குழந்தை நீதி கதைகள்: பட்டு எப்படி உருவானது தெரியுமா? சீக்ரெட்டை வெளியில் சொன்னது யார்?
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க..விடுமுறையில் எல்லோரும் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள். பலரது வீட்டில் விழா கோலமாய் நல்ல நிகழ்வுகள் நடந்திருக்கும். அதில் பலரும் பட்டால் ஆன உடைகளை உடுத்தி மகிழ்ந்திருப்பீர்கள். அந்த பட்டை கண்டுபிடிச்சது யாரு, அது எப்படி எல்லாருக்கும் தெரிஞ்சதுன்னு இந்த கதையை படிச்சி தெரிஞ்சிக்கலாம் வாங்க..
சீனாவில் உள்ள அந்த கிராமத்தில் ஒரு ஏழை நூற்பாலன் இருந்தான். அவனுக்கு ஒரு அழகிய மகள் இருந்தாள். அவள் தந்தைக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தாள். ஒருநாள் அந்த வழியாக சென்ற இளவரசர், செடிகளுக்கு நடுவில் அழகிய சிகப்பு நிற உடையில், கூர்மையான கண்கள், சிவந்த கன்னங்கள் கொண்ட ஒரு பெண் தெரிய அவள் கைகள் மாட்டும் கருமையாக காய்ப்பு பிடித்து போய் இருந்தது. அவள் கைகளை பார்ப்பதற்கு முன்பே அவள் மேல் காதலில் விழுந்தார் இளவரசர்.

கைகளை பார்த்ததும் கடின உழைப்பாளியாக இருப்பால் போலயே என அவளை உற்று பார்த்தான் இளவரசன். அது அத்தனை எளிதான உழைப்பாக அவனுக்கு தெரியவில்லை. எனவே அவளை மணம் முடிக்க எண்ணி அவளிடம் கேட்க அவள் அப்பாவை கைகாட்டி சென்றாள். இப்படி ஒரு பெண்ணா என அந்த ஏழை நூற்பாலனை பார்த்து திருமணத்திற்கு உத்தரவும் பெற்றான்.
ஆசையாய் காதல் மனைவியை அழகான அரண்மனையில் தங்க வைத்தான். எந்த வேலையும் அவளை செய்ய விடாமல் அத்தனை வேலை ஆட்களை நியமித்தான். ஆனால் அது எதுவுமே அவளை கவரவில்லை. அவளுக்கு எதுவோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வை கொடுத்தது. நாள் முழுக்க சுறு சுறுப்பாக இயங்கியவளுக்கு, சின்ன வேலைகள் செய்ய கூட இங்கு ஆள் இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை.

மனைவியின் நிலையை பார்த்து கவலை கொண்ட இளவரசன், அவளை மகிழ்விக்க நடன கலைஞர்கள், இசை மீட்டுபவர்கள் என பலவித கலைஞர்களை கொண்டு வந்தான். எதுவுமே சந்தோசம் கொடுக்காமல் போக ஒருநாள் அரண்மனை தோட்டத்தில் அமர்ந்து ஒரு கப்பில் சூடான நீரை அருந்தி கொண்டே, அவளது சிறிய கிராமம் அங்கு அவளை சுற்றி பரந்த குருவிகள் என அந்த நினைவுகளை ஆசை போட்டுக் கொண்டிருந்தாள்.
அப்போது அவள் குடித்து கொண்டிருந்த கப்பில் இருந்த சூடான நீரில் ஏதோ புழுவின் கூடு போல விழுந்தது. அவள் மல்பெரி செடிகளுக்கு அருகில் இருந்ததால் அங்கிருந்து விழுந்திருக்கலாம் என அதை தூக்கி கீழே போட போனாள், அப்போது அந்த கூடு மட்டும் பஞ்சு போல மிருதுவாக இருப்பதை உணர்ந்தாள். அதை எடுத்து பிரித்து நூலாக திரித்தாள். அந்த நூல் அழகான மிருதுவான மின்னும் வடிவில் இருந்ததும் அவளுக்கு அவளது கிராமத்தில் செய்த வேலைகள் நினைவுக்கு வர குஷியானாள்.

உடனடியாக வேலையாட்களை வரவைத்து அங்கிருந்த புழு கூட்டை எடுத்து வெந்நீரில் கொதிக்க வைத்தாள். மின்னும் வகையில் மிருதுவான பஞ்சு கிடைக்கவே, அதை நூலாக திரிக்க இயந்திரத்தை வரவைத்து அதில் அழகான பட்டு நூலை தயாரித்தாள். அதை வைத்து அழகான உடையை தயார் செய்து இளவரசனுக்கு பரிசாக கொடுத்தாள். அதை அவன் உடுத்தியதை பார்த்து மகிழ்ந்தாள். இதை பார்த்த இளவரசனுக்கு மனைவியின் சந்தோசம் எதில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான்.
மனைவிக்காக மல்பெரி தோட்டங்களை வாங்கினான். அதில் இருந்த புழுக்கூட்டை வைத்து நூல் தயாரித்து பட்டு துணிகளை தயார் செய்தார்கள். இவை அனைத்தும் பெரிய பெரிய அரசர்களுக்கு கொடுக்க ஆரம்பிக்க மல்பெரி சில்க் என்றால் சீனா தான் என்று சொல்லுமளவுக்கு பெயர் வாங்கினார்கள். ஆசியாவின் எல்லா இடங்களுக்கும் இந்த பட்டு பரவியது. ஆனால் அதை எப்படி தயாரிக்கிறார்கள் என யாருக்குமே அவர்கள் சொல்லவில்லை. பெரும் ரகசியமாகவே காக்கப்பட்டது.
வருடங்கள் பல ஓடின. அரச ரகசியமாக காக்கப்பட்ட நூலை இங்கிருந்து வெளி ராஜ்ஜியத்திற்கு செல்லும் இளவரசிகளிடம் இதை சத்தியம் வாங்கி காத்தார்கள். மேலும் அவர்களின் உடைகள், பொருட்கள் என அனைத்தும் சோதித்தே அனுப்பி வைக்கப்படுவார்கள். பல வருடங்கள் கழித்து ஒரு இளவரசி இன்னொரு ராஜ்ஜியத்திற்கு செல்லும்போது அவளையும் சோதித்து அனுப்ப அவளும் அந்த நாட்டிற்கு சென்று விட்டாள்.
கொஞ்ச நாட்களில் பட்டு இன்னொரு ராஜ்ஜியத்தில் கிடைக்கிறது என்ற உலகெங்கும் பரவியது. ரகசியம் எப்படி வெளியில் வந்தது என தெரிய வர சீனாவில் இருந்து சென்ற இளவரசி அவளின் நீண்ட கூந்தல் உள்ளே அந்த புழுக்களை வைத்து அங்கிருந்து தனது புது ராஜ்ஜியத்திற்கு எடுத்து செல்று, பட்டு தயாரித்து இருக்கிறாள். அதன் பிறகுதான் எல்லா இடங்களிலும் பட்டு கிடைக்க ஆரம்பித்தது. ரகசியமும் உடைந்தது.
ஆக சுட்டிஸ், இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் சொல்லி மகிழுங்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications