குழந்தை நீதி கதைகள்: ராஜாவின் உணவை திருடி திங்க, என்ன நடந்துச்சுனு தெரியுமா?
சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டீஸ், எப்படி இருக்கீங்க. இன்னைக்கு ஒரு வித்தியாசமான கதையைத்தான் படிக்க போறீங்க குட்டீஸ். உங்களுக்கு இந்த கதையில் வரும் சக்தி கிடைத்தால் என்ன பண்ணுவீங்கன்னு சொல்லுங்க. இப்போ வாங்க படிக்கலாம்.
அந்த ராஜ்யத்தில் அரசர் எப்போது தனது அரண்மனை பின்னால் இருக்கும் தோட்டத்திலே அதிகமாக நேரத்தை செலவிட்டு வந்தார். அவர் செய்யும் செயல்கள் பலருக்கும் வித்தியாசமாக இருக்க, அவரது வேலைக்காரன் அதை கவனித்து கொண்டே இருந்தான். அவருக்கு தினமும் உணவை எடுத்து செல்லும் அவன் அதில் தான் ஏதோ ரகசியமாக இருப்பதை உணர்கிறான்.

ஒருநாள் மூடியிருக்கும் அந்த உணவை திறந்து பார்த்தால் உள்ளே வெள்ளை பாம்பு. இதை ஏன் ராஜா தினமும் சாப்பிடுகிறார் என யோசித்து கொண்டே நாமும் சாப்பிட்டு பார்த்தால் என்ன என்று அதிலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து சாப்பிட்டான். சாப்பிட்டதும் அவனுக்கு ஏதோ வயிறை புரட்டுவது போல உணர, உடனடியாக அரண்மனைக்கு பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்றான்.
அங்கு இருந்த ஒரு குளத்தின் அருகே யாரோ பேசுவது போல கேட்க, அருகில் சென்று பார்த்தான் அந்த வேலைக்காரன். அங்கு மூன்று மீன்கள் இந்த ராஜா நம்மை இங்கிருந்து வெளியில் அனுப்ப மாட்டேன் என்கிறார். தினமும் வந்து பேச மட்டும் செய்கிறார். நமக்கு இங்கு இருப்பது பிடிக்கவில்லை என்று சொன்னாலும் அதை ஏன் கேட்டும் அவர் நம்மை இங்கயே இருக்க சொல்கிறார் என பேசி கொள்ள, இதுதான் அவனுக்கு கேட்டுருக்கிறது. அந்த வெள்ளை பாம்பை சாப்பிட்டதால் தான் நமக்கு விலங்குகள் பேசுவது கேட்கிறது. இதனால் தான் அரசர் அதிகமாக தோட்டத்திலே இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டான்.
அந்த மீன்களை பிடித்து கொண்டு கடலில் விட்டான். அந்த மீன்களும் அவனுக்கு நன்றி சொல்லி கிளம்பியது. தோட்டத்தின் கிளையில் காக்கை குஞ்சிகள் கீழே விழுந்துவிடுவோமோ என பேசிக்கொள்ள அவற்றை பத்திரமாக ஒரு இடத்தில வைத்தான். மேலும் பசிக்குது என்று சொல்ல, அவற்றிக்கு தினமும் உணவும் அளித்து வந்தான்.
சில காலங்கள் கழித்து அரசர் இளவரசிக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார். ஆனால் அவர் வைத்த போட்டியில் யாரும் உயிருடன் திரும்பவில்லை. அப்படி என்ன போட்டி என அதில் நானும் கலந்துகொள்கிறேன் என்று சொல்ல, அரசரோ சிரித்து கொண்டே உயிருடன் வந்தால் சரி என போட்டியை சொன்னார். அவர் ஒரு தங்க மோதிரத்தை தூக்கி கடலில் வீசி இதை தான் எடுத்து வரவேண்டும் என சொன்னார். அவன் சற்றும் யோசிக்காமல் கடலில் குதித்தான்.
அங்கு பெரியதாக மீன்கள் வர அவனை பார்த்ததும், அவனை தூக்கி கொண்டு கடலுக்கு வெளியில் விட்டு கையில் மோதிரத்தையும் கொடுத்தன. இதை பார்த்த அரசர் அதிர்ச்சியாக, அந்த வேலைக்காரனும் திகைத்து நின்றான். அன்றைக்கு நீ எங்களை இங்கு விடவில்லை என்றால் நாங்கள் இவ்வளவு பெரிதாக ஆகி இருக்க மாட்டோம் என அவனுக்கு நன்றி சொல்லி கிளம்பின.

அரசருக்கு அதிரிச்சியாக இருந்தாலும் சொன்ன வாக்கை மீற கூடாது என அவனுக்கே மகளை திருமணம் செய்ய உத்தரவிட்டார். ஆனால் இளவரசியோ, வேலைக்காரனைய மணக்க வேண்டும் என்னால் முடியாது. ஒருவேளை அவனை மணக்க வேண்டுமானால், தங்க மாம்பழத்தை கொண்டு வந்தால் மணக்கிறேன் என சொல்ல , அவனும் பல நாட்களாக அலைந்து திரிந்தான். ஆனால் அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவன் சோகமாக இருந்த காகங்கள் இப்போது நன்றாகவே வளர்ந்தும் இருந்தது.
அவை பறந்து திரிந்து இளவரசி கேட்ட தங்க மாம்பழத்தை வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதை இளவரசிக்கு தந்தான். இளவரசியும் வேலைக்காரனும் அதை சாப்பிட அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அரசர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இப்பொது இருவரும் மகிழ்ச்சியாக வாழ, தோட்டத்தில் இருந்த விலங்குகள் சூப்பர் ஜோடி என சொல்லி மகிழ்ந்தன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications