குழந்தை நீதி கதைகள்: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு, காகமும் அன்னமும் , கனிவுடன் பழகு!
சென்னை: Kids story in Tamil: "பிறருடைய குறைகளை நாம் சுட்டிக்காட்டும்போது நம்முடைய குறைகளை உலகம் அறிய ஆரம்பிக்கிறது." ஹலோ குட்டீஸ், நம்ம எல்லாரும் காக்கா ரொம்ப பிடிக்கும்ல. ஒரு சுட்டிக் காக்கா எப்படி கெட்டி காக்கா ஆச்சு ன்னு ஒரு குட்டி கதை பாப்போம்!
அழகிய கடற்கரை பகுதியில் நிறைய பறவையினங்கள் சந்தோசமாய் வாழ்ந்து வந்தன. அங்கு ஒரு குட்டி காகம் எல்லோரிடமும் கர்வமாய் நடந்துக்கொள்ளும். கேலி செய்யும். அந்த காகம் அது தன்னை மிக பெரிய அறிவாளி எனக்கு தான் மற்றவர்களை விட அனைத்தும் தெரியும் என்ற ஆணவத்தில் திரிந்தது. அங்கு இருக்கும் மற்ற பறவைகைளை வம்புக்கு இழுத்து போட்டி போட்டு தன்னை சிறந்தவனாக காட்டி கொண்டு மிதப்பில் அலைந்தது.
அந்த காகம் ஒருநாள் கடற்கரை ஓரமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு அன்னப்பறவையை கண்டது. அதன் அருகில் சென்று,

"அண்ணா, நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க. ஆனா, பாவம் உங்களால் என்னைப்போல பறக்க முடியாதுல" என கேலி செய்தது.
"தம்பி, நான் இங்கே சிறிது நேரம் ஓய்வேடுக்க வந்திருக்கே. உன்னோட வாக்கு வாதம் பண்ண வரல. போய்விடு என்றது அன்னப்பறவை. அதற்கு காகம் சிரித்த வாறு, "என்னோட போட்டி போட்டு தான் பாருங்களேன்" என்றது.
அன்னப்பறவை சரி என்றது. சற்று கோபமாக,
காகம் சொன்னது , "நாம் இருவரும் கடற்கரையில் சில மைல்கள் பறந்து செல்வோம். யார் முதலில் செல்கிறார்களோ, அவர்கள் சிறந்தவர்கள் என்று, அன்னப்பறவை தலையாட்டி சம்மதம் சொன்னது. இந்த போட்டியை மற்ற பறவைகளும் மிக ஆர்வமாக பார்க்க தயாராகின
இருவரும் பறக்க ஆயத்தமானார்கள். காகம் தான் குண்டாக இருப்பதை மறந்து முதலில் வேகமாக பறந்தது. அன்னமோ அதன் போக்கில் நிதானமாக பறந்தது. சிறிது தூரத்தில் காகத்திற்கு மயக்கம் வருவதுப்போல் திணறியது. அதை கவனித்த அன்னப்பறவை காகத்திடம், "என்ன தம்பி என்னாச்சு" என்றது. அதற்கு காகம் "என்னால் முடியவில்லை அண்ணா, தலை சுற்றுகிறது. கடலில் விழுந்து விடுவேன் என்று பயமாக உள்ளது" என்றது. இரக்கப்பட்ட அன்னப்பறவை, "சரி , என் முதுகில் உட்காரு" நான் கரையில் விடுகிறேன் என்றது. இருவரும் கரைக்கு வந்தன.

"அப்பாடா பிழைச்சேன். நன்றி அண்ணா" என்றது குட்டி காகம். அன்னப்பறவை சிரித்தது. "இனி யாரிடமும் இப்படி நடக்க மாட்டேன் என் தவற்றை உணர்ந்தேன்" என வருந்தி விடைப் பெற்றது அந்த கெட்டி காகம்.
செல்வங்களே! உலகில் தன்னை விட பெரியவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். அதற்காக மற்றவர்களை ஏளனம் செய்தால் ஒருநாள் அதற்கான பலன் கிடைக்கும். அனைவரிடமும் கனிவோடு பழக வேண்டும். கர்வம் எப்போதும் கூடாது. அன்பு விதைப்போம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications