Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முற்கால சென்னை தலைநகர் காஞ்சிபுரம்- குறும்பர்களின் பூர்வீகம்- இது சென்னையின் அதிகாரப்பூர்வ வரலாறு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாகாணத்தின் தலைநகராக முற்காலத்தில் காஞ்சிபுரம் திகழ்ந்தது; குறும்பர் இன மக்களின் பூர்வீக பூமிதான் சென்னை என்கிறது தமிழக அரசின் சென்னை மாவட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ வரலாறு.

Recommended Video

    TamilNadu Day | தமிழ்நாட்டின் பெருமை மிகு புள்ளிவிபரம் *TamilNadu

    தமிழக அரசின் சென்னை மாவட்டம் சென்னையின் வரலாறு தொடர்பாக வெளியிட்டுள்ளதாவது: சென்னை பெருநகரம், முற்காலத்தில் மதராசு பட்டிணம் என்று அழைக்கப்பட்டது. இது தொண்டை மண்டல மாகாணத்தில் கடலூர் பெண்ணாறு நதிக்கும் நெல்லூர் பெண்ணாறு நதிக்குமிடையில் அமைந்துள்ள பகுதியாகும். முற்கால சென்னை மாகாணத்தின் தலைநகர் காஞ்சிபுரம் ஆகும். தொண்டை மண்டலம் கி.மு. 2வது நுற்றாண்டில் காஞ்சிபுர சோழ வம்சத்தை சேர்ந்த தொண்டைமான் இளந்திரையன் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டது. இப்பகுதியானது குறும்பர் இன மக்களின் பூர்வீக வசிப்பிடத்தை உள்ளடக்கியதாக அறியப்படுகிறது.

    Madras Day 2022: TN govts Official History of Chennai

    இளந்திரையனுக்குப் பிறகு இப்பகுதியானது சோழ இளவரசன் இளங்கிள்ளி என்பவரால் ஆட்சி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இதற்குப் பின்னர் வடக்கு பகுதியிலிருந்து ஊடுருவிய ஆந்திர சாதவாகன இனத்தின் இரண்டாம் புளூமாலி ஆதிக்கத்தால் தொண்டை மண்டல சோழ ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த இப்பகுதியை கண்காணிப்பதற்கு தலைமை பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி செய்த பப்பசுவாமி என்பவர் இப்பகுதியை ஆண்ட முதல் பல்லவர் எனவும், இவர் காஞ்சிபுரம் எல்லையைக் கொண்ட சாதவாகனர்களின் தலைமைப் பிரதிநிதி எனவும் கருதப்படுகிறார். சாதவாகனாகளின் கீழ் இயங்கிய பல்லவ பிரதிநிதிகள், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தன்னிச்சை அதிகாரம் படைத்த ஆட்சியாளர்களாக மாறினர்.

    மூன்றாவது நுற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 9ம் நுற்றாண்டின் இறுதிவரை பல்லவர்கள் இப்பகுதியின்மீது ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதன் இடைப்பட்ட காலத்தில் சிறிது காலம் களப்பிரர்கள் ஆதிக்கமும் இருந்தது. மீண்டும் பல்லவர்கள், முதலாம் ஆதித்திய சோழனின் தலைமையிலான சோழ அரசர்களால் தோற்கடிக்கப்பட்டு கி.மு. 879 ஆம் ஆண்டில் சோழர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. கி.மு. 1264ம் ஆண்டில் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஆதிக்கத்தால் சோழர்களின் அதிகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பாண்டியர்களின் அரை நுற்றாண்டு ஆட்சிக்கு பின்னர் டெல்லி சுல்தானின ஆட்சியின் நீட்சியாக பாமின் அரசின் கில்ஜி வம்சத்தில் வந்த வருவாய் பணிகள் உருவாக்கத்தின் முன்னோடியாய் விளங்கிய அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியின்கீழ் இப்பகுதி இருந்தது. 1361ஆம் ஆண்டில், விஜயநகர மன்னரின் குமாரர்களாகிய இரண்டாம் குமார கம்பண்ணா மற்றும் முதலாம் புக்கர் ஆகியோர்களால் இப்பகுதி கைப்பற்றப்பட்டு தொண்டைமண்டலம் விஜயநகர பேரரசின் ஆட்சிக்குட்பட்டது.

    விஜயநகர் ஆட்சியாளர்களால் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளை சுதந்திரமாக ஆள்வதற்கு நாயக் என்றழைக்கப்படும் தலைமைப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். அப்போதைய சென்னை நகரத்தின் பொறுப்பாளராக இருந்த மூன்றாம் வேங்கடா என்பவரின் தலைமையின்கீழ் இயங்கிய தமர்லா வெங்கடாபதி நாயக் ஒரு செல்வாக்குமிக்கத் தலைவராக இருந்தார். 1639ஆம் ஆண்டில் கூவம் ஆற்றுக்கும் எழும்பூர் ஆற்றுக்கும் இடைப்பட்ட கடல் முகத்துவாரத்தை அடையக்கூடிய ஒரு சிறிய நிலப்பகுதி ஆங்கிலேயருக்கு வணிக நோக்கத்திற்காக வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் ஒரு பகுதியில் வணிக நோக்கங்களுக்காக புனித ஜார்ஜ் கோட்டை நிறுவப்பட்டது. வெங்கடபதி நாயக்கரின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்த கடற்கரை பகுதிகளான வடக்கில் பழவேற்காடு முதல் போர்ச்சுக்கீசிய குடியேற்றப்பகுதியான சாந்தோம் வரை புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் அவரது தந்தை சென்னநாயக் நினைவாக சென்னப்பட்டினமாக உருவெடுத்தது.

    மதராசபட்டினம் என்று அழைக்கப்படும் பழைய பகுதி இதன் வடக்கே அமைந்துள்ளது. பின்னர், இதன் இடைப்பட்ட வடக்குப் பகுதிகளில் விரைவாக புதிய குடியேற்றங்கள் மற்றும் வீடுகள் உருவாக்கப்பட்டு மேற்படி இரு நகரங்களும் கிட்டத்தட்ட ஒரே நகரமாக மாறியது. குடியேற்றத்தின் அதிகாரப்பூர்வ மையமாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நியமிக்கப்பட்ட போதிலும், ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் பட்டினம் என்ற பெயரையே ஒருங்கிணைந்த நகரத்திற்கு பயன்படுத்தினர். ஜெனரல் மிர் ஜும்லா தலைமையிலான கோல்கொண்டா படைகள் 1646ல் சென்னையைக் கைப்பற்றியதுடன் சென்னை மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுற்றியுள்ள பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 1687ஆம் ஆண்டில் கோல்கொண்டா வீழ்ச்சிக்குப் பின்னர், இப்பகுதி டெல்லியிலுள்ள முகலாய பேரரசர்களின் ஆட்சியின்கீழ் வந்தது.

    சென்னையில் ஆங்கில நிறுவனம் அமைக்க முகலாய பேரரசர்களால் உரிமம் வழங்கப்பட்டது. பதினேழாம் நுற்றாண்டின் இறுதியில், கவர்னர்களின் ஆட்சியின்கீழ் சென்னை படிப்படியாக வளர்ச்சியடைந்தது. கவர்னர் எலியேல் (1687-92) ஆட்சியின்போது, சென்னை நகரத்தின் மேயர் பதவியும் மற்றும் மாநகராட்சி அமைப்பும் உருவாக்கப்பட்டது மிக முக்கியமான நிகழ்வு ஆகும். 1693ஆம் ஆண்டில், உள்ளூர் நவாப்புகளால் தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் எழும்பூர் நகரங்கள் ஆங்கில நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 1698இல் தாமஸ்பிட் சென்னை ஆளுநராக பொறுப்பேற்று பதினோரு ஆண்டுகள் தொடர்ந்து பதவியிலிருந்து வந்தார். இக்காலகட்டத்தில் வர்த்தகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியதோடு சென்னை செல்வம் கொழிக்கும் நகரமாகவும் விளங்கியது.

    இதே காலகட்டத்தில் முக்கிய நிகழ்வு சென்னை புறநகர் பகுதிகள் தாவுத்கான் தலைமையில் முற்றுகையிடப்பட்டு, ஆங்கிலேயர்களால் கூடுதல் புறநகர்ப்பகுதிகள் கையகப்படுத்தப்பட்டதாகும். 1708ஆம் ஆண்டில் திருவொற்றியூர், வியாசர்பாடி, கத்திவாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் சாத்தாங்காடு ஆகிய பகுதிகள் ஆங்கிலேயருக்கு இலவச பரிசாக வழங்கப்பட்டன. 1735ஆம் ஆண்டில், சிந்தாதிரிபேட்டையும், 1742ஆம் ஆண்டில் வேப்பேரி, பெரம்பூர் மற்றும் பெரியமேடு ஆகிய பகுதிகளும் ஆங்கிலேயருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. நிக்கோலஸ் மோர்ஸ் 1744 முதல் 1746 வரை ஆளுநராக இருந்தார். அவரது காலத்தில் மிக முக்கியமான நிகழ்வாக இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே போர் மூண்டது. தென்னிந்தியாவில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையேயான மேலாதிக்கத்திற்கான தொடர்ச்சியான போராட்டம் இதுவே ஆகும். சென்னை 1744 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது. ஆனால் ஐஎன்-லா-சேப்பலின் சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக சென்னை 1749ல் ஆங்கிலேயரால் மீட்டெடுக்கப்பட்டது.

    ஜார்ஜ் பிகோட் 1755 முதல் 1763 வரையிலான காலப்பகுதிக்கான ஆளுநராக இருந்தார். இக்காலக்கட்டத்தில் கம்பெனியானது வர்த்தக கழகங்கள், தமக்கென தனிமைப்படுத்தப்பட்ட நகரங்கள், கோட்டைகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் சக்தி கொண்ட பரந்த பிராந்தியங்களை கட்டுப்படுத்தும் ஒரு அதிகாரம் கொண்ட வர்த்தக நிறுவனமாக மாறியது. 1767 ஆம் ஆண்டில் சார்லஸ் போச்சியர் ஆளுனரானார். அவரது காலத்தில் ஹைதர் அலி மைசூர் பேரரசை கைப்பற்றினார். மேலும் நிஜாமுடன் கைகோர்த்து சென்னை நகரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1761இல் ஹைதர் அலி மற்றும் கம்பெனிகாரர்களுக்குமிடையே ஓர் உடன்படிக்கை கையெழுத்தானது. இவ்வுடன்படிக்கைபடி இவ்விருவரும் பரஸ்பரம் தாங்கள் கைப்பற்றிய இடங்களை விட்டு கொடுத்தனர். நவாப்புகள் ஒரு பெரிய இராணுவத்தை பராமரிக்க போதிய வருவாய் இல்லாததால், கர்நாடகத்தின் ஆளுமை சென்னை அரசாங்கத்தின் பொறுப்பானது. 1763ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் பெறப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் சென்னை ஜாகீர் என்ற இராணுவ பராமரிப்புத் தளமாக அழைக்கப்பட்டது. 1781ல் லார்ட் மகர்ட்னி சென்னை அரசாங்கத்தின் பொறுப்பேற்றார்.

    இவரது காலத்தில் சென்னை ஒரு முக்கிய கடற்படைத் தளமாக மாறியது. 1790ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் மேடோஸ் ஆளுநராக பதவி ஏற்றார். தென்னிந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி பாதுகாப்பான நிலையை அடைந்தது. இதர வெளிநாட்டு சக்திகளின் அதிகாரங்கள் நீக்குதல் மற்றும் உள்ளுர் பிரதேசத்தின் வரம்புகளை வரன்முறைப்படுத்தல் ஆகியவை அரசாங்கத்திற்கு உறுதிப்பாட்டினை அளித்ததோடு வணிக வளர்ச்சியின் சகாப்தத்திற்கும் வழிவகுத்தன. 1792ஆம் ஆண்டில், ஏற்பட்ட உடன்படிக்கையின்படி முகமது அலி கர்நாடகத்தின் முழு நிர்வாகப் பொறுப்புக்கான ஒப்படைத்து அதற்கு பதிலாக ஓய்வூதியம் பெற்றுக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கிய நிகழ்வு மைசூர் யுத்தம் ஆகும். 1799இல் திப்பு சுல்தான் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து கர்நாடகம் பிரிட்டன் வசமானது.

    இவ்வாறு தென்னிந்தியாவில் ஆங்கிலேயரின் மேலாதிக்கம் நிலைநிறுத்தப்பட்டது. பல நுற்றாண்டுகளாக சிதறிக்கிடந்த கிராமங்கள் மற்றும் அதன் எல்லைகள் பிரிட்டன் வருகைக்குப் பின்னர் ஒரே அலகுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டன. 1939-40ல் இந்த நகரத்தின் நில வடிவமைப்பும் பரப்பளவும் 19ஆம் நுற்றாண்டின் தொடக்கத்திலே ஏற்பட்டது. 1803 முதல் 1827 வரையிலான காலப்பகுதி, நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சியைக் குறிப்பதாக இருந்தது.

    சர் எட்வாட் எலியட் என்பவர் அக்காலத்தில் சென்னையின் முக்கிய ஆளுநராக இருந்தார். அவர் 1814ஆம் ஆண்டில் மன்ரோவை சென்னை மாகாணத்தின் நீதித்துறை ஆணையத்தின் தலைவராக நியமித்தார். நிர்வாகத்தில் பல சீர்த்திருத்தங்கள் இந்நீதி ஆணைக்குழுவினால் செய்யப்பட்டன. சர் தாமஸ் மன்ரோ 1820ஆம் ஆண்டில் ஆளுநராகி, 1827 வரை அப்பதவியில் தொடர்ந்தார். இவர் தன்னால் இயன்ற அளவு கல்வியறிவை பெருக்க முயற்சி மேற்கொண்டார் . இவர் சென்னையில் ஆங்கிலக் கல்வியை தொடங்கினார் . மேலும் இவரால் பொதுக்கல்வியை மேம்படுத்தவும் நேரடியாக கண்காணிக்கவும் ஒரு பொதுக்கல்வி வாரியம் நிறுவப்பட்டது. 19ஆம் நுற்றாண்டின் முதல் பாதியில் சென்னை நகரம் அடைந்த முக்கிய முன்னேற்றம் தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான நிறுவனங்கள் அமைக்கப்பட்டதாகும்.

    20ஆம் நுற்றாண்டில் சென்னை முதல் ஆளுநர் லார்ட் அம்ப்த்தில் (1901-06) என்பவர் ஆவர். 1906-1911 வரை சர் ஆர்த்தர் லா என்பவரும், 1912-1919 வரை லார்ட் பெண்ட்லாண்டு என்பவரும் ஆளுநர் பதவியை வகித்தனர். இந்த காலக்கட்டத்தின் முக்கிய நிகழ்வாக 1906ல் உருவாக்கப்பட்ட சென்னை மின்சார வழங்கல் கழகம் மற்றும் 1907ல் உருவாக்கப்பட்ட இந்தியன் வங்கியும் ஆகும். 1934 மற்றும் 1936ஆம் ஆண்டுகளில் சிறிது காலத்திற்கு சர் எம்.டி.உஸ்மான் சாகிப் மற்றும் சர். கே. வெங்கட்டா ரெட்டி நாயுடு ஆகிய இரண்டு இந்தியர்கள் சென்னை ஆளுநராக நியமிக்கப்பட்டனர். 1937ல் சி.இராஜகோபாலச்சாரி அவர்களின் அமைச்சரவை இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் இருந்தது. நிர்வாகத்தில் ஆளுநர் செல்வாக்கு மற்றும் அதிகாரம் கணிசமாக குறைக்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் 15ல் ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுச் சென்றனர். எனவே ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு செய்ததை விளக்கும் ஒரு நினைவுச்சின்னமாக சென்னை திகழ்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+