Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: 3 சித்திர குள்ளர்களும் – ஹெலனாவும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்லையா அதனால ஒரு குட்டி மந்திர கதையோட வந்திருக்கேன். சரி, நம்ம 'ஒன் இந்தியா' தளத்தில் உங்க போட்டோ வரத்துக்கான வாய்ப்பு இந்த கோடை விடுமுறையில் கிடைச்சிருக்கு அதுல மிஸ் பண்ணாம படிச்சி நீங்களும் கலந்துக்கோங்க.. வாங்க கதைக்குள்ள போகலாம்..

ஹெலனா, லிண்டா இரண்டு பேருமே சகோதரிகள் ஆனால் அவர்களது அம்மா வேறு. லிண்டாவின் அம்மா ஹெலெனாவிற்கு சித்தி. அதனாலேயே அவர் ஹெலானவை கொடுமை செய்தார். நல்ல துணிகளை கூட போட்டு விட மாட்டார். அவளை எப்போது அழுக்காக அசிங்கமாக வைத்திருப்பார். அவர் சொல்லும் வேலைகளை செய்யவில்லை என்றால் ஹெலானவை பயங்கரமாக காயப்படுத்துவார்.

Short story for kids in Tamil Three little man

அது ஒரு குளிர் காலம், ஸ்ட்ராபெரி எங்குமே கிடைக்காது என்பதை தெரிந்தும், ஹெலானவை எங்கு கிடைத்தாலும் பரவாயில்லை நீ ஸ்ட்ராபெர்ரி இல்லாமல் வீட்டுக்கு வரக்கூடாது என்று கொட்டும் பணியில் காய்ந்த ரொட்டி துண்டுடன், பேப்பரால் ஆன உடையை அணிவித்து அனுப்பினார். ஹெலனா நடுங்கி கொண்டே வீட்டை விட்டு வெளியே நகர்ந்தாள். கால்களில் நல்ல செருப்பு கூட இல்லை, இருந்தாலும் ஸ்ட்ராபெரியை தேடி அலைந்தாள்.

நீண்ட தூரம் நடந்தாள், அவளுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. தூரத்தில் சிறிய குடிசை இருப்பதை பார்த்த ஹெலனா, அந்த கதவை தட்டினாள். உள்ளே 3 சித்திர குள்ளர்கள் இருந்தார்கள். அவர்களிடம் உதவி கேட்டாள் ஹெலனா. ரொம்ப தூரத்தில் இருந்து வருகிறேன் குளிர் தாங்க முடியவில்லை. கொஞ்சம் இளைப்பாறிவிட்டு கிளம்பிடுவேன் என்றதும் அவர்களும் ஒப்புக்கொண்டு அவளை உள்ளே அழைத்தார்கள். அவள் அணிந்திருந்த பேப்பர் உடையை பார்த்தார்கள்.

உன்னிடம் குளிருக்கு இதமாக போடும் மேலங்கி இல்லையா என்றார்கள். அவள் தனது சித்தி இதைத்தான் கொடுத்தார். மேலும் நான் ஸ்ட்ராபெரி இல்லாமல் சென்றால் மிகவும் காயப்படுத்துவார் என்றும் கூறினாள். முதலில் அவளின் குளிருக்கு நன்றாக ஒரு உடையை கொடுத்தார்கள். பின்னர் தீயை மூட்டி குளிர் காய சொன்னார்கள் அந்த மூவரும். அவளுக்கு உதவியதை பார்த்து, அவள் வைத்திருந்த காய்ந்த ரொட்டியை கொடுத்தாள் ஹெலனா.

4 பெரும் அதை பகிர்ந்து உண்டார்கள். ஹெலனா சரி நான் கிளம்புகிறேன். இப்போது நலமாக இருக்கிறேன் என்றாள். மேலும் அவர்களுக்கு நன்றி கூறி அங்கிருந்து கிளம்பினாள். அப்போது சித்திர குள்ளர் ஒருவன் வந்து ஒரு துடைப்பத்தை கொடுத்து போகும் வழியில் இதை வைத்து துடைத்து செல் என்றான். அவளும் அதை செய்தாள்.

அவ்வளவுதான் வழியெங்கும் அவளுக்கு ஸ்ட்ராபெரி கிடைத்தது. அவள் நடக்க ஒரு சித்திர குள்ளர் அவள் அழகான பெண்ணாக, நன்றாக உடை அணிந்து எப்போது இருக்க வேண்டும் என்றான். அதுபோலவே அவள் மாறினாள். இன்னொரு சித்திர குள்ளன் அவள் பேசும் அன்பான வார்த்தைகளுக்கு தங்கமாக கொட்டும் என்றான். கடைசி சித்திர குள்ளன் அவளுக்கு ஏற்ற அழகிய ராஜா குமரன் அவளை திருமணம் செய்ய வேண்டும் என்றான்.

கொஞ்ச நேரத்தில் வீட்டை அடைந்தாள் ஹெலனா. அவள் அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளே மாறி போய் வந்தது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பேப்பர் உடையில் போனவள் புத்தாடையில் வந்து இருக்கிறாளே என ஹெலானவை கேட்டார். அவளும் நடந்ததை கூறினாள். தனது மகளான லிண்டாவை அனுப்ப முடிவு செய்தார் சித்தி.

ஹெலனா லிண்டாவிடம் கனிவாக நடந்து கொள் என அறிவுரை சொன்னாள். ஹெலனா வாயில் இருந்து தங்கமாக கொட்டியது. சித்திக்கு ஆசை பேராசையை உருவெடுக்க, லிண்டாவை அந்த குளிருக்குள் அனுப்ப முடிவு செய்தார்.

லிண்டாவிடம் நல்ல ராஜ போக உணவை கொடுத்தார் அவளது அம்மா. மேலும் நல்ல குளிருக்கு இதமான உடையை அணுவித்தார். லிண்டா அங்கிருந்து புறப்பட்டு சித்திர குள்ளர்கள் இருப்பிடத்தை அடைந்தாள். அவர்கள் கதவை திறந்ததும் எதுவும் சொல்லாமல் உள்ளே நுழைந்தாள். அவள் கொண்டு போன ராஜ போக உணவை அவள் மட்டுமே தனியாக சாப்பிட்டாள்.

அவள் சரி கிளம்புகிறேன் என்று சித்திர குள்ளர்களிடம் சொல்ல அவர்களில் ஒருவர் துடைப்பத்தை கொடுத்து நீ போகும் வழியை சுத்தம் செய் என்றான். அவளோ அதை வாங்கி கொண்டு என்னால் இதையெல்லாம் செய்ய முடியாது என துடைப்பத்தை தூக்கி எறிந்தாள். இதை பார்த்ததும் சித்திர குள்ளன் ஒருவன், வாழ்நாள் முழுவதும் நீ அழுக்காக, அசிங்கமாக இருப்பாய் என்றான். அடுத்த கணமே அவள் அசிங்கமாக மாறினாள்.

இன்னொரு சித்திர குள்ளன் லிண்டா வாயை திறந்து யாராவது காயப்படுத்தும் மாதிரி பேசினால் அவள் வாயில் இருந்து தவளைகள் விழும் என்றான். இன்னொரு சித்திர குள்ளனோ வாழ்நாள் முழுவதும் அவள் சிரிப்பை மறந்து போக வேண்டும் என்று மந்திரம் போட்டான்.

சிறிது நேரத்தில் வீட்டை அடைந்தாள் லிண்டா. அவளை பார்த்த அம்மா மிகவும் வருத்த பட்டாள். மேலும் இதை பார்த்த ஹெலனா ஓடி வந்து நீ கனிவாக நடக்கவில்லையா என்று கேட்டாள். உடனடியாக கோபப்பட்டு அவளை திட்ட ஆரம்பித்தாள் லிண்டா. அவள் வாயில் இருந்து தவளைகளாக கொட்ட, அவள் யாரையுமே அதன்பிறகு திட்டவில்லை. கொஞ்ச நாட்களில் ஹெலானவை தேடி இளவரசன் வந்தான். அவனையே திருமணம் செய்து கொண்டாள் ஹெலனா. சந்தோசமாக வாழ ஆரம்பித்தாள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+