்னு கதையை படிச்சு தெரிஞ்சிக்கலாமா...

சனா வீட்டில், தாத்தா பாட்டி அண்ணா அக்கா அம்மா அப்பா என பெரிய குடும்பம். இவள் கடைசி குட்டி என்பதால் கொஞ்சம் செல்லம் அதிகம். அதோடு ஒரு வேலையை செய்ய சொன்னால் அதை அடியோடு மறந்தும் போய் விடுவாள். ஒருநாள் தாத்தா பயங்கரமான தலைவலியால் துடிக்க, சனாவை கூப்பிட்டார். அவள் விளையாடி கொண்டிருந்த ஆர்வத்தில் தாத்தா கூப்பிட்டது காதில் விழவில்லை. மீண்டும் சனாவின் அம்மா, அவளை சத்தமாக கூப்பிட என்னாச்சு என வேகமாக ஓடி வந்தாள்.

Short story for kids in Tamil The salt sambar

தாத்தாவுக்கு பயங்கரமாக தலை வலிக்குது. அருகில் இருக்கும் மெடிக்கலில் தலை வலி மாத்திரை வாங்கி வா என சொல்ல, அவளிடம் பணத்தை கொடுத்தார் தாத்தா. வாங்கி கொண்டு வந்தவள், வழியில் பிரெஷாக போடப்பட்ட வடை, பஜ்ஜியின் வாசனை இழுக்கவே அந்த கடையில் இருந்து சாப்பிட ஆரம்பித்தாள். எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தோம் என்பதையே மறந்தும் போனாள். அவளது அண்ணனை விட்டு தேடி வர சொன்னால், அவள் கடையில் சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்து வீட்டுக்கு அழைத்து வந்தான்.

இவள் மறந்ததை பார்த்த தாத்தாவுக்கு தலைவலி இரட்டிப்பு தான் ஆனது. அடுத்த ஒருநாள், அக்கா பள்ளிக்கு உணவை எடுத்து செல்ல மறக்கவே சனாவிடம் கொடுத்து அவளிடம் கொடுக்க சொன்னார்கள். சனாவும் லஞ்ச் பாக்ஸ் எடுத்துக்கொண்டு வேகமாக செல்ல, போற வழியில் சர்க்கஸ் போட்டிருந்தார்கள். அங்கு இருந்த மிருகங்களை எப்படி ட்ரைனிங் கொடுக்கிறார்கள் என பார்க்க ஆரம்பித்தவள், அதற்கு உணவு கொடுக்கும் வரை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருக்க நாள் முழுவதும் சாப்பிடாமல் பள்ளியில் இருந்து திரும்பி வந்தாள் சனாவின் அக்கா.

அம்மா சனாவை கூப்பிட்டு, செய்யும் வேலையில் கவனமாக இரு என அறிவுறுத்தினார். அடுத்த நாளே அவளிடம் அப்பா வேலைக்கு செல்ல சட்டையை ஐயன் பண்ண சொன்னார். அவளும் கவனமாக இருக்கனும் என சட்டையை தேய்க்க, அந்த பக்கம் பஞ்சுமிட்டாய் வண்டிகாரன் மணி அடிக்க அவ்வளவுதான் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். சட்டை கருகி புகை வந்த பிறகுதான், தான் மறந்ததை உணர்ந்தாள்.

சனாவின் பள்ளி விடுமுறை முடிந்து, முதல் முதலாக பிக்னிக் செல்ல முடிவு செய்தார்கள். அதனால் ஒவ்வொருவரும் வீட்டில் இருந்து ஒரு உணவு கொண்டு வரவேண்டும் என்று சொல்ல, சாதம், சப்பாத்தி என எல்லோரும் ஒன்று கொண்டு வருவதாக சொன்னார்கள். சனா எங்க அம்மா வைக்கும் சாம்பார் சூப்பராக இருக்கும் நான் அதை எடுத்து வருகிறேன் என்று சொன்னாள். வீட்டில் வந்து அம்மாவிடம் சாம்பார் அதிகமாக வைக்க வேண்டும் என்று சொல்ல அவரும் ஒத்துக்கொண்டார்.

எப்போது விடியும் என காத்து கொண்டிருந்த சனாவிற்கு, அம்மா செய்யும் சாம்பாரின் வாசனை மூக்கை துளைத்தது. விடிந்து எழுந்த சனாவிடம், நான் அருகில் மல்லியிலை வாங்கி வருகிறேன். சாம்பார் கொதித்ததும் 5 ஸ்பூன் உப்பு மட்டும் போட்டு விடு என சொல்ல அவளும் சரி என சொல்லி குளிக்க சென்றாள். இவள் எப்படியும் மறந்து விடுவாள் என யோசித்த பாட்டி உப்பை அள்ளி போட்டார்.

கொஞ்ச நேரத்தில் கிச்சனில் நுழைந்த தாத்தா சனா மறந்து விடுவாள் என 5 ஸ்பூன் உப்பை போட்டார். சாம்பார் நன்றாக கொதிக்க, அடுத்து வந்த சனாவின் அக்கா , இப்படி கொதிச்சிட்டு இருக்கு இவ எப்படி உப்பு போட்டிருப்பா, மறந்துட்டாளா என அவள் பங்குக்கு 5 ஸ்பூன் உப்பை போட்டாள். சைனாவின் அண்ணன் வர அவனும் 5 ஸ்பூன் உப்பை போட, குளித்து கொண்டிருந்த சனா கிச்சனில் வனத்தில் சாம்பார் கொதிப்பதை பார்த்து 5 ஸ்பூன் உப்பை போட்டாள்.

இப்போ அம்மாவின் டர்ன், கடையில் இருந்து வாங்கி வந்த மல்லியிலையை சாம்பாரில் போட போகும்போது எப்படியும் உப்பு போட மறந்திருப்பாள் என, 5 ஸ்பூன் உப்பை போட்டு மல்லி இலை தூவி அழகாக இறக்கி வைத்தார். சனாவிற்கு ஒரு பெரிய டப்பாவில் அடைத்து கொடுக்க, சந்தோசமாக பிகினிக் சென்றாள் சனா. ஆடி திரிந்து சுற்றி களைத்த அனைவரும் சாப்பிட வர, சப்பாத்தி, சோறு, பொரியல் என எடுத்து பிளேட்டில் வைக்க சனா கொண்டு வந்த சாம்பாரை சோறில் ஊற்றி சாப்பிட ஆரம்பித்த அடுத்த கணமே கீழே போட்டார்கள்.

சனா அழுதுகொண்டே வீட்டிற்கு சென்று, சாம்பாரில் யாரு உப்பு போட்டது என கேட்க மொத்த குடும்பமும் நாந்தான் என சொல்லியது. அனைவருக்குமே ஷாக் ஆக, அம்மா என்னைத்தான் போடா சொன்னாங்க என ஓஓ வென அழுதாள். சாம்பாரில் உப்பு இல்லை, உப்பு கடலில் தான் சாம்பார் என எல்லாரும் என்னை கிண்டல் செய்தார்கள் என்று சொல்ல, சனாவின் அம்மா நீ மறக்காமல் இருந்தால் இந்த பிரச்சனை இல்லை. நீ உன் வேலையை சரியாக செய்யாததால் தான் உன் மேல் நம்பிக்கை இல்லாமல் அனைவரும் இதை செய்திருக்கிறார்கள் என்றார்.

அவளின் தவறை உணரவே, மீண்டும் மறக்காமல் இருக்க பழகி கொண்டாள் சனா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+